தமிழ்நாட்டுக்கு #காவிரியில் இருந்து கர்நாடகா மாநிலம் எவ்வளவு கூடுதல் நீர் வழங்கினாலும் (மழை காலத்தில் )சில சமயங்களில் அரசின் கவனிப்பாரற்ற மெத்தனத்தினால் அதிக நீர் விவசாயத்திற்கும் ஆகாமல் கடலில் போய்க் கலக்கிறது.
மிகக் குறுகிய அகலமுடைய, ஆனால் மிக ஆழமான ஆடு தாண்டும் காவிரியிலிருந்து தமிழகம் வரும் காவிரியானது பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல் அருவியை அடைகிறது. பின் காவிரியானது மேட்டூர் அணையை அடைந்து சிடான்லி நீர்த்தேக்கத்தை உருவாக்குகிறது. இங்கிருந்தே தமிழகக் காவிரிப் பாசனம் தொடங்குகிறது. மேட்டூரிலிருந்து வெளிவரும் காவிரியுடன் பவானி என்னுமிடத்தில் பவானி ஆறு கலக்கிறது. ஈரோடு நகரைக் கடந்து செல்லும் காவிரியுடன் கொடுமுடி அருகேயுள்ள நொய்யல் என்னுமிடத்தில் நொய்யல் ஆறு கலக்கிறது. அமராவதி ஆறானது கரூர் அருகேயுள்ள திருமுக்கூடலூர் என்னுமிடத்தில் காவிரியுடன் கலக்கிறது. கரூர், திருச்சி மாவட்டங்களில் பாயும் காவிரி அகண்டு காணப்படுவதால் அங்குப் பாயும் காவிரியை அகண்ட காவிரி என்பர். முசிறி, குளித்தலை நகரங்களைத் தாண்டிச்செல்லும் காவிரி முக்கொம்பு என்னும் இடத்தில் மேலணையை அடைகிறது. இங்குக் காவிரி இரண்டு கிளைகளாகப் பிரிகிறது. வடகிளை கொள்ளிடம் என்றும் தென்கிளை தொடர்ந்து காவிரி என்றும் அழைக்கப்படுகிறது. வெள்ளக் காலத்தில் பெருகி வரும் நீரானது கொள்ளிடத்தில் திருப்பி விடப்பட்டு காவிரி டெல்டாப்பகுதி பாதுகாக்கப்படுகிறது. கொள்ளிடம் காவிரியின் வெள்ள வடிகாலாக இருப்பதால் பெரும்பாலும் வறண்டே காணப்படும். கொள்ளிடம், காவிரிக்கு நடுவில் திருச்சிக்கு (திருச்சிராப்பள்ளி) அருகே சிரீரங்கம் (திருவரங்கம்) தீவை உருவாக்கிய பின் காவிரியானது கல்லணையை அடைகிறது. கல்லணையிலிருந்து செல்லும் காவிரி பல சிறு கிளைகளாகப் பிரிந்து தமிழகத்தின் நெற்களஞ்சியமான காவிரி டெல்டாவை உருவாக்கி வங்கக்கடலில் கலக்கிறது. காவிரி டெல்டாவில் அரசலாறு, வெண்ணாறு, வெட்டாறு, புதுஆறு, மன்னியாறு ஆகிய பெயர்களால் காவிரியின் சில கிளைகள் அழைக்கப்படுகின்றன. தமிழகத்தின் தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை நாகப்பட்டிணம் மாவட்டங்கள், புதுச்சேரியின் காரைக்கால் பகுதி ஆகியவை காவிரி டெல்டாவை சேர்ந்தவை. தமிழகத்திற்கு மாதம் தோறும் திறக்க வேண்டிய காவிரி நீரின் அளவை காவிரி மேலாண்மை ஆணையம் நிர்ணயம் செய்துள்ளது. முறைப்படி கர்நாடகம் நீர் வழங்குவதைக் கண்காணிக்க பிலி குண்டலு என்ற இடத்தில் நீர் அளவைத் தளமும் அமைக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் தென்மேற்குப் பருவமழை
கொட்டி த்தீர்க்கும் காலங்களில் தமிழகத்திற்கு கூடுதல் நீர் திறக்கப்படுகிறது.. அப்படி இல்லாமல் அவர்கள் அணைகளில் நீர் இருப்புக் குறைந்தால் தமிழகத்திற்கான நீர்த் திறப்பு குறைக்கப்படுகிறது.
கடந்த 2024-25 ஆம் ஆண்டுக்கான நீர் வழங்கும் தவணைக்காலம் கடந்த ஆண்டு ஜூன் ஒன்றில் துவங்கி கடந்த மே மாதம் 21 ல் முடிவடைந்தது.இந்த காலகட்டத்தில் 177.2 டிஎம்சி க்குப் பதிலாக 206 டிஎம்சி நீரை கர்நாடகம் வழங்கி உள்ளது. நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட 129 டிஎம்சி நீர் கூடுதலாகத் தமிழகத்திற்கு கிடைத்துள்ளது. இவ்வாறு கிடைத்த நீரில் பாசனம் மற்றும் குடிநீர் மேட்டூர் அணைக்கான சேமிப்பு போக 65 டிஎம்சி நீர் கொள்ளிடம் கீழணை வழியாகக் கடலுக்கு அனுப்பி வீணடிக்கப்பட்டுவதுதான் பரிதாபம்.. கொள்ளிடம் ஆற்றில் கடலூர் மாவட்டம் ஆதனூர் மயிலாடுதுறை மாவட்டம் குமாரமங்கலம் இடையே 616 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கதவணை கட்டும் பணி 2020ல் துவங்கப்பட்டது. அதற்கான நிலங்களைக் கைகப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள தாமதத்தால் அந்த பணி இழுபறியாக இருக்கிறது என்கிறார்கள். கரூர் மாவட்டம் தஞ்சை புகழூரில் காவிரி ஆற்றின் குறுக்கே 405 கோடி ரூபாயில் கதவணை கட்டும் திட்டமும் இழுபறியாக இருப்பதால் மேட்டூர் அணையில் வெள்ள உபரி நீரை சேலம் மாவட்டம் சரபங்கா வடிநிலத்தில் உள்ள 79 ஏரிகளுக்கு கொண்டு செல்லும் திட்டம் 675 கோடி மதிப்பீட்டில் துவங்கப்பட்ட நிலையில் அதுவும் இன்னும் முடிக்கப்படாமல் உள்ளதாகச் சொல்கிறார்கள். காவிரி குண்டாறு வைகை இணைப்புத் திட்டத்திற்கு 6941 கோடி ரூபாய் தேவைப்படுகிறது. இதுபோன்ற நீர் சேமிப்புப் பணிகள் முடியாததால் தான் காவிரியில் அரிதாகக் கிடைக்கும் நீரின் பெரும்பகுதியை
கடலுக்கு அனுப்பி வீணடிக்கும் அவலம் நடக்கிறது. தேர்தலில் எப்படி ஜெயிப்பது என்று வியூகம் வகுக்கிறார்களே ஒழிய இது மாதிரியான திட்டங்களின் மீது உண்மையான அக்கறையோ அதற்கான ஏற்பாடுகளிலோ இந்த அரசிற்கு எந்த கவனமும் இல்லை என்பது தான் வருத்தத்திற்குரிய விஷயம். மற்றபடி காவிரி நீருக்கு போராடுகிறேன் விவசாயிகளைத் திரட்டுகிறேன் என்று அவ்வப்போது கண் துடைப்புகளைச் செய்துவிட்டு அல்லது காவிரி ஆணைய கலந்ததாலோசனைக் கூட்டங்களில் வெறுமனே தலையைக் காட்டி விட்டு நீண்ட நாள் பலன் தரக்கூடிய இந்தத் திட்டங்களைப் பல்வேறு காரணங்கள் காட்டி இந்த அரசு தள்ளிப் போட்டு வருவது அதன் இயலாமையைத் தான் காட்டுகிறது. இன்றைய அமைச்சர்களுக்கு சேர்த்த சொத்துகளைப் பாதுகாக்கவே நேரம் போதவில்லை. அரசியலில் மத்திய மாநில உறவுகளில் இணக்கம் ஏற்படுத்தி நலன்களைப் பெறுவதை விட வேறு ஏதோ பேசிப் பேசி கிடைப்பதை எல்லாம் தவற விடுகிறார்கள்.

No comments:
Post a Comment