Tuesday, July 22, 2025

ஒரு திரைப்படத்தில் வடிவேலுவின் நகைச்சுவை இங்கே இருந்த எனது கிணரை காணோம் என்று அதிகாரிகளைத் திகைக்க வைப்பார்.




 ஒரு திரைப்படத்தில் வடிவேலுவின் நகைச்சுவை இங்கே இருந்த எனது கிணரை காணோம் என்று அதிகாரிகளைத் திகைக்க வைப்பார்.

அதெல்லாம் வெறும் கேணி, சினிமா நடிப்பு மட்டும் தான்.
இங்கே ஒரு பெரிய குளத்தையே மூடி மறைத்து விட்டார்கள். ஆளும் வர்க்கம் அதிகாரிகளைப் பயன்படுத்தி அந்த குளத்தை மூடிப் பட்டா போட்டு தனியாருக்கு மாற்றி கொடுத்து அதிகமாக கொள்ளையடித்துச் சென்று விட்டார்கள். இது எங்கே என்றால் காவடிச்சிந்து பாடிய புகழ் பெற்றதமிழ்க் கவிஞர் அண்ணாமலை ரெட்டியார் அவர்கள் வாழ்ந்த சென்னிகுளம் என்ற ஊரில்தான் நடந்தேறி உள்ளது. இப்போதுஅந்த ஊர் விவசாயிகள் பொதுமக்கள் யாவரும் இதற்கு எதிராக வருவாய்த் துறை அதிகாரிகளிடம் சென்று போராடிக் கொண்டிருக்கிறார்கள். மிகக் கேவலமாக இருக்கிறது. கரிவலம் வந்த நல்லூர் வருவாய் கிராமம் சென்னி குளம் ஊருக்கு கீழ் பகுதியில் கலிங்கல் மட்டும் உள்ளது கண்மாயை காணவில்லை. வேதனை!

No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்