Friday, May 20, 2016

ADR அறிக்கை

சமீபத்தில் தமிழகத்தில், புதுவையில், கேரளத்தில், மேற்கு வங்கத்தில், அசாமில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் குற்றப் பின்னணி கொண்டோருடைய விவரங்களும், சொத்து குறித்தான விவரங்களும் ADR நிறுவனம் இன்றைக்கு வெளியிட்டுள்ளது.

புதுவையில் 83 சதவீத உறுப்பினர்கள் கோடீஸ்வரர்கள். தமிழகம் 76 சதவீத சட்டமன்ற உறுப்பினர்கள் கோடிக்கணக்கான சொத்துக்களைப் பெற்றுள்ளனர். கேரள மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் அதிகமானோர் வருமானவரி கட்டுபவர்கள்.

குற்றப் பின்னணி கொண்ட சட்டமன்ற உறுப்பினர்கள் கேரளத்திலும், மேற்கு வங்கத்திலும் அதிகம் என்பது குறித்தான விவரங்களைக் கொண்ட அறிக்கை வருமாறு:

Highlights

Delhi, May 20th, 2016: Association for Democratic Reforms (ADR) and National Election Watch (NEW), a nationwide campaign comprising of more than 1200 NGOs and other citizen led organizations, has been working on electoral reforms, improving democracy and governance in India. National Election Watch (NEW) groups in the five states of Tamil Nadu, Kerala, Assam, West Bengal and Puducherry have analyzed the affidavits of 812 MLAs elected in 2016 elections.  This report is based on the analysis of their affidavits.

·      National Election Watch (NEW) groups in the five states of Tamil Nadu, Kerala, Assam, West Bengal and Puducherry have analyzed the affidavits of 812 MLAs elected in the 2016 Assembly elections.  Election Commission of India (ECI) has postponed elections in 2 constituencies in Tamil Nadu (174- Thanjavur and 134-Aravakurichi Assembly Constituencies). Affidavits for 9 MLAs in Tamil Nadu were badly scanned and hence not analyzed at this time.

1 MLA in West Bengal was not analyzed due to illegible affidavit

36% MLAs (294 out of 812 analyzed) have self-declared pending criminal cases as per their affidavits in Tamil Nadu, Kerala, Assam, West Bengal and Puducherry 2016 Assembly Elections.

176 MLAs out of these 812 analyzed have declared serious IPC charges like murder and attempt to murder charges against them.

Kerala has the maximum percentage (62%) of MLAs with declared criminal cases against them.

West Bengal has the maximum percentage (32%) of MLAs with declared serious criminal cases against them.

·         A total of 428 MLAs (i.e. 53% of the total analyzed) are crorepatis.

·         Puducherry has the maximum percentage (83%) of MLAs who are crorepatis, followed by Tamil Nadu with 76% of MLAs who are crorepatis.

·         A total of 186 MLAs (23%) have declared that they have never filed Income Tax Returns (ITR).

·         Kerala has the maximum percentage (60%) of MLAs who have not filed income tax, followed by West Bengal with 20% of MLAs who not filed income tax.

·         49 MLAs have not even given their PAN details.

·         Puducherry has the highest average assets (Rs 13.45 crores) of MLAs followed by Tamil Nadu with average assets of Rs 8.21 crores and Kerala with average assets of Rs 2.82 crores.

·         Out of 812 newly elected MLAs, there only 9% women MLAs. Among the five states, West Bengal has 40 out of 293 (14%) women MLAs, followed by Puducherry with 4 of 30 (13%).

·         There are 19 MLAs with PhD. The maximum number of MLAs (10) with PhD are from West Bengal followed by Tamil Nadu with 5 MLAs who have a PhD.

·         Apart from PhD, there are 480 or 59% MLAs with Graduate or above Degrees.

·         11% of the elected MLAs are 40 and below years of age

·         5 MLAs are above 80 years of age

செண்பகவல்லி அணை இடிப்பு குறித்து விரிவான பதிவு

திருநெல்வேலி மாவட்டம் வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில் மற்றும்  இராஜபாளையம் வரை வேளாண்மை மற்றும் குடிநீருக்கு எதிர்காலத்தில் பயன்படும் திட்டமான செண்பகவல்லி தடுப்பணையை கேரள அரசு திடீரென இடித்துள்ளது. இந்த இடிப்பை சீர் செய்து, இத்திட்டத்தை நிறைவேற்றவேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கையை எழுப்பி வருகின்றனர்.

வாசுதேவநல்லூர் பகுதியில் 15 குளங்கள் சிவகிரி பகுதியில் 33 குளங்கள் வழியாகவும், சங்கரன்கோவில் வட்டத்தில் நேரடி பாசனத்தின் வழியாகவும் ஏறத்தாழ 11,000 ஏக்கர் நிலப்பரப்புக்கு பாசன நீரையும், அப்பகுதிக்கு குடிநீரையும் வழங்கி வந்த செண்பகவல்லி தடுப்பணை சிவகிரி ஜமீன் நிர்வாகத்தால் கட்டப்பட்டது.

இந்த அணையில் ஒரு பகுதியில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்வதற்கு ஒத்துக்கொண்ட  கேரள அரசு அப்பணிக்காக தமிழக அரசிடம் தான் கோரிப் பெற்ற தொகை 5 லட்சத்து 15 ஆயிரத்தை மிக நீண்டகாலத்திற்கு பிறகு திருப்பி அனுப்பிவிட்டது.

செண்பகவல்லி தடுப்பணையை கேரள அரசு செப்பனிடவேண்டும் என்று வலியுறுத்தி சிவகிரி விவசாயிகள் சங்கத்தினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இவ்வழக்கில் கேரள அரசின் எதிர்ப்பை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வெளியான எட்டு வாரகாலத்திற்குள் தடுப்பணை சீரமைக்கும் பணியை முடித்து, நீதிமன்றத்திற்கு கேரள அரசு அறிக்கை அளிக்க வேண்டும் என கடந்த 03.08.2006 இல் தீர்ப்பை வழங்கியது.

இத்தீர்ப்பை கேரள அரசு மதிக்கவில்லை. தமிழக அரசும் இதுகுறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் அதற்கு மாறாக இங்கிருந்த தடுப்பணையின் சுவரை கேரள அரசு இடித்துவிட்டது.

செண்பகத்தோப்பு அல்லது செண்பகவல்லி என்று அழைக்கப்படுகின்ற அணைத் திட்டம் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் திட்டமிடப்பட்டது. மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடரை ஒட்டியுள்ள சிவகிரி, வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில், குருவிகுளம் வட்டாரங்களில் அப்போது கடுமையான வறட்சி. விவசாயம் பாதிக்கப்பட்டு கால்நடைகளும் மடிந்தன. சிவகிரி ஜமீன்தார் மேற்குத் தொடர்ச்சி மலையில் பெய்கின்ற மழைநீரை மேற்கு முகமாக கேரளாவிற்கு செல்வதைத் தடுத்து கிழக்கு முகமாக தமிழகத்தின் இந்த பகுதிகளுக்கு நீரை திருப்பி விட்டார். திருவிதாங்கூர் சமஸ்தானம் ஒப்புதலின்படி வாசுதேவநல்லூரிலிருந்து 13 கிலோ மீட்டர் தூரத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையில் ஒரு தடுப்பணை 1733 ல் அமைக்கப்பட்டது. சிவகிரி ஜமீனைச் சார்ந்த கஸ்தூரி ரங்கன் என்பவர் மேற்பார்வையில் செண்பகவல்லி குறுக்கணை கன்னிமர் மதகு என்ற இடத்தில் கட்டப்பட்டு மதகுகள் அமைக்கப்பட்டன. மேற்கே கன்னிமர் ஆற்றில் ஓடி 30 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள இடுக்கி மாவட்டம் வழியாக முல்லைப் பெரியாறுக்கு சென்று கலந்த நீர் கிழக்கு முகமாக திருப்பப்பட்டது.

இதனால்தான் முல்லைப்பெரியாறின் நதிமூலம் சிவகிரி மலைகள் என்று குறிப்பிடுவதுண்டு. 267 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இந்த அணை, காட்டுப்பகுதியில் கிடைத்த கல், மண்ணைக் கொண்டே நிர்மாணிக்கப்பட்டது.  1603 அடி உயரத்திலும் 928 அடி தூரத்திற்கும் சிமெண்ட் இல்லாமல் சுண்ணாம்பு கற்கலால் அணையின் சுவர் கட்டப்பட்டது. இதன் நீளம் 2531 அடி. அகலம் 10 அடி. உயரம் 15 அடியாகும். இந்த அணையிலிருந்து அக்காலத்தில் விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம், வெம்பக்கோட்டை, தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம், நெல்லை மாவட்டம் வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில், குருவிகுளம் பகுதியிலுள்ள நிலங்கள் பாசன வசதி பெற்றன.

செண்பகவல்லி அணையிலிருந்து நீர்வரத்துகள் தீர்த்தப்பாறை என்ற இடத்திற்கு வந்து அங்கிருந்து தலையணை என்ற இடத்தை அடைந்து இரண்டு பிரிவாக பிரிகின்றது. ஒரு பிரிவு குலசேகரப்பேரி கண்மாய், ராமநாதபுரம் கண்மாய், வாசுதேவநல்லூர் கிழக்கு கண்மாய், நெல்கட்டும்செவல் கண்மாய் வழியாக கரிவலம்வந்தநல்லூர்  கண்மாயை அடைந்து, அங்கிருந்து பருவக்கொடி, காரிசாத்தான், மரத்தோணி பெரியகுளம், திருவேங்கடம் கண்வாய்க்கு வந்து அங்கிருந்து வெம்பக்கோட்டை அணைக்கு தண்ணீர் சேரும்.

இதைப்போலவே தலையணையில் பிரியும் இன்னொரு பிரிவு ராஜசிங்காப்பேரி  கண்மாய், பெரிய உடைப்பேரி  கண்மாய், விஜயரங்கப்பேரி கண்மாய், சிவகிரி கண்மாய், தென்கால் கண்மாய், இரட்டைக்குள கண்மாய் வழியாக செல்கிறது. ராஜசிங்கப்பேரி  கண்மாயிலிருந்து இன்னொரு கால்வாய் பிரிந்து, உள்ளாறுக்கு செல்கின்றது. சிவகிரி கண்மாயிலிருந்து வடகாலில் பிரிந்து கால்வாய், கோணார்குளம், பெரியகுளம், விஸ்வநாதபுரம் பெரிய கண்மாய் வழியாக வெம்பக்கோட்டை அணைக்கு செல்லும். இந்த வெம்பக்கோட்டை அணை தண்ணீர் வைப்பாற்றில் திருப்பப்படுகிறது. திருப்பப்பட்ட தண்ணீர் சாத்தூர், இருக்கன்குடி, எட்டயபுரத்து வடபகுதி, விளாத்திகுளம் வழியாக வேம்பாறு அருகே தெற்கு வைப்பாறு என்ற இடத்தில் வங்கக் கடலில் கலக்கின்றது.

மேற்குத் தொடர்ச்சிமலை, கன்னிமலை ஆறு, அடர்ந்த காட்டுப்பகுதியிலிருந்து 14 கிலோ மீட்டர் சுற்றளவில் உற்பத்தி ஆகிறது. ஆண்டு முழுவதும் நீர் வரத்து ஓடிக்கொண்டே இருக்கும். எனவே இந்த நதியை திருப்பினால் தமிழகத்தின் தென் மாவட்டங்கள் வளம் பெறும். அது மட்டுமல்லாமல் அச்சன்கோவில்-பம்பை-வைப்பாறோடு இணைக்கும்பொழுது செண்பகவல்லி அணையிலிருந்து வரும் தண்ணீரும் அதில் இணைந்து தண்ணீருடைய அளவும் அதிகரிக்கும். இதனால் விவசாயிகள் இரண்டு போகம், மூன்று போகம் என்று சாகுபடி செய்யலாம்.

மேற்குத் தொடர்ச்சி மலையில் பெய்த பெரும் மழையில் 1950ஆம் ஆண்டு வெள்ளப்பெருக்கத்தால் செண்பகவல்லி அணையின் தடுப்புச்சுவர் உடைப்பெடுத்து கிழக்கு நோக்கி பாயவேண்டிய நீர் மேற்கு நோக்கி முல்லைப்பெரியாறில் கலந்துவிட்டது. இந்த உடைப்பை 1956-57 ஆம் ஆண்டுகளில் தமிழக அரசு சீரமைத்தும் 1969ம் ஆண்டில் பெய்த கனமழையில் திரும்பவும் தடுப்புச்சுவர் இடிந்துவிட்டதால் தண்ணீர் வரத்து மறுபடியும் முல்லைப்பெரியாறுக்கே சென்றது. இந்த அணை உடைப்பால் நெல்லை மாவட்டம் அணைப் பாசனப் பகுதிகள் பாதிக்கப்பட்டன. இந்த உடைப்பு செண்பகவல்லி தடுப்பணையை 45 அடிதான் சற்று வலுவாக கட்டவேண்டும். அப்படி அதை கட்டிவிட்டு சீர் செய்தால் திரும்பவும் நீர் நெல்லை, விருதுநகர், தூத்துக்குடி மாவட்டத்துக்கு பயன்படும். அத்தோடு திட்டமிடப்பட்டுள்ள அச்சன்கோவில்-பம்பை-வைப்பாறோடு எதிர்காலத்தில் இணையக்கூடிய சூழலும் ஏற்படும்.

இதை சீர்படுத்த 1984 ல் எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் கேரள அரசோடு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்தப் பேச்சுவார்த்தையின் இறுதியில் அரசு அதிகாரிகள் 28.2.1985 அன்று பார்வையிட்டு இந்த அணையின் உடைப்பை சரி செய்ய சுமார் 11 லட்சம் ரூபாய் செலவாகும் என்று மதிப்பிட்டனர். தமிழக அரசின் பங்குத் தொகையும் உரிய நேரத்தில் கேரள அரசிடம் வழங்கப்பட்டது.  செண்பகவல்லி அணையின் தடுப்புச்சுவர் உடைப்பை இதுவரை சரிசெய்யவில்லை. இதற்கான காரண காரியங்களும் தெரியவில்லை.  1989ம் ஆண்டு திமுக ஆட்சியில் வைகோ, அன்றையப் பொதுப்பணித் துறை அமைச்சர் துரைமுருகன், அன்றைய அமைச்சர் தங்கவேலு, அடியேன், புளியங்குடி பழனிச்சாமி போன்றோர் எல்லாம் மலைக்கு மேலே சென்று ஆய்வு செய்து திட்டத்தை தயாரித்தபோது 1991 ஜனவரியில் திமுக ஆட்சி கலைக்கப்பட்டது. இந்த பிரச்சினைக் குறித்து நாடாளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் பல தடவை குரல் எழுப்பப்பட்டும் எந்தவிதமான மேல் நடவடிக்கைகள் இல்லை. என்னுடைய நதிநீர் இணைப்பு உச்சநீதிமன்ற வழக்கிலும் இது குறித்து எனது மனுவிலும் குறிப்பிட்டிருந்தேன்.

பண்டைய தமிழர்கள் நீர் மேலாண்மை குறித்து ஆதியிலிருந்தே கவனமாக கடமைகளை செய்துவந்தனர். அதனால்தான் இன்றைக்கும் பிரம்மாண்டமாக கல்லணை இருக்கின்றது. வீராணம் ஏரி, மதுரையில் அமைந்த வண்டியூர் தெப்பக்குளம், மீனாட்சியம்மன் கோவிலுள்ள பொற்தாமரைக் குளம் போன்ற பல நீர் நிலைகளை திட்டமிட்டு நம்மை ஆண்ட அரசர்கள் மக்களுக்காக கட்டி அர்ப்பணித்தார்கள். அப்போதெல்லாம் இன்றைக்குள்ள வசதி வாய்ப்புகள் இல்லை. அன்றைக்கும் அவர்களுடைய தொழில்நுட்ப விஞ்ஞான அறிவை பாராட்டவேண்டும். அதைப்போன்றுதான் இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன் சிவகிரி அரசர் தொலைநோக்கு எண்ணத்தோடு செண்பகவல்லித் தோப்பை திருவிதாங்கூர் சமஸ்தானத்திடம் பேசி அமைத்தார்.

இன்றைய ஜனநாயக நாட்டில் 45 ஆண்டுகளுக்கு மேலாக கோரிக்கையாக இருக்கும் செண்பகத்தோப்பு அணையை சீர் செய்ய ஆட்சியாளர்களுக்கு மனம் வரவில்லையே?  இந்த அணையை புதிதாக கட்டவேண்டிய அவசியமும் இல்லை. உடைப்பெடுத்த சுவரை கட்டவேண்டும். மதிப்பீடும் குறைவுதான். பணியும் குறைவுதான். இதை கவனிக்க மனம் வரவில்லையே?

இப்பகுதியை ஒட்டியுள்ள உள்ளாறு சற்று வடக்கே ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் கட்டவேண்டிய அழகர் அணை திட்டங்களும் வெறும் கோரிக்கைகளாகவே உள்ளன. செண்பகவல்லி, உள்ளாறு, அழகர்அணை திட்டம் என்பவை மூன்றும் வானம் பார்த்த கரிசல் பூமியை வளம்கொழிக்கும் நீர் ஆதார திட்டங்கள் ஆகும். இத்தோடு கேரளாவில் பாயும் அச்சன்கோவில்-பம்மை-தமிழகத்தின் வைப்பாறோடு இணைப்பபதால் திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்கள் பயன்பெறும். இந்தப் பிரச்சினைகள் நீண்ட நாட்களாக கிடப்பில் போட்டு இதன் கோப்புகள் யாவும் அரசு அலுவலகங்களில் தூசி படிந்து தூங்குகின்றன. இந்த திட்டங்களுக்கு எப்போது விமோசனம் ஏற்படுமோ என்பது தெரியவில்லை.

செண்பகவல்லி, செண்பகத்தோப்பு என்றால் நறுமணம் கொண்ட வல்லியாகவும், நறுமணம் வீசுகின்ற சோலைவனம் என்றும் பொருள். ஆனால் செண்பகத்தோப்பிலிருந்து வரும் நீர் குறைந்தபட்சம் வானம் பார்த்த வறட்சி பூமியான, கந்தக காட்டிற்கு செண்பகவல்லியின் நறுமணத்தோடு தாகத்தை தீர்க்காதா? என்பது கரிசல் காட்டு விவசாயியின் ஏக்கம். ஆட்சியாளர்கள் புரிந்துகொள்வார்களா?
நீண்ட பயணம், உழைப்புகள் விதைக்கப்படுகின்றன, உழைப்பில் கிடைத்த பலன்களையும் யாரோ பறிக்கின்றனர். அந்த உழைப்பில் பயன்பெற்றவர்கள் வசதியாக மறந்துவிடுகின்றனர். நன்றி, அங்கீகாரம், உண்மை என்பவை மறைக்கப்படுகின்றன என ஒரு முக்கியமான படைப்பாளி இன்றையபொழுது சந்தித்தபோது குறிப்பிட்டிருந்தார். அதற்கேற்ற வகையில் யாரோ சொன்ன சில வரிகளும் கண்ணில் பட்டன.

"என்னிடம் எழுதுவதற்கு இனியொரு சொல் இல்லை.
சொல்வதற்கு இனியொரு வரலாறு இல்லை
பேசுவதற்கு இனியொரு வார்த்தை இல்லை

எல்லாக் காயங்களும் நீங்கள் நன்கு அறிந்தவைதான்
இன்னும் ஏனிப்படியாக இருக்கிறீர்களே
என்கிற வலிமிகு கேள்வி மட்டுமே மிஞ்சியிருக்கிறது"

Wednesday, May 18, 2016

இலங்கைப் பிரச்சினை: தேவை தீவிர சிகிச்சை!

இன்றைக்கு முள்ளிவாய்க்கால் நினைவு தினம். ஏழு ஆண்டுகள் கடந்துவிட்டன. இன்றைய சூழலில் இலங்கையில் தமிழர்களின் நிலைமை என்ன? தனி நாடுதான் சகவாழ்வு இல்லை என தந்தை செல்வா அவர்கள் பிரகடனப்படுத்திய வட்டுக்கோட்டை தீர்மானத்தை வடித்து சரியாக 40 ஆண்டுகள் முடிந்துவிட்டன. இதையெல்லாம் தெளிவுபடுத்துகின்ற வகையில் இன்றைய தினமணியில் (18.5.2016) தலையங்கப்பக்கத்தில் வெளிவந்துள்ள என்னுடைய கட்டுரை வருமாறு:


செண்பகவல்லி தடுப்பணையை கேரள அரசு இடித்துவிட்டது

திருநெல்வேலி மாவட்டம் வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில், இராஜபாளையம் வரை வேளாண்மை மற்றும் குடிநீருக்கு எதிர்காலத்தில் பயன்படும் திட்டமான செண்பகவல்லி தடுப்பணையை கேரள அரசு திடீரென இடித்துள்ளது கண்டனத்துக்குரிய நடவடிக்கையாகும். இத்திட்டம் நிறைவேறவேண்டும் என்று தொடர்ந்து 30 ஆண்டு காலமாக இவ்வட்டார மக்கள் கோரிக்கையை எழுப்பியுள்ளனர். இது குறித்து அப்பகுதியில் நடந்த பொதுக்கூட்டங்களில்கூட விளக்கமாகவும் நான் பேசியதுண்டு.

வாசுதேவநல்லூர் பகுதியில் 15 குளங்கள் சிவகிரி பகுதியில் 33 குளங்கள் வழியாகவும், சங்கரன்கோயில் வட்டத்தில் நேரடி பாசனத்தின் வழியாகவும் ஏறத்தாழ 11,000 ஏக்கர் நிலப்பரப்புக்கு பாசன நீரையும், அப்பகுதிக்கு குடிநீரையும் வழங்கி வந்த செண்பகவல்லி தடுப்பணை சிவகிரி சமீன் அவர்களால் அன்றைய திருவாங்கூர் சமசுத்தானத்தின் ஒப்புதலோடு 1773 இல் கட்டப்பட்ட அணையாகும்.

இந்த அணையில் ஒரு பகுதியில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்வதற்கு ஒத்துக்கொண்ட  கேரள அரசு அப்பணிக்காக தமிழக அரசிடம் தான் கோரிப் பெற்ற தொகையை மிக நீண்டகாலத்திற்கு பிறகு திருப்பி அனுப்பிவிட்டது.

செண்பகவல்லி தடுப்பணையை கேரள அரசு செப்பனிடவேண்டும் என்று வலியுறுத்தி சிவகிரி விவசாயிகள் சங்கத்தினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இவ்வழக்கில் கேரள அரசின் எதிர்ப்பை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வெளியான எட்டு வாரகாலத்திற்குள் தடுப்பணை சீரமைக்கும் பணியை முடித்து, நீதிமன்றத்திற்கு கேரள அரசு அறிக்கை அளிக்க வேண்டும் என கடந்த 03.08.2006 இல் தீர்ப்பு உரைத்தது.

இத்தீர்ப்பை கேரள அரசு மதிக்கவில்லை. தமிழக அரசும் உருப்படியான எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ள வில்லை.

செண்பகவல்லி அணையை சீரமைக்க மறுத்துவந்த கேரள அரசு இப்போது ஒட்டுமொத்த தடுப்பணை சுவரையும் இடித்துவிட்டது. சட்டத்தையும் நீதியையும் துச்சமாக மதித்து கேரள அரசு மேற்கொண்டுள்ள இந்த அடாவடி நடவடிக்கைக்கு தமிழக அரசின் செயலற்ற தன்மை ஒரு முக்கிய காரணமாக அமைகிறது.

கேரளாவின் போக்கு மிகவும் கவலை அளிக்கின்றது. ஏற்கனவே குமரி மாவட்டம் நெய்யாறு, நெல்லை மாவட்டம் அடவி - நயனாறு, உள்ளாறு, அழகர் அணை திட்டம், முல்லைப் பெரியாறு, ஆழியாறு-பரம்பிக்குளம், சிறுவாணி, பம்பாறு என தமிழகத்தின் உரிமைகளான நதிநீர் பிரச்சினைகளில் தொடர்ந்து கேரளா சிக்கலை உருவாக்கிக்கொண்டு வருகிறது. உச்சநீதிமன்றத்தில் வழக்குகளைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் பிடிவாதத்தனமாக இந்தியாவில் சமஷ்டி அமைப்பில் இருக்கிறோம் என்ற பெருந்தன்மைக் கூட இல்லாமல் கேரளாவின் போக்கு கண்டனத்துக்குரியதாகும்.

செண்பகவல்லி பிரச்சினையிலும் 1992 லிருந்து கேரளா பிரச்சினை செய்து வருகின்றது. அப்போதும் கேரளா செண்பகவல்லியில் இருந்த நீர் தடுப்புச்சுவரையும் இடித்தது. ஒரு சொட்டு தண்ணீர் கூட தமிழகத்திற்கு கொடுக்க முடியாது என்று வினோதமான ஒரு சட்டத்தையும் கேரளா சட்டமன்றத்தில் நிறைவேற்றியுள்ளது. இம்மாதிரி எந்த மாநிலத்திலும் நடந்தது இல்லை.  2002ல் இன்றைய கேரள எதிர்க்கட்சித் தலைவர் அச்சுதானந்தம் நெல்லை மாவட்டத்தின் எல்லையிலேயே இருக்கும் அடவி-நயனாவை இடிக்க கடப்பாரை மம்பட்டியுடன் வந்தாரே, இவரும் உலகவாதத்தையும், பொதுவுடைமையைம் பேசுகிறார்.

கேரளாவின் இப்போக்கை மாற்றவேண்டும் என்றால் நாம் அனுப்பும் காய்கறிகள், அரிசி, வைக்கோல், எண்ணெய், மின்சாரம், மணல் போன்ற அத்தியாவசியப் பொருட்களை நிறுத்தவேண்டும்.

செண்பகவல்லி அணை குறித்து விரிவான பதிவை நாளை செய்கின்றேன்.

விவசாயிகளுக்கு நிம்மதி தரும் உச்சநீதிமன்ற தீர்ப்பு

ஹரியானா மாநில விவசாயிகளிடம் இருந்து ஹரியானா மாநில நகர்ப்புற வளர்ச்சித் துறை 2003 முதல் 2005 வரை நிலங்களை கையகப்படுத்தியது. அந்த நிலங்களை முறையாக ஹரியானா அரசு எந்த நோக்கத்திற்கு எடுத்ததோ, அதற்கு பயன்படுத்தாமல் இருந்தது. வீட்டு வசதிக்கு எடுக்கின்ற நிலங்களை முறையாக பயன்படுத்தவேண்டும் என்றும் அவ்வாறு பயன்படுத்தாத நிலங்களை திரும்பவும் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்படவேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பை நீதிபதிகள் அனில் ஆர். தவே, ஏ.கே. கோலியும் தீர்ப்பு வழங்கியுள்ளனர். நாட்டில் சிறப்புப் பொருளாதார மண்டலம் என்று கடந்த 15 ஆண்டுகளில் விவசாயிகளின் விலை நிலங்களை சட்டங்களின் மூலமாக கையகப்படுத்தியது பெரும் விவசாயிகளிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அந்த வகையில் இந்த தீர்ப்பு முழுமையான தீர்வு இல்லை என்றாலும் ஆறுதலான தீர்ப்பு என்று எடுத்துக்கொள்ளலாம்.

Land should be given back if the project does not take off:  SC

நதி நீர் இணைப்பு - Rivers Linking

பாஜகவின் மூத்த தலைவரும், மத்திய முன்னாள் அமைச்சருமான முரளி மனோகர் ஜோஷி, நதி நீர் இணைப்பு சாத்தியமில்லை என்று பொத்தாம்பொதுவாக சொன்னது ஏற்புடையது அல்ல. 40, 45 ஆண்டுகளாக அரசியலில் முக்கியப் புள்ளியாக, இந்திரா காந்தி அறிவித்த அவசர நிலை காலத்தில் அதை எதிர்த்து போராடியவர், முன்னாள் பிரதமர் வி.பி. சிங்கின் கல்லூரி பேராசிரியர், பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய சிறப்புமிக்க பௌதிக பேராசிரியர் என இவ்வளவு அடையாளங்களை கொண்டவர்.

வாஜ்பாயின் கனவு திட்டமான நதிநீர் இணைப்பை சாத்தியமில்லை என்று இவரே மறுதலிப்பது ஏற்றுக்கொள்ள முடியாத வாதமாகும். இந்திரா காந்தி காலத்திலிருந்து பல குழுக்கள் போட்டு சாத்தியமான திட்டம் என்று தீர்மானிக்கப்பட்டது. உலக நாடுகள் பலவற்றிலும், பல்வேறு நாடுகளுக்கு இடையிலேயே கூட நதிநீர் இணைப்பு சாத்தியமான திட்டம்தான் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்றத்தில் 30 ஆண்டுகள் போராடி நதிநீர் இணைப்பு குறித்தான தெளிவான முடிவுகளை எடுத்து அதை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற தீர்ப்பைப் பெற்றவன் என்ற முறையில், திரு. முரளி மனோகர் ஜோஷி அவர்கள் இதை சாத்தியமில்லாத திட்டம் என்று சொன்னது கவலையை தருகின்றது. இப்படியெல்லாம் அனுபவம் உள்ள தலைவர்கள் பேசுவது முறைதானா?

நேற்றைய ஆங்கில இந்து ஏட்டில் (17.05.2016) கென் மற்றும் பட்வா நதிகளை இணைத்து உபரிநீரை பயன்படுத்தும் பிரச்சினையில், இந்த இரண்டு நதிகளும் விந்திய மலையில்தான் உற்பத்தி ஆகி யமுனை நதியில் கலக்கின்றன. இதனால் புலிகள் சரணாலயம் பாதிக்கப்படும் என்ற கருத்து வெளிப்படுத்தப்பட்டது. இன்றைக்கு மரத்வாடா, பண்டேல்கண்ட் பகுதிகள் இன்றைக்கு வறட்சியால் கடுமையாக பாதிக்கப்பட்டு குடிநீருக்கே பிரச்சினையாக உள்ளது. இந்த நதிகளை இணைத்தால் இப்பகுதிகள் வளம்பெறும்.

ஆனால் அதே இந்து ஏட்டில் இன்றைக்கு இந்த நதிகளை இணைத்தால் புலிகள் சரணாலயத்திற்கு பயன்படும். வறட்சியான இந்த பகுதிக்கு தண்ணீர் வரத்து சென்றால் புலிகளுக்கு பயன்படும் என்ற கருத்தை முந்தைய செய்திக்கு பதிலாகவே வெளியிட்டுள்ளது. கென்-பட்வா நதிகளை இணைத்தால் மத்திய பிரதேசம் மற்றும் உத்தரபிரதேசத்தில் 6 லட்சம் ஏக்கர்கள் பயன்பட்டு, குடிநீர் போன்ற பாசன வசதிகளுக்கு பயன்படும். இப்படி நதிநீர் இணைப்பையும், அணைகள் திட்டங்களையும் அறிவித்தாலே எதிர்க்கவேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் சாதக பாதகத்தை அறிந்து சுற்றுச்சூழலை சமன்படுத்தி கருத்துக்களை சொல்லவேண்டும். நீர் ஆதாரம் என்பது எதிர்காலத்தில் தவிர்க்க முடியாதது. அந்த நிலையில் சுற்றுச்சூழலுக்கு பாதகம் இல்லாமல் எந்த அளவு நீர் ஆதாரங்களை, நதிகளை இணைத்து பெருக்க முடியுமோ அந்த அளவு திட்டங்களை கவனமாக கொண்டு சென்றால் சுற்றுச்சூழலையும் பாதுகாத்து நீர் வளத்தையும் பெருக்கலாம். இந்த நிலையில் நதிநீர் இணைப்பு சாத்தியமில்லை, சுற்றுச்சூழல் பாதிப்பு என்றால் எதிர்காலத்தில் வளர்ச்சி என்பது பின் தங்கிவிடும். அப்படி என்றால் நேரு காலத்திலேயே பக்ராநங்கல் அணை வந்திருக்க முடியாது. நதிநீர் இணைப்பு என்பது தவிர்க்க இயலாத பெரும் திட்டம் என்பதை அனைவரும் உணரவேண்டும்.

நதிநீர் இணைப்பு குறித்து உச்சநீதிமன்றத்தில் நான் தொடுத்த வழக்கில் பெற்ற தீர்ப்பைப் பற்றி பிரதமர் அலுவலகத்திலிருந்து சில குறிப்புகள் கேட்கப்பட்டு அனுப்பப்பட்டுள்ளன. விரைவில் இது குறித்து விவாதிக்க பிரதமரையும் சந்திக்கக் கூடிய சூழலும் உள்ளது. ஏற்கனவே 30 ஆண்டுகளுக்கு மேலாக நிலுவில் இருந்த இந்த வழக்கு குறித்து பிரதமர்களாக இருந்த வி.பி. சிங், பி.வி. நரசிம்மராவ், தேவகவுடா ஆகியோரை சந்தித்துள்ளேன். நதிநீர் மற்றும் நீர் ஆதாரத் துறையின் முன்னாள் மத்திய அமைச்சர் ஹரிஷ் ராவத், இன்றைய அமைச்சர் உமாபாரதியையும் சந்தித்து இது குறித்து விவாதித்துள்ளேன். 

#பவானிஆறு - அத்திக்கடவு, கோயம்புத்தூர் மாவட்டம் !!!

  #பவானிஆறு - அத்திக்கடவு, கோயம்புத்தூர் மாவட்டம் !!! Bhavani River - Athikadavu, Coimbatore District !!! #athikkadavu #coimbatore #tri...