Monday, September 30, 2019

#ஐநா_மனித_உரிமை_ஆணையத்தில் (#UNHRC)ஈழத்தமிழர் குறித்தான என்னுடைய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.



————————————————
ஐ.நா. மனித உரிமை ஆணையம் 42வது கூட்டத்தொடர் கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி தொடங்கி கடந்த 27ஆம் தேதி முடிவடைந்தது. இந்த கூட்டத்தொடரில் கலந்து கொள்வதற்காக செல்ல இயலவில்லை. ஆனால், ஜெனீவாவில் உள்ள ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் ஈழத்தமிழர் குறித்தான என்னுடைய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில் குறிப்பிட்ட விடயங்கள் வருமாறு, 

1. இன அழிப்பை செய்த ராஜபக்சேவை சர்வதேச மன்றத்தில் நிறுத்தி தண்டிக்கப்பட வேண்டும். கடந்த காலங்களில் லைபீரியா அதிபர் சார்லஸ் டெயிலரை இனஅழிப்பு குற்றத்திற்க்காக தண்டிக்கப்பட்டு லண்டன் சிறையில் அடைக்கப்பட்டார்.
மேலும், செர்பிய குடியரசுத் தலைவராக இருந்த மிலோசேவிக், அப்பாவி மக்களைக் கொன்று குவித்தார். இதற்காக 2006ஆம் ஆண்டு அவர் சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு நான்கு ஆண்டு காலமாக விசாரணை நடைபெற்று வந்தவேளையில், அவர் சிறையிலேயே இறந்தார். சூடான் அதிபரான ஓமர் அல் பஷீர் கைது செய்யப்பட்டு, அவர் மீது சர்வதேச நீதிமன்ற விசாரணை நடைபெற்று வருகிறது. இப்படி நிறைய உதாரணங்களைச் சொல்ல முடியும்.
முதலில் ராஜபக்சே மீது சர்வதேச சுதந்திரமான புலனாய்வு செய்து அவரை பன்னாட்டு நீதிமன்ற பொறிமுறையில் சுதந்திரமான, நம்பகமான விசாரனை நடத்தி தண்டிக்கப்பட வேண்டும்.
அந்த விசாரனையில் ஈழத்தில் இன அழிப்பு நடந்தது என்று நிரூபிக்கப்படும். அந்த சூழலில் தான் தனிவாழ்வு என்ற தந்தை செல்வாவின் வட்டுக்கோட்டை தீர்மானத்திற்கு மேலும் சர்வதேச அளவில் வலு சேர்க்கும்.
2. சர்வதேச கண்காணிப்பில் ஈழத்தமிழர் விரும்பும் தீர்வான தனி வாழ்வா, சக வாழ்வா, தனி நாடா, சுயநிர்ணய உரிமை, ஒரு நாடு இருதேசங்கள் என்ற பிரச்சனைகள் குறித்து பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்.
இது நடைமுறைக்கு வரவேண்டுமெனில் சர்வதேச அளவில் ஆதரவு தேவை. மேற்குறிப்பிட்ட ராஜபக்சே மீது விசாரனை நடத்தி இனஅழிப்பு ஈழத்தில் நடந்தது என்று நிரூபிக்கப்பட்டால் இந்த பொது வாக்கெடுப்பு நடத்துவது மிகவும் எளிதாகிவிடும். இது தான் அடிப்படையாக செய்ய வேண்டிய பணிகள்.
3. வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள தமிழர்களை பீதியில் ஆழ்த்தும் சிங்கள ராணுவத்தை உடனடியாக திரும்ப பெற வேண்டும்.
4. இறுதிப் போர் 2009 ல் நடந்தபோது கைது செய்யப்பட்டவர்கள், காணாமல் போனவர்களை உடனடியாக விடுவித்து அவருடைய உறவினர்களிடம் அவர்களை சேர்க்க வேண்டும்.
5. தமிழர்களுடைய விவசாய நிலங்களையும், வீடுகளையும் சிங்களர்கள் கபளீகரம் செய்துவிட்டனர். அதை முறையாக தமிழர்களிடம் திரும்பி ஒப்படைக்க வேண்டும்.
6. ஒப்புக்காக ஏமாற்றும் அதிகாரமற்ற மாகாண கவுன்சில்களுக்கு நில நிர்வாகம், நில வருவாய், காவல் துறை, மீன்பிடி நிர்வாகம் என முக்கிய் அதிகாரங்களை வழங்காமல் இருப்பது தமிழர்களை வஞ்சிக்கின்ற நடவடிக்கையாகும். மாகாண கவுன்சில் என்பது ஏற்புடைய வாதமில்லை என்றாலும் நிர்வாகம் என்று ஒப்புக்கு ஏற்றுக்கொண்ட வகையில் இதன் உரிமைகளை பெற வேண்டிய கட்டாயத்தில் ஈழத்தமிழர்கள் உள்ளனர்.
இப்படியான அடிப்படையான விடயங்களை கவனம் செலுத்துவது முக்கியமான கடமை. இது அவசரமும் அவசியமும் ஆகும். சொல்ல வேண்டிய அவசியத்தினால் இதை வலியுறுத்துகிறேன். ஆக்கப்பூர்வமான எண்ணங்களம் நடவடிக்கைகளும் தான் இன்றைக்கு ஈழப்பிரச்சனைகளுக்கான தீர்வை வழங்கும்.
•••••••
 
Before UN Human Rights Council
42nd Regular Session of the UN Human Rights Council
09th – 27th September 2019

                An Appeal
                —————

I, K.S.Radhakrishnan, we call on the UNHRC to urge the Sri Lankan government to fully implement human rights for all citizens of Sri Lanka, and a political solution involving the full participation of the Tamil population, ending the systematic historical discriminatory measures of the Sri Lankan state against the Tamil people.
The Sri Lankan government has conducted a systematic genocide in which more than 1,00,000 Sri Lankan Tamils have been killed. Tamils who have been fighting for their rights are being brutally oppressed by the Sri Lankan government. 
Our party, has been fighting for the rights of the Sri Lankan Tamils for the past 30 years. The Genocide of Sri Lankan Tamils is not something that happened only in 2008-2009 timeframe. The agitation led by our party is itself evidence that the genocide has been happening for a long time. 
Under these circumstances, it is just a necessary to settle the following issues, 
The Sri Lankan Government announced the end of Civil war in 2009. It has been ten years since then. But even today Tamils are fighting for their rights. A structural genocide is happening to the Tamils in Sri Lanka. Every Sri Lankan Tamilian Faces one or other forms of oppression like enforced disappearances, Land grabbing, political imprisonment, living under heavy military surveillance.
The mothers of the Tamils who disappeared during the war have been protesting for close to 1000 days. Even after the end of war, there is a huge presence of Sri Lankan Army on the Tamil Land. 
 

The people have been protesting against these. They are frisked every day in the Military outposts. How can Sri Lankan Tamils live with freedom under such military occupation?
Every arm of the Sri Lankan government, The Army, the Forest Department, the Wild Life Department, the Housing Authority, the Mahaweli Authority, the Archaeological Department have been keen in grabbing Tamil Lands and wiping out the Tamil cultural symbols. The recent protests by the Tamils reveal this trend. The “Ezhuga Tamil” rally in the North and eastern provinces demanded that only International investigation will bring them justice.
There is no difference between the past Rajapaksa government and the current Mithiripal Sirisena government. Giving more time to the Sri Lankan government will only worsen the conditions of the Sri Lankan Tamils and put them in more danger.
The northern provincial council has also passed a resolution that only an international investigation can bring justice to the Sri Lankan Tamils.
I appeal to the Unite Nations Human Rights council to accept the demands of the Tamils and initiate an Independent International investigation on the Sri Lankan Government for the genocide.
The Sri Lankan Army should be withdrawn from the Tamil Homeland. I also request the Indian government at this juncture to respect the voice of 80 Million Tamils to initiate proceedings in the International Criminal Court against the Sri Lankan government for its crimes of Genocide.
 

1. Since the year 1948, ‘Ceylon’ as it was then known gained independence from Britain, Eelam Tamils are under oppression by the successive Sinhala majority governments.
2. From 1956 June Sri Lanka has massacred  Tamils from 1958,1977,
3. In 1983 Black July pogrom more than 3000 Tamils were burnt alive, 
4. In 1985 Valvai massacre was perpetrated
5. In1990-Eastern University massacre took place
6. In,2006-Trincomalee students massacre forming part of historical genocide culminated in the 2009 Mullivaikkal genocide in Vanni, 
7. Sri Lanka Armed Forces have perpetrated genocide against Eelam Tamils in which 146,679 Tamils are still unaccounted. 
8. State Armed Forces occupying the Tamil homeland(North-East provinces) oppressing the Tamils should be withdrawn.
9. Currently there is one member of the Armed Forces for every six civilians in the north. This is a threat to female headed families and orphaned girls. 
10. The armed forces have encroached economic activities of the Tamil peoples via controlling Fishing Industry and indulging in Farming, Tourism (running Holiday resorts, Hotels and Restaurants. This affects the livelihood of the civilians.  
11. Those Tamil youths who were arrested during the civil war period mainly on the basis of confessions obtained through torture and indicted under the two draconian laws, Prevention of Terrorism Act (PTA) and Emergency Regulations (EMR) are still in prisons, they should be released under general amnesty. 
12. Those who were arrested and those who surrendered during the last days of the war at Mullivaikkal should be released immediately.
 

13. Out of a total land area of 18,800 sq.kms. Inhabited by Tamil peoples in the North-East, Armed Forces are occupying 7000 sq.kms. 
14. Further thousands of grazing lands for the cattle of Tamils in Eastern Province have been vested in the Forest department by the President under whose purview the above subject come and Sinhalese from the South are settled there aided and abetted by the Government Special Task Force(STF). 
15. We seek a reliable independent inquiry by International Judges assisted by Legal experts.
16. Further as per the wishes of the Tamils under the supervision of the United Nation a referendum should be held among Eelam Tamils, Diaspora Tamils and Eelam refugees in India who were forcibly displaced from their homeland based on the right to self-determination inherent to every nation.

A special rapporteur should be appointed to monitor the Sri Lankan government in this regard and thus render justice.

Dated at Chennai on 24th September 2019.

Signed. K.S.Radhakrishnan.

#ஈழம்
#இலங்கை
#Eelam
#Srilanka
#UNHRC
#Geneva
#KSRPostings
#KSRadhakrishnan_Postings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
30-09-2019.

தமிழக - கேரள முதல்வர்கள் சந்திப்பால் நதிநீர்ப் பங்கீட்டுப் பிரச்னை

தமிழக - கேரள முதல்வர்கள் சந்திப்பால் நதிநீர்ப் பங்கீட்டுப் பிரச்னை சுமூக உடன்பாட்டுக்கு வருமா?
தமிழக-கேரளத்தின் கூட்டுறவின் அடையாள சின்னங்களாக இருப்பது தான் பரம்பிக்குளம்-ஆழியாறு எனும் பிஏபி திட்டம் மற்றும் சிறுவாணி அணை திட்டங்கள். பல ஆண்டுகளாக இந்த திட்டங்களின் நீர்ப் பங்கீடு கூட்டுறவில் விரிசல் இருந்துவந்த நிலையில் தற்போது மீண்டும் இருமாநிலங்களின் கூட்டுறவைப் புதுப்பிக்கும் முயற்சியாக இருமாநில முதல்வர்கள் பேச்சுவார்த்தை நடந்துள்ளது.
தமிழக பகுதிகளில் பெய்யும் மழை நீரானது மேற்கு நோக்கி கேரளத்துக்குள் சென்று அரபிக் கடலில் கலந்து வீணாகி வந்தது. இதனால், தமிழகம் மற்றும் கேரள மாநிலங்களுக்கு இந்தத் தண்ணீர் கிடைக்காமல் வீணாகி வந்ததை அன்றைய தமிழக முதல்வர் காமராஜர் மற்றும் கேரள முதல்வர் நம்பூதரி பாட் ஆகியோர் மேற்கொண்ட முயற்சியால் பிஏபி திட்டம் உருவாக்கப்பட்டது. பிஏபி திட்டம் உருவாக்கப்பட்ட பிறகு தமிழகத்தில் மூன்று மாவட்டங்களில் 4.25 லட்சம் ஏக்கரும், கேரளத்தில் 20 ஆயிரம் ஏக்கரும் பாசன வசதி பெறுகின்றன. இதுதவிர இரு மாநிலங்களின் குடிநீர்த் திட்டங்களுக்கும், நீர்மின் திட்டங்களுக்கும் பிஏபி திட்டம் உதவியாக உள்ளது.
பரம்பிக்குளம் -ஆழியாறு பாசனத் திட்டம் எனும் பிஏபி திட்டம் மூலம் தமிழகத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்கள் பாசன வசதி பெறுவதுடன் குடிநீர் ஆதாரமாகவும் இத்திட்டம் இருந்து வருகிறது. இதுதவிர கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், சித்தூர் தாலுகாவின் பாசன வசதிக்கும், குடிநீர்த் தேவைகளுக்கும் இந்தத் திட்டம் மூலம் தண்ணீர் வழங்கப்படுகிறது.
தமிழக-கேரளத்தின் கூட்டுறவின் அடையாளமாக கேரளத்தின் ஒப்புதல் மற்றும் ஒத்துழைப்போடு இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது. இந்தத் திட்டம் 1962-ஆம் ஆண்டு நிறைவடைந்து செயல்பாட்டுக்கு வந்தது. பிஏபி திட்டம் வடிவமைத்தபோது, திட்டத்தின் மூலம் 50.5 டிஎம்சி தண்ணீர் கிடைக்கும் என உத்தேசிக்கப்பட்டு, அவ்வாறு கிடைக்கும் தண்ணீரில் தமிழகத்துக்கு 30.5 டிஎம்சியும், கேரளத்துக்கு 19.55 டிஎம்சியும் என பகிர்மானம் செய்து கொள்ள வேண்டும் என ஒப்பந்தம் போடப்பட்டது.
பிஏபி திட்டத்தை வடிவமைத்து நிதி ஒதுக்கி கட்டுமானம் செய்து முடித்து பராமரிப்பு செய்வது என அனைத்தும் தமிழகம் முழுமையாகச் செய்தது. மேலும், பரம்பிக்குளம், தூணக்கடவு, பெருவாரிப்பள்ளம் ஆகிய அணைகள் கட்ட இடத்தை குத்தகைக்குத் தந்து கேரள அரசு ஒத்துழைப்பு வழங்கியது.
இந்தத் திட்டத்தில் கேரளத்தின் பங்கு என்பது இடத்தை குத்தகைக்கு வழங்குவது, தமிழகத்துக்கு கேரளம் வழியாகத் தண்ணீர் கொண்டுச் செல்ல அனுமதிப்பது என்பது ஆகும். இதற்குப் பிரதிபலனாக தமிழகம் சார்பில் ஆண்டுக்கு 19.55 டிஎம்சி தண்ணீர் கேரளத்துக்கு வழங்க வேண்டும். இப்படி இரண்டு மாநிலங்களுக்கும் பயன்படாமல் கடலுக்குச் சென்ற நீரை இரண்டு மாநிலங்களும் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்ட இந்தத் திட்டத்தில் எதிர்பார்க்கப்பட்ட 50.5 டிஎம்சி தண்ணீர் கிடைக்காததால் நாளடைவில் இரு மாநிலங்களுக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டது.
இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டு 57 ஆண்டுகளைக் கடந்த நிலையில் கேரளத்துக்குத் தற்போது வரை ஒப்பந்தப்படி வழங்க வேண்டிய 19.55 டிஎம்சி தண்ணீர் ஒரு சில ஆண்டுகள் தவிர பெரும்பாலான ஆண்டுகள் வழங்கப்பட்டுள்ளன.
ஆனால், பிஏபி திட்டம் துவங்கப்பட்டபோது செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்படி தமிழகத்துக்கு 30.5 டிஎம்சி தண்ணீர் எடுத்துக் கொள்ள உரிமை இருந்தும் தண்ணீர் எடுக்க முடியவில்லை. இதற்குக் காரணம் பிஏபி திட்டத்தில் ஆனைமலையாறு என்ற திட்டத்தை தமிழகம் நிறைவேற்றி அதிலிருந்து 2.5 டிஎம்சி எடுத்துக்கொள்ள வேண்டும். இதுதவிர கீழ்நீராறு அணையில் இருந்து கேரளத்துக்கு வழங்கும் 1.75 டிஎம்சி தண்ணீரைத் தமிழகம் பயன்படுத்திக் கொள்ளவும் உரிமை உள்ளது.
ஆனால், இந்தத் தண்ணீரை தமிழகம் பயன்படுத்த கேரளம் ஒரு நிபந்தனை விதித்தது. அதில் கேரள அரசு இடைமலையாறு அணையைக் கட்டிய பிறகு ஆனைமலையாறு திட்டத்தையும், கீழ்நீராற்றில் இருந்து கேரளத்துக்கு வழங்கும் 1.75 டிஎம்சி தண்ணீரையும் தமிழகம் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதாகும். இதில் இடைமலையாறு அணையைக் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பே கேரள அரசு கட்டி முடித்துவிட்ட நிலையில் தற்போது வரை அணையை முழுமையாக கட்டி முடிக்கவில்லை என்று கூறி தாமதித்து வருகிறது.
எனவே, ஆனைமலையாறு அணையைக் கட்டக்கூடாது என கேரளம் தெரிவித்து வருகிறது. இதனால், தற்போதுவரை தமிழகத்துக்கு நேரடியாக 4.25 டிஎம்சி தண்ணீர் கிடைக்காமல் உள்ளது. இதுதவிர பரம்பிக்குளம், தூணக்கடவு, பெருவாரிப்பள்ளம் அணை நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் எதிர்பார்த்த மழைப்பொழிவைவிட குறைவான மழைப் பொழிவே கிடைக்கிறது. இதன் மூலமும் சுமார் 2 டி.எம்.சி வரை தமிழகத்துக்கு நீர் இழப்பு ஏற்படுகிறது. இதனால் பிஏபி பாசன பகுதிகள் வறட்சியிலேயே இருந்து வருகின்றன.
பிஏபி திட்டத்தில் ஆனைமலையாறு திட்டத்தை நிறைவேற்றவிடாமலும், கீழ்நீராற்றில் கூடுதலாக 1.75 டிஎம்சி தண்ணீர் எடுக்கவிடாமலும், பரம்பிக்குளம், பெருவாரிப்பள்ளம், தூணக்கடவு அணைகளில் பணியாற்றும் தமிழக பொதுப் பணித்துறை அதிகாரிகளுக்கு கேரள அதிகாரிகள் இடையூறு ஏற்படுத்தி வருகின்றனர். இதனால், இரு மாநிலங்களுக்கு இடையே கூட்டுறவில் விரிசல் ஏற்பட்டு வருகிறது.
பிஏபி திட்டம் தொடங்கும் இடமான நீராற்றில் மழைக் காலங்களில் கிடைக்கும் நீரில் சுரங்கப்பாதை மூலம் அதிகபட்சமாக 3,000 கன அடி வரை மட்டுமே தமிழகம் பயன்படுத்த முடியும். இதனால், மழைக் காலங்களில் கிடைக்கும் கூடுதல் தண்ணீர் கடலில் கலந்து வருகிறது. இந்த நீரை தமிழகம் பயன்படுத்திக் கொள்ள நல்லாறு என்ற அணைத் திட்டத்தை செயல்படுத்த தமிழக விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதற்கு கேரளம் முட்டுக்கட்டையாக உள்ளது.
தமிழகத்தில் கோவை மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக இருப்பது சிறுவாணி அணை. இந்தத் திட்டமும் இரு மாநிலங்களின் கூட்டுறவால் உருவாக்கப்பட்டது ஆகும். இந்தத் திட்டத்திலும் அவ்வப்போது கேரள அதிகாரிகள் இடையூறு செய்து பாதிப்பை ஏற்படுத்துகின்றனர்.
அமராவதி அணையின் நீராதாரமான ஆற்றில் தடுப்பணை, சிறுவாணி நீராதாரத்தில் தடுப்பணை கட்டுவது என கேரளம் செயல்பட்டு வருவதால் நீர்ப் பங்கீட்டில் விரிசல் ஏற்பட்டு வருகிறது.
தமிழக-கேரள மக்கள் சகோதரர்களாக இருந்துவரும் நிலையில் கேரளத்தில் உள்ள சில அரசியல் கட்சியினர், அதிகாரிகளால் சிலரால் மட்டும் நீர்ப்பங்கீட்டு பிரச்னை ஏற்படுவதாக கூறப்படுகிறது. பிஏபி திட்டம் துவங்கப்பட்டபோது, இரு மாநிலங்களுக்கு இடையே இருந்த கூட்டுறவு நாளடைவில் விரிசல் அடைந்து வந்த நிலையில் இருமாநில அரசுகள் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றபோதும், பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கவில்லை.
இந்தப் பிரச்னைகளை குறித்து இரு மாநில முதல்வர்கள், முக்கிய அமைச்சர்கள் சந்திப்பு கூட்டம் கடந்த 25-ஆம் தேதி கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. அதில் தமிழ்நாடு நதிநீர் சிக்கல்களில் இருமாநில முதல்வர்களும் என்ன பேசினார்களோ?
இந்த சந்திப்பில் இரு தரப்பிலும் தலா 5 பேர் இணைந்து 10 பேர் சேர்ந்த குழு அமைந்துள்ளது. சரி தான். ஆனால் பேசப்பட்டது என்ன? வெள்ளை அறிக்கையை தமிழக அரசு வெளியிட்டால் நல்லது. 15 ஆண்டுகளுக்குப் பிறகு இரு மாநில முதல்வர்களும் சந்தித்து பேசியுள்ளனர்.
கீழே சொல்லப்பட்ட நதிநீர்ப் பிரச்சனைகள் பேசப்பட்டதா?
ஆழியாறு-பரம்பிக்குளம் நிறைவேற்றி 60 ஆண்டுகளுக்கு மேலாக இன்னமும் சிக்கல்கள் உள்ளன. பாண்டியாறு-புன்னம்பழா, ஆனைமலையாறு மற்றும் நல்லாறு திட்டம் போன்ற திட்டங்களும் சிக்கல்களில் உள்ளன.
கடந்த 10 ஆண்டுகளாக இந்த நெய்யாறு அணையை கேரள அரசு மூடிவிட்டது. தக்கலை, திரிவிதாங்கோடு, விளவங்கோடு முதலான பகுதிகள் பச்சை பசேலென்று திருவணந்தபுரம் செல்லும் சாலையின் இருபக்கமும் வாழையும், நெற்பயிர்களும் இருக்கும். முதல் ஐந்தாண்டு திட்டத்தில் திட்டமிடப்பட்டு காமராஜர் தமிழகத்தின் முதல்வரக இருந்தபோது கேரள முதல்வர் சங்கரோடு இணைந்து நெய்யாறு அணை திறப்பு விழா குமரி மாவட்டத்தில் நடந்தது. இந்த அணையின் கட்டுமாண செலவினை தமிழக அரசே அப்போது ஏற்றது. மீண்டும் தமிழக அரசிடம் பணம் கேட்டு நெருக்கடி கொடுத்து இந்த அணையை கேரள அரசு மூடிவிட்டது. உச்சநீதிமன்றத்திலும் இது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது.
இதற்கு சற்று வடக்கே நெல்லை மாவட்டத்தில் கொடுமுடியாற்று பிரச்சனையிலும் கேரளா வம்பு பிடிக்கின்றது. 1989ல் செங்கோட்டை அருகே கட்டப்பட்ட அடவி நாயினார் அணைக்கும் நீர்வரத்தை தடுக்கிறது கேரளம். இந்த அணையை இடிப்பதற்காக 2002ல் அன்றைக்கு எதிர்கட்சித் தலைவராக இருந்த அச்சுதானந்தன் கடப்பாரை, மம்பட்டியுடன் வந்தது ரணமான செய்தியாகும்.
இதற்கடுத்து கோதையாறு, கீரியாறு திட்டமும் நெல்லை மாவட்டத்தில் 40, 50 ஆண்டுகளாக பேசப்பட்டு இன்னும் நடைமுறைக்கு வரவில்லை.
அச்சன்கோவில் - பம்பை – தமிழகத்தின் வைப்பாறோடு இணைப்பை மத்திய அரசு விரும்பியும் அதை நடைமுறைபடுத்த இயலவில்லை.
உள்ளாறு திட்டம் குறித்து அறிய 1997ல் தமிழக அரசு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கியும் மேற்கொண்டு இந்த பிரச்சனையில் எந்த முன்னேற்றமும் இல்லை.
செண்பகவல்லி அணை பாதிப்புகள் ஏற்பட்டு இடிக்கப்பட்டு வழக்குமன்றம் வரை சென்றும் பிரச்சனைகள் தீர்ந்தபாடில்லை.
இவையெல்லாம் நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டம் சார்ந்த நீராதாரப் பிரச்சனைகள் ஆகும்.
அடுத்து விருதுநகர் மாவட்டத்தில் அழகர் அணை திட்டம், ஸ்ரீவில்லிப்புத்தூர், ராஜபாளையம், சிவகாசி, சாத்தூர் போன்ற பகுதிகளுக்கான நீராதார பிரச்சனைகளிலும் கேரளா தடுக்கின்றது.
முல்லை, பெரியாரை பற்றி அனைவரும் அறிந்த சிக்கலாகும். இந்த முல்லை பெரியாறு நதிமூலம் நம் மாவட்டத்தில் உள்ள சிவகிரி அருகேயுள்ள செண்பகவல்லி திட்டம் தான்.
மதுரை, திண்டுக்கல் மாவட்டம் பயன்பெறும் ஆலடி அணை, மஞ்சளாறு, மாம்பழ ஆறு போன்றவற்றிலும் கேரளா தமிழகத்திற்கு எதிராக பிடிவாத போக்கை  கொண்டுள்ளது.
கொங்கு மண்டலத்தில் பரம்பிக்குளம் – ஆழியாறு, பாண்டியாறு – புன்னம்புழா, சிறுவாணி, பம்பாறு, பவாணி, அமராவதி என அனைத்திலும் கேரளா தடுப்பணைகளை கட்டிக்கொண்டே வருகின்றது.
நீலகிரி மாவட்டத்தில் மேயாறிலும் பிரச்சனைகள். எனவே குமரி முனையில் இருந்து நீலகிரி தொட்டபெட்டா வரை கேரளத்தின் பிடிவாத போக்கு.
இவையெல்லாம் கேரளத்துடன் உள்ள சிக்கல்கள் குறித்தான எனது பதிவுகள்.
http://ksradhakrishnan-ksrblogs.blogspot.com/2017/02/blog-post_45.html
http://ksradhakrishnan-ksrblogs.blogspot.com/2016/09/blog-post_50.html
http://ksradhakrishnan-ksrblogs.blogspot.com/2017/06/blog-post_87.html
 
#KSRadhakrishnanpostings
#KSRpostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
30-09-2019. https://tamil.indianexpress.com/opinion/tamil-nadu-kerala-chief-ministers-meeting-water-sharing/

கிரா


கடந்த 2009ல்....
#கிரா

மெய்யான நேர்மையான வரலாறு வேண்டும்.

மெய்யான நேர்மையான வரலாறு வேண்டுமென்ற என் பதிவை படித்துவிட்டு சஞ்ஜீவ் சன்யால் என்ன பேசினார், நீங்கள் அதை மறுத்ததும் தெளிவாக இருந்தது. சஞ்ஜீவின் பேச்சை குறிப்பிட வேண்டுமென்று நண்பர்கள் கேட்டனர். அவருடைய பேச்சும், என்னுடைய பதிவும் வருமாறு.
சுதந்திரப் போராட்ட வரலாற்றை திருத்தியமைக்க வேண்டும்
இந்திய சுதந்திரப் போராட்டத்தின் வரலாற்றை திருத்தியமைத்து புதுப்பிக்க வேண்டிய உச்சகட்ட தருணம் இது என்று தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன் கூறினார்.
சுதந்திரப் போராட்ட வரலாறு - மீள்பார்வை என்ற தலைப்பிலான ஆங்கில கலந்துரையாடல் அமர்வு சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சென்னை இண்டர்நேஷனல் சென்டர் சார்பில் நடைபெற்ற அந்த நிகழ்வில் பிரதமர் அலுவலகப் பொருளாதார ஆலோசகரும், பொருளாதார நிபுணரும், வரலாற்று ஆய்வாளருமான சஞ்சீவ் சன்யால் பங்கேற்றார். இந் நிகழ்ச்சியில் தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன் பேசியதாவது:
தேசத்தின் விடுதலை வரலாற்றில் லட்சக்கணக்கான வீரர்களின் தன்னலமற்ற தியாகங்கள் நீக்கமற நிறைந்திருக்கின்றன. இன்றளவும் அந்த நாயகர்கள் பலரை நாம் நினைவில் வைத்து போற்றுகிறோம் என்பது மகிழ்ச்சிக்குரிய விஷயம்.
அதேவேளையில், தங்களது வாழ்வையே நாட்டுக்காக அர்ப்பணித்த எத்தனையோ வீரர்களும், அவர்தம் தியாகங்களும் சமகாலத் தலைமுறையினருக்குக்  கொண்டு சேர்க்கப்படவில்லை என்பது வருத்தத்துக்குரிய உண்மை. அதிலும், குறிப்பாக  தென்னிந்திய மாநிலங்கள் சுதந்திரப் போராட்டத்துக்கு அளித்த அளப்பரிய பங்கு வரலாற்றுப் பக்கங்களில் பதிவாகவில்லை. அவை மறைக்கப்பட்டனவா அல்லது வரலாறு எழுதியவர்கள் தென்னிந்தியப் பங்களிப்பை பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லையா என்று தெரியவில்லை.
 பிரிட்டன் ஆட்சியாளர்களுக்கு அடிபணிய மறுத்து இந்திய கடற்படையினர் 1946-இல் பம்பாய் கலகம் நடத்தியதற்கு ஏறத்தாழ 140 ஆண்டுகளுக்கு முன்பே வேலூரில் சிப்பாய்ப் புரட்சி அரங்கேறிவிட்டது. சொல்லப்போனால், 1806-ஆம் ஆண்டில் நடைபெற்ற அந்தப் புரட்சிதான் தேசம் முழுவதும் பல்வேறு போராட்டங்களுக்கு தொடக்கப் புள்ளியாக அமைந்தது. அப்போது பிரிட்டனின் ராணுவ வலிமையையும் மீறி வேலூர் கோட்டையைக் கைப்பற்றி இந்தியப் புரட்சியாளர்கள், சுதந்திரத்துக்கான நம்பிக்கை விதையை விதைத்தனர். 1857-இல் நடந்த சிப்பாய் கலகம்தான் முன்னிலைப்படுத்தப்படுகிறதே தவிர, வேலூர் புரட்சியைப் பற்றி தமிழகம் மட்டும்தான் பேசிக் கொண்டிருக்கிறது.
அதுபோலவே 1800-ஆம் ஆண்டிலேயே கோயம்புத்தூர் பிரிட்டிஷ் கோட்டையைக் கைப்பற்ற போராட்டக்காரர்கள் முயற்சி மேற்கொண்டனர். அதற்கு பழநி சதி வழக்கு என்று பெயர். இந்தச் சாதனை நிகழ்வு சரித்திரத்தில் இடம்பெறவில்லை.
அதுபோலவே, ஆர்யா என்று அறியப்படும் பாஷ்யம் என்ற ஆகச்சிறந்த தேசபக்தனையும், புரட்சியாளனையும் வரலாறு வசமாக்கிக் கொள்ளத் தவறிவிட்டது. சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் இந்திய தேசியக் கொடியை ஏற்ற வேண்டும் என்ற வேள்வி அவரது மனதில் கனலாக எரிந்து கொண்டிருந்தது. 1932-ஆம் ஆண்டு ஜனவரி 25-ஆம் தேதியன்று பிரிட்டிஷ் படையினரின் கடுமையான கண்காணிப்பையும் மீறி அந்த கனவை நினைவாக்கினார் ஆர்யா பாஷ்யம். அடுத்த நாள் காலை கோட்டையில் இந்தியக் கொடி பட்டொளி வீசிப் பறப்பதைப் பார்த்த பிரிட்டன் ஆட்சியாளர்கள் அடைந்த அதிர்ச்சி, வார்த்தைகளால் விவரிக்க முடியாதது.
அத்தகைய துணிச்சல் மிக்க வீரரின் பெயரைக்கூட சமகாலத்தினர் அறியாத நிலை உருவாகியிருப்பது வேதனைக்குரியது. விடுதலைக் களத்தில், இவ்வாறு வ.வே.சு. ஐயர், வாஞ்சிநாதன், ஆர்யா உள்ளிட்ட தென்னிந்தியப் புரட்சியாளர்களின் பங்களிப்பைப் பதிவு செய்யாமல் புறந்தள்ளியதால்தானோ என்னவோ, இங்கு தேசியவாத உணர்வு குறைவாக இருக்கிறது என்றார் தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன்.
முன்னதாக, கலந்துரையாடல் அமர்வில் சஞ்சீவ் சன்யால் பேசியதாவது:
இந்திய விடுதலைப் போராட்டத்துக்கு நீண்ட, நெடிய வரலாறு உள்ளது. அஹிம்சை போராட்டமாகவும், ஆயுதமேந்திய போராட்டமாகவும் அதனை இரு வேறாக வரலாறு வரையறுத்து வைத்திருக்கிறது.  அதில், பழங்குடியினரின் போராட்டங்கள், வடகிழக்கு மாகாணங்களில் முன்னெடுக்கப்பட்ட சுதந்திர வேள்விகள் என பல விஷயங்கள் வரலாற்றுக்கு வந்து சேரவில்லை.
அந்த வரிசையில் சாவர்க்கர் முன்னெடுத்த போராட்டங்களும், அவர் வழி தொட்டு பல புரட்சியாளர்கள் செய்த தியாகங்களும் சரி வரப் பதிவாகவில்லை. சொல்லப்போனால், சாவர்க்கர் எழுதிய இந்திய சுதந்திரப் போராட்டம் - 1857 என்ற புத்தகம்தான் பல புரட்சியாளர்களையே உருவாக்கியது. ஆயுதமேந்திய போராட்டத்தின் வேத நூலாகவும் அது விளங்குகிறது. அத்தகைய புகழ்மிக்க சாவர்க்கரை சமகாலத் தலைமுறையினருக்கு அறிமுகம் செய்ய வேண்டிய நிலை இருப்பது கவலைக்குரிய விஷயம்.
ராஷ்பிகாரி போஸ், சுபாஷ் சந்திரபோஸ், சச்சீந்திரநாத் சன்யால் போன்ற வங்கத்தின் புரட்சியாளர்களின் பங்களிப்பு போதிய கவனம் பெறவில்லை. வரலாற்றுப் பாடநூல்களில் காந்தியடிகளின் வழியொற்றிப் பயணித்தவர்கள்தான் இடம் பெறுகிறார்களே தவிர, மாற்று வழியான புரட்சிப் பாதையில் பயணித்தவர்கள் இடம் பெறவில்லை.
வ.வே.சு.ஐயர், பாரதி, அரவிந்தர், சாவர்க்கர் அனைவரும் ஒருவருக்கு ஒருவர் நன்கு அறிமுகமானவர்கள் என்பது நம்மில் பலருக்குத் தெரியாது. விடுதலை போராட்டத்தில் அவர்கள் பல தருணங்களில் ஒருங்கிணைந்து செயல்பட்டிருக்கிறார்கள். பாரதியின் கருத்துகளை சற்று கூர்ந்து கவனித்தால், அதில் சாவர்க்கரும், அரவிந்தரும், வ.வே.சு.ஐயரும் வந்து போவதை உணர முடியும். பல்வேறு காலகட்டங்களில் புரட்சியாளர்கள் நூலிழையில் வெற்றி நழுவவிட்டனர். சந்தர்ப்பம் அவர்களுக்கு சாதகமாக இருக்கவில்லை. ஒருவேளை அவர்கள் வெற்றி பெற்றிருந்தால் இந்திய வரலாறு வேறு விதமாக எழுதப்பட்டிருக்கும். விடுதலைப் போராட்டத்தில் புரட்சியாளர்களின் பங்கையும் வரலாற்றில் பதிவு செய்ய வேண்டும். திருத்தி எழுத வேண்டும் என்றார் சஞ்சீவ் சன்யால்.
-தினமணி
மெய்யான நேர்மையான வரலாறு வேண்டும்.
-------------------------
நேற்று (27-09-2019) சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் Madras School of Economics அரங்கத்தில் Revolutionaries during Independence Struggle in India (இந்திய விடுதலைப் போராட்டத்தில் புரட்சியாளர்கள்) என்ற தலைப்பில் பொருளாதார ஆலோசகரான சஞ்ஜீவ் சன்யால் பேசினார். 
அவரது உரையில் வடபுலத்தை சார்ந்த விடுதலை போராட்ட தலைவர்களை மட்டுமே குறிப்பிட்டு பேசினார். தமிழகத்தை சார்ந்த வா.வே.சு.ஐயர் பெயரை மட்டும் 2, 3 முறை உச்சரித்தார். மற்ற புரட்சியாளர்களான பூலித்தேவர், ஒண்டிவீரன், முத்துராமலிங்க சேதுபதி மன்னர், தஞ்சை மன்னன் அமரசிம்மன், காஞ்சி சங்கராச்சாரியார் பாராட்டிய திப்பு சுல்தான், வீரபாண்டிய கட்டபொம்மன், ஊமைத்துரை, வேலு நாச்சியார், சுந்தரலிங்கம்,  மருது சகோதரர்கள், தீரன் சின்னமலை, வெள்ளையனையே தூக்கில் போட்ட உடுமலைப்பேட்டை தளி எட்டியப்ப நாயக்கர், மூக்கன் ஆசாரி, சுப்பிரமணிய பாரதியார், சுப்பிரமணிய சிவா, வாஞ்சிநாதன், செண்பகராமன், தில்லையாடி வள்ளியம்மை, மாடசாமி, பாஷ்யம் அய்யங்கார், எம்.பி.டி.ஆச்சார்யா, விருப்பாச்சி கோபால் நாயக்கர், வேலுத்தம்பி தளவாய் மருதநாயகம், வீரன் அழகு முத்துகோன் போன்ற பல ஆளுமைகள் சுதந்திரத்துக்காக சர்வபரி தியாககங்கள் செய்தார்கள். இதுகுறித்து அந்த விழாவிலேயே கடுமையாக ஆட்சேபித்து அந்த ஆளுமைகளின் பெயர்களையும் பதிவு செய்தேன். 
அதுமட்டுமா, மீரட் கலவரத்திற்கு முன்னரே வேலூர் புரட்சி நடந்தது. அதற்குப்பின், திண்டுக்கல், பழனி புரட்சி, தூத்துக்குடி சதி வழக்கு, திருநெல்வேலி சதி வழக்கு, ஸ்ரீவில்லிபுத்தூர் - சாத்தூர் - விருதுநகர் சதி வழக்கு, குலசேகரப்பட்டினம் சதி வழக்கு, தேவக்கோட்டை சதி வழக்கு, திருவாடானை சதி வழக்கு என இப்படி பல வரலாற்று நிகழ்வுகளும் விடுதலைப் போராட்டத்தில் நடந்தேறியது. நேத்தாஜியின் ஐஎன்எல்லும் தமிழகத்தை சார்ந்தவரகள் அதிகம் இடம் பெற்றனர்.இவையெல்லாம் மறைக்கப்படுகிறது. சிலர் மறந்தும் விட்டனர் என்பது தான் வேதனையான விடயம். தமிழகம் எல்லா காலக்கட்டங்களிலும் தன்னுடைய பங்களிப்பை இதய சுத்தியோடு ஒவ்வொரு பிரச்சனையிலும் வழங்கியுள்ளதை மறுக்கப்படும்போது, ரௌத்திரம் எழத்தான் செய்கிறது. 
வரலாறு என்பது தெற்கிலிருந்துதான் எழுதப்பட வேண்டும். லெமூரியா கண்டம் முதல் தமிழகத்தில் இருந்து தான் எழுத வேண்டுமென்று எழுதி வருகிறேன். வரலாற்றில் நேர்மையான பதிவுகள் இருக்க வேண்டும் என்று உரைத்தேன். இதே கருத்தை தினமணி ஆசிரியரும் எடுத்துரைத்தார். 

இப்படி விடுதலை போராட்டக் காலத்தில் பல ஆளுமைகளின் தியாகப் பங்களிப்புகள் இருந்தன. இவர்களது வரலாற்றை விரிவாகச் சொல்ல வேண்டும்.

விதியே, விதியே, தமிழ்சாதியே. வரலாறு நேர்மையாக, உண்மையாக இருக்க வேண்டும். ஒவ்வொரு தலைமுறைக்கும் கொண்டு செல்கின்ற அடையாளம் மட்டுமல்ல சீதனமும் ஆகும்.

#இந்தியவிடுதலைப்போரட்ட_வரலாறு
#தமிழகவிடுதலைவீரர்கள்
#விடுதலை_போராளிகள்
#KSRadhakrishnanpostings
#KSRpostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
30-09-2019.


Sunday, September 29, 2019

கீழடி.

கீழடி அகழ்வாராய்ச்சி குறித்தான அறிக்கை
கீழடி குறித்தான அறிக்கை வெளியாகியுள்ளது. இன்னும் பல தரவுகள் வெளிப்படையாக அக்கறையோடு வெளிச்சத்துக்கு வர அரசு இயந்திரங்கள் முயற்சிக்க வேண்டும். 
#Report_on_Keeladi
#KSRadhakrishnanpostings
#KSRpostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
29-09-2019.

இன்று (29-09-2019) கி.ரா. அவர்களின் துணைவியார் திருமதி கணவதி அம்மாள் அவர்கள் மறைந்து 5வது நாளில்...

இன்று (29-09-2019) கி.ரா. அவர்களின் துணைவியார் திருமதி கணவதி அம்மாள் அவர்கள் மறைந்து 5வது நாளில் நடுநாட்டின்(பழைய தென்னாற்காடு மற்றும் புதுச்சேரி) முக்கியமான மரமான பலா மரச் செடியை வைக்க விரும்பினார். அவர் விருப்பத்தின் பேரிலேயே அந்த பலா மரச் செடியை மாமல்லபுரத்தில் உள்ள பன்னையிலிருந்து பெற்றுக்கொண்டு கி.ரா.வின் வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்தில் நடப்பட்டது. நான் பதிப்பித்த கிரா அணிந்துரை வழங்கிய ஜெகவீர பாண்டியனாரின் வீரபாண்டிய கட்டபொம்மனின் பாஞ்சாலங்குறிச்சி வீர சரிதம் புத்தகத்தைப் படித்துவிட்டு ஊமைத்துரை, தனாபதி பிள்ளையை பற்றி அதிகம் சிலாகித்தார்.
#KSRadhakrishnanpostings
#KSRpostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
29-09-2019.





#Dalrymple’s #TheAnarchy

#Dalrymple’s #TheAnarchy (bloomsbury india)
————————————
The Battle of Adyar, waged in the estuary of the river on October 24, 1746, just goes down in the history of Chennai as an event in which the French forces overcame the army of the Mughal Nawab of Carnatic, Anwar ud-Din.

But the battle carried enormous consequences for the Indian subcontinent, since it firmly established the supremacy of European warfare and the point is stressed by British historian William Dalrymple’s new book The Anarchy: The East India Company, Corporate Violence, and the Pillage of an Empire (Bloomsbury Publishing).

“…the Battle of Adyar proved a turning point in the Indian history,” he writes, because “for the first time, techniques of 18th century European warfare, developed in Prussia and tested on the battlefields of France and Flanders, had been tried out in India,” writes Mr. Dalrymple, drawing on the rather elaborate diary entries of Ananda Ranga Pillai, the chief dubash of the French East India Company.

On European warfare


Mr. Dalrymple also points out how it was immediately clear that nothing in the Mughal armoury could match the techniques of 18th century European warfare, particularly the “invention of screws for elevating the guns gave the artillery greater precision and increased the fire power of the foot soldier, giving them an edge in the battle against the cavalry.”

It showed that a small body of infantry armed with the new flintlock muskets and bayonets and supported by quick-firing mobile artillery, could now scatter a whole army just as easily as they could in Europe.

The Battle of Adyar was launched by the Nawab because he was furious that the French Governor, Joseph Francois Dupleix, had attacked Madras without his permission and taken it. Robert Clive, who subsequently defeated the French and established the British rule in India, escaped in disguise at night, he recounts.

The Nawab sent his son Mahfuz Khan with the entire Mughal army of the Carnatic to fight the French.

But the 700 French sepoys defeated the Mughal Army of 10,000 troopers, which was seen never before in India.

Vivid description

The impact of the modern weapons is vividly described by Ananda Ranga Pillai, an eyewitness to the battle, in his diaries. “Mauhfuz Khan also ran on foot, until he reached his elephant, and mounting this, quickly made his escape. He and his troops did not cease their fight until they reached Kunattur. The rout was general, so much so that not a fly, not a sparrow, not a crow was to be seen in all Mylapore.” According to Mr. Dalrymple, even before witnessing the Battle of Adyar River, Ananda Ranga Pillai had told Dupleix that 1,000 such French soldiers with cannon and mines could conquer all of south India.

Dupleix had replied that half that numbers, and two cannons would suffice.

However, Madras was restored to the East India Company in 1749, following the Treaty of Aix-la-Chapelle, signed between the Great Britain, France and the Dutch.

பாதரசமாய்  உருளும் நினைவுகளை விரல்  கொண்டு
அழிக்கப்பார்க்கிறேன்.ஓராயிரமாய்  மாறி உருளத் தொடங்குகிறது.

வெள்ளையர்,மேற்கு உலகத்தினர் இந்தியாவில் அரபி கடல் கடற்கரையில் கள்ளிக்கோட்டை சாமாரீன்
அரசர் வரவேற்றார்.அந்த கால கட்டத்திலிருந்து நாம் 
கவனிக்க வேண்டும்.

1600-ம் வருடம்  பிரிட்டிஷ் வியாபாரிகள் பிரிட்டிஷ் மகாராணியை சந்தித்து கிழக்கில் குறிப்பாக இந்தியாவில் வர்த்தகம் செய்யவேண்டி பிரயாணத்திற்கு அனுமதி பெற்று இங்கு இறங்கினார்கள்.வந்தவர்கள் கிழக்கெந்திய கம்பெனி காரர்கள்.

லண்டனில் வெறும் 20 X 20  மிக சாதாரண அறையில் உட்கார்ந்துகொண்டு இந்திய உப கண்டத்தை முழுவதும் (இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ்)  ஏறத்தாழ 300 வருடங்களுக்கு தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்கள்…. இந்தியாவுக்குள் முதலில் வந்து மொத்த வளத்தையும் கபளிகரம் (looting)செய்தது கிழக்கந்திய கம்பெனி என்ற அன்றைய கார்ப்பரேட்.பிரிட்டிஷ் அரசாங்கம் 150 வருடங்கள் கடந்த பின் வருகிறது.

இந்த உலகத்தில் நாம் அனுபவிக்கும் சுகங்கள் எதுவும் இலவசமில்லை. ஆய்விற்கு உரியது.

கொள்ளையடித்தல் என்ற பொருளில் ஆங்கிலத்தில் பயிலப்படும் வார்த்தை Looting, 17-ம் நூற்றாண்டுக்கு முன்னால் மேற்கில் புழக்கத்தில் இல்லை.
 William Dalrymple   எழுதிய The Anarchy: The Relentless Rise of the East India Company என்ற ஆய்வு சமீபத்தில் நூல் வெளிவந்தது.ஆறு வருடங்களுக்கு மேல் களப்பணியாற்றி கடும் உழைப்புடன் இந்நூலை வெளியிட்டுள்ளார்.
இவர் இந்திய வரலாற்றின் இருண்ட பக்கத்தைப்பற்றி பல நூல்களை ஏற்கனவேஎழுதியுள்ளார்).

Google, Youtube, Microsoft , Walmart போன்ற கார்ப்பரேட் கம்பெனிக்கு முன்னோடி East India Company ( EIC)… 1526 - இல் ஆப்கானிஸ்தானிலிருந்து பாபர் இந்தியாவுக்குள் நுழைந்து முகலாயர்களின் ஆட்சியை நிறுவுகிறார்.சர்வதேச வர்த்தக தொடர்பு அதிகரிக்கிறது.இந்தியாவிலிருந்து தேயிலை, பருத்தி, பட்டு, உப்பு, தங்கம், வைரம், ஒபியம் என பல பொருட்கள் உலகெங்கும் பல திசைகளில் விற்கப்படுகின்றன.முகலாய கஜானா பில்லியன் டாலரில் குவிகிறது.உலக வர்த்தக பரிமாற்றத்தில் முகலாய சாமராஜயத்தின் பங்களிப்பு 25% சதவீதத்திற்கும் மேல்…அப்போது ஐரோப்பா வர்த்தகத்தின் பங்களிப்பு வெறும் 2% .இதிலிருந்து புரிந்துகொள்ளலாம்.ஜஹாஹிங்கர், பாபர் , ஓளரங்கசிப் காலத்தில் இந்தியா எப்படி இருந்திருக்கும் என கற்பனை செய்து பாருங்கள்…

17-ம் நூற்றாண்டில் நுழைந்த கிழக்கந்திய வணிகர்கள் மெதுவாக தங்கள் இருப்பை தக்கவைக்கிறார்கள்.முகலாய மன்னர்களையும் வசியப்படுத்துக்கிறார்கள்..அந்த சமயத்தில் ,முகலாய வம்சத்திற்குள் குடும்ப பிரச்சினை அதிகரித்து வந்தது.பெர்சிய பேரரசன் நாதிர் ஷா படையெடுத்து கஜானவை அள்ளிக்கொண்டு போகிறான்.கூடுதலாக, பஞ்சம் மற்றும் இயற்கை பேரிடர்களும் போன்ற பல காரணங்களால் முகலாய சாம்ராஜ்யத்தை வலுவிழக்க செய்தன….
முகலாய சாம்ராஜ்யத்தின் கடைசி அரசன் ஷா அலம் 11   தன் வம்சத்தை தக்க வைக்க கடுமையாக போராடுகிறான்.ஷா அன்று தக்கவைத்திருந்தால் இந்திய துணைக் கண்டத்தின் வரலாறே வேறு மாதிரி எழுதப்பட்டிருக்கும்….விதி வலியது….கிழக்கந்திய கம்பெனிக்காரர்களை தன் சாம்ராஜ்யத்தில் வரி வசூல் செய்ய ஒப்புதல் அளிக்கிறான்… அதாவது ஒருவகையில் இந்தியத் துணைகண்டம் கொத்தடிமையாக கிழக்கந்திய கம்பெனிக்கு அடகு வைக்கப்படுகிறது….

ராபர்ட் கிளைவ் என்ற கொடூரன்கிழக்கந்திய கம்பெனி வரிவசூலுக்கு இந்திய மக்களை கொடுமைப்படுத்தியது மட்டுமல்லாமல், வட இந்தியா முழுவதையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தான்.ஒவ்வொரு வீடாக சென்று அந்த வீட்டில் உள்ள விலையுர்ந்த ஆபரணங்கள், ஓவியங்கள், சிலைகள் அபகரிக்கப்பட்டன.இதில் கணிசமான தொகையை தனக்கு ஒதுக்கி ஐரோப்பாவின்  மிகப்பெரிய செல்வந்தனாக கிளைவ் உயர்ந்தான்.வரிவசூல் வாயிலாக கிழக்கந்திய கம்பெனிக்கு வந்த வருமானம் இப்போதைய மதிப்பில் 250 மில்லியன் பவுண்டு.( ஏறத்தாழ 2200 கோடி ரூபாய்),மேலும் கலைச்செல்வங்களை ஏறத்தாழ 40 கப்பல்களில் கடத்தி லண்டனுக்கு எடுத்து சென்றுள்ளார்கள்.

அன்றைய காலக்கட்டத்தில் பிரிட்டிஷ் நாட்டையே சோறு போட்டு வளர்த்தது நமது இந்திய குடிமக்கள்  .

1803-ல் டில்லி செங்கோட்டை கிழக்கந்திய கம்பனி கீழ்வந்தது.1756 –1803  வரைக்கும் இந்தியாவை ஆண்டது கிழக்கந்திய கம்பெனி என்ற கார்ப்பரேட் நிறுவனம்.இந்த கம்பெனியின் கொள்ளையடிப்பில் பல பிரிட்டிஷ் அரசியல்வாதிகளும் பங்குதாரர்கள்.இந்த கொள்ளையின் அதிதீவிரத்தை உணர்ந்த பிரிட்டிஷ் அரசாங்கம் பின்னாளில் நேரடியாக இந்தியாவுக்குள் நுழைந்தார்கள்.

1765-ம் வருடம் முகலாய அரசாங்கத்தில் பணியாற்றிய அதிகாரி  நாரயண் சிங் சொல்கிறார்“What honour is left to us?”, when we have to take orders from a handful of traders who have not yet learned to wash their bottoms?”



#பவானிஆறு - அத்திக்கடவு, கோயம்புத்தூர் மாவட்டம் !!!

  #பவானிஆறு - அத்திக்கடவு, கோயம்புத்தூர் மாவட்டம் !!! Bhavani River - Athikadavu, Coimbatore District !!! #athikkadavu #coimbatore #tri...