Monday, January 22, 2024

தமிழ் கூறும் நல்லுலகில் நாம் #ஸ்ரீராமனை கம்பராமாயணத்தோடுகொண்டாடுவோம்(3) #இந்திய #வேற்றுமையில்ஒற்றுமை: #சிறியனசிந்தியாதான் இன்று அயேத்தியில் ஶ்ரீ ராமர் கோவில் திறப்பு

தமிழ் கூறும் நல்லுலகில் நாம் 
#ஸ்ரீராமனை
கம்பராமாயணத்தோடுகொண்டாடுவோம்(3) 
#இந்திய 
#வேற்றுமையில்ஒற்றுமை:

#சிறியனசிந்தியாதான்

இன்று அயேத்தியில் ஶ்ரீ ராமர் கோவில் திறப்பு
———————————————————-
தாய் என உயிர்க்கு நல்கி,
      தருமமும், தகவும், சால்பும்,
நீ என நின்ற நம்பி!      நெறியினின் நோக்கும் நேர்மை



நாய் என நின்ற எம்பால்,
      நவை அற உணரலாமே?
தீயன பொறுத்தி' என்றான் -
      சிறியன சிந்தியாதான்.

அவதார புருஷனாகிய ராமன் வாலிவதையின் போது வாலியிடம் சொன்னதாகக் கம்பன் எழுதியுள்ள
கண்ணி இது.

வாலியை சிறியன சிந்தியா தான் என்று ராமன் போற்றுகிறான்!.

ராமா !!அவதார புருஷனாகிய நீ உன் மனைவியைப் பிரிந்திருக்கும் துக்கத்தினால் மட்டுமே எங்கள்  விலங்குக் குலத்தில் குரங்குகளுக்குள் அதாவது சுக்ரீவன் மனைவியை நான் கவர்ந்து விட்டேன்! என்ற நியாயத்தின் பாற்பற்று  நீ மறைந்து இருந்து என்னைத் தாக்கி வீழ்த்தினாய் . எங்கள் விலங்கு வாழ்க்கையில் இது சகஜமானது.
தேவ புருஷன் ஆகிய நீ இப்படி செய்யலாமா? எனக் கேட்கிறான்.

அப்போது ராமன் மேற்கண்ட மொழிகளைச் சொல்வதாக கம்பர் இங்கே அறமுரைக்கிறார்.

மிக உயர்ந்த குணங்களை உள்ள தாய்மை பண்புமிக்க நடுநிலையும் தர்மமும் உடைய  உனக்குநான்  தீமையைச் செய்து இங்கு நிற்கிறேன்  நீ அதைச் சினம் கொள்ளாது பொறுத்தருள்க !. இந்த இடத்தில் ஒரு நாய் போல் தான் நிற்ப்பதாகவும் பணிந்து ராமன் சொல்கிறான்.

தீமையும் வாய்மையிடத்து என்பது போல
ராமனின் செய்கை ஒருவருடைய மனைவியைக் கவர்வது என்கிற அர்த்தத்தில் மட்டும் நிற்கவில்லை.!

காலதேச வர்த்தமானத்தில் கவர்ந்து செல்வது என்பதும் அதை மீட்டெடுக்கும் வெட்சித் திணை என்பதும்  தமிழ் மரபு வழியானது தான். ஆநிரை மேய்த்தலில் அல்லது அதன் திணையில் தமிழன் ராமரை மனம் கொள்கிறான்.

ஒரே நேரத்தில் சுக்கிரீவனின் மனைவியையும் சீதையையும் மீட்கும் நிலை தான் கவர்ந்து செல்லுதல் மீட்டல் என்கிற இருநிலை பண்பில் மேலோங்கி நிற்கிறது.

நிலத்தையும் பெண்ணையும்  கால்நடைகளையும் மீட்பது என்பது இந்தியத் தத்துவம் சார் நிலைப்பாடு.
அது வேட்டல் வணங்குதல் என்கிற பல்வேறு கூறுகளைக்கொண்ட தாய் வழிச் சமூகத்தின் கொடைகள் ஆகும்.

இந்த இடத்தில் ராமன் வாலியை சிறியன சிந்தியாதான் என்று பாராட்டுவது அல்லது அவனை போற்றுவதும் கூட இந்த செயல்களை  அவன் செய்ய மாட்டான் அவன் நல்லவன் என்கிற அர்த்தத்தில்தான். 

வாலிக்கும் சுக்ரீவனுக்கும் நடந்த சகோதர சண்டையில்  மனைவியை கவர்வது சிறிய செயல் அதைச்  செய்யக் கூடியவன் அல்ல வாலி என்பதுதான் இதன் உட்கிடை.
 .
வாலி வதையில் இன்னும் மிகப்பெரிய சிக்கலாக இருக்கக்கூடிய காரணங்களைப் பல்வேறு அறிஞர்கள் பேசிய பிறகும்
வாலி வதையின் அர்த்தம் இன்னும் பல ஆய்வுகளுக்கு உட்படுத்த வேண்டியது அவசியம் எனக் கருதுகிறேன். அந்த வகையில் ஒரு படைப்பிற்கு பல்வேறு அர்த்தங்கள் இருக்கின்றன அவரவர் அர்த்தங்களை வைத்துக்கொண்டு முரண்பாடுகள் ஏற்படுத்துவதை விட அதன் உண்மையான நோக்கம் என்ன என்பதைப் பார்ப்பது தான் முக்கியமானது.

அப்படி தன்னைத் தாழ்த்திப் பிறரை பெருமைப்படுத்தும் ராமன் ஏன் ஒரு கதாநாயனாக இருக்கிறான் என்பதற்கு இக்காரணங்கள் போதுமானது என்பது எனது வாசிப்பு.

வாழ்க ஶ்ரீராமன் புகழ்!

#sriramajanmabhumiVimochan

(படம் -கம்பராமாயணம்,  ரா. பி. சேதுப்பிள்ளை உரைகள்.)

#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
22-1-2024.


No comments:

Post a Comment

*Run your own race. No one cares what you are doing*

*Run your own race. No one cares what you are doing*. Think yourself as a powerful creator. You will see opportunities to get your goal, and...