Friday, February 16, 2024

#*திமுகநடிக்கும் தமிழக உரிமைகள் மீட்க போராட்டம்*

#*திமுகநடிக்கும்
தமிழக உரிமைகள் மீட்க போராட்டம்* 
————————————
மாநில அரசின் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றுவதற்கு மத்திய அரசு தொடர்ந்து ஒத்துழைப்பதில்லை
என்று தமிழக அரசு குற்றம் சாட்டி மாநில உரிமைகள்  மீட்க மாவட்ட தலைநகரில் போராட்டம் என திமுக அறிவிப்பு… 

ஜனதா ஆட்சியில் 1977-79 வரை பின், பல்வேறு வகையான கூட்டணிகளில் 18 ஆண்டுகள் மத்திய அரசின் அமைச்சரவையில் இடம்பெற்று வந்த திமுக அப்போது எல்லாம் என்ன செய்து கொண்டிருந்தது.அதிக மத்திய அமைச்சர்களை கூட்டணியிடம் கேட்டுப் பெற்ற கட்சி திமுக.சேது சமுத்திர திட்டம் ஆகட்டும் சேலை இரும்பாலை  கட்சத் தீவை கைவிட்டது பல்வேறு நதிநீர்த் தாவாக்கள் எல்லாவற்றையும் தாங்கள் மத்திய அமைச்சர்களாக இருக்கும்போதே நிறைவேற்றிக் கொள்ள முடியாமல் இப்போது வந்து உரிமைகள் கேட்டு முறையிடுவது தும்பை விட்டு வாலைப் பிடிப்பதற்கு சமமாகும்.

இந்தியாவிலேயே வளர்ச்சி அடைந்த மாநிலம் என்றும்  அது திராவிட மாடலில் விளைந்தது என்றும்  உண்மைக்கு புறம்பாக பிரச்சாரம் செய்யும் திமுக அரசு அதற்கான அனைத்து ஊடகங்களையும் தங்களது அபரிமித செல்வாக்கால் கையில் வைத்திருக்கிறது. உண்மையில் சுதந்திரம் பெற்ற காலத்திற்கு  முன்பாகவும் பின் பாகுவும் தமிழகத்தை ஆளுமை செய்த ஒவ்வொரு முதல்வர்கள்மற்றும் சிந்தனையாளர்கள் பொருளாதார விற்பன்னர்கள் வணிகர்கள் தொழிலாளர்கள் வங்கிகள் உற்பத்திகள் விளைச்சல்கள் மக்களின் உழைப்பு போன்ற யாவற்றின் ஊடான முயற்சியுமே தமிழ்நாட்டை இந்த நிலைக்கு கொண்டு வந்தது என்பதை இவர்கள் வசதியாக மறக்கடிக்க பார்க்கிறார்கள்.

தமிழக வளர்ச்சியையும் உரிமைகளையும் இந்திய ஒருமைப் பாட்டின் கீழ் பெற்ற காலங்களை திமுக மறந்து போயிருக்கலாம். அவர்கள் பிரச்சாரத்தால் ஆட்சியை மட்டுமே பல கவர்ச்சிகரமான அம்சங்களை வைத்துப் பிடித்தார்கள். ஆனால் வளர்ச்சி என்பது மத்திய மாநில அரசுகளின் ஒத்துழைப்பால் தான் கிடைத்தது என்பதை மறந்து விடக்கூடாது. எதோ தமிழ்நாடு குறைகளே இல்லாத மாநிலம் போல் இவர்கள் கடும் பிரச்சாரம் செய்கிறார்கள். மதுவினாலும் கடன்களினாலும் நாளும் தமிழக குடும்பங்கள் சீரழிந்து கொண்டிருப்ப
தைப் பார்க்க தவறுகிறார்கள்.
வேலைவாய்ப்பற்ற புதிய இளம் தலைமுறைகளின் நடத்தைகள் பற்றிய அக்கறையும் இவர்களுக்கு இல்லை.
அரசுடன் இணைந்த பொது வேலை திட்டம் என்பது பரவலாக்கப்படவில்லை. அது அரச விசுவாசிகளின் அந்தப் புரம் ஆகிவிட்டது.

இனக்கலாச்சார வேற்றுமைகளை மட்டுமே பயன்படுத்திக் கொண்டு அதன் முரண்பாட்டில் தங்களது குடும்ப அரசியலை வளர்த்துக் கொண்ட இவர்கள் தமிழக சுற்றி உள்ள அண்டை மாநிலங்களுக்கு (கேரளா கர்நாடக ஆந்திரா)காவேரி போன்ற இந்த நீண்ட கால உரிமைகளைப் பரிந்துரைப்பார்களா?இல்லை இந்த ஐந்து ஆண்டு காலத்தில் இருக்கும் பிரச்சனைகளையும் திமுகவின் வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவார்களா?

சமூக நீதி பேசும் குடும்ப பரம்பரை கொத்தடிமைகள்...

மக்களிடம் செல் மக்களோடு வாழ் - என இவர்கள் சொல்வது வேடிக்கை.

#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
16-2-2024.

No comments:

Post a Comment

#Reader's Digest UK Discontinues After 86 Years

#Reader's Digest UK Discontinues After 86 Years ஏப்ரல் 30, 2024 புத்தகம் படிப்பவர்களுக்கு ஒரு சோகமான நாள்.. ரீடர்ஸ் டைஜஸ்ட் மூடப்பட்டுள்...