Tuesday, November 19, 2024

#பசிதம்பரம்_அன்றும்இன்றும்

 #பசிதம்பரம்_அன்றும்இன்றும்

————————————— ப சிதம்பரம் “ஐநா சபைச் செயலாளரை பாலஸ்தீனியர்களுக்கு உதவக் கூடாது என்று வலியுறுத்தி இஸ்ரேல் அரசு தடுத்து விட்டது.! என்று கூறுகிறார்! சரி! நியாயமாகத்தான் இருக்கிறது! அதேபோல் இலங்கை முள்ளிவாய்க்கால் யுத்த நேரத்தில் 2009 இல் ஐநா அங்கே பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு உதவியளிக்க முன்வந்த போது அந்த உதவியை மறுத்து ராஜபக்சே தடுத்தபோது இந்தப் ப. சிதம்பரம் எங்கே இருந்தார்? காங்கிரஸ் ஆட்சியில் பிரதமாக மன் மோகன் சிங் காலத்தில் மத்திய அமைச்சராக இருந்தும் ஏன் அப்போது வாயை மூடிக் கொண்டிருந்தார்? யுத்தத்தில் காயம் பட்டவர்களுக்கு மாற்று ரத்தம் உணவு பொருட்கள் மற்றும் மருந்துகள் யாவற்றையும் கொடுக்க ஐநா முன் வந்த போது கூட ராஜபக்சே அதை கொடூரமாகத் தடுத்தார். ஒரு மனிதாபிமானம் மிக்க குரலைக் கூட ப. சிதம்பரம் ஈழத் தமிழர்களுக்காகக் கொடுக்கவில்லையே! இப்போது இதற்கு நியாயம் பேசும் இந்த குரல் அப்போது ஏன் நியாயமற்று அமைதியாக இருந்தது! #இலங்கைதமிழர் #ஐநா #பசிதம்பரம் #கேஎஸ்ஆர்போஸ்ட் #ksrpost 14-10-2024

No comments:

Post a Comment

பனுமதி பத்மினி ஸ்ரீவித்யா ஸ்ரீதேவி கே.ஆர்.விஜயா... நடிப்பில் அற்புதங்களில் சிலர்❤️❤️

பனுமதி பத்மினி ஸ்ரீவித்யா ஸ்ரீதேவி கே.ஆர்.விஜயா... நடிப்பில் அற்புதங்களில் சிலர்