“#வந்தேறி”!
இந்த பூமியில் பிறந்தவர்கள அனைவரும் வந்தேறிகள்தான் இது உலகமயமாக்கல் என்ற நிலையில் தமிழக அரசியல் தேவையற்று விவாதிக்கபடுகிறது. அது என்னவிதமான சமூக பின்விளைவுகளை ஏற்படுத்தியது; இன்றும் ஏற்படுத்துகிறது என்கிற வரலாற்றை விருப்பு வெறுப்புகளையும் முன் முடிவுகளையும் கொஞ்சம் ஒதுக்கிவைத்து ஆராய்ந்தால் அது தெரியும்.இன்றைய யதார்த்தத்தை உணராமல் இனியும் இந்த “வந்தேறி” என்கிற அரசியல் கோட்பாட்டை/கோஷத்தை பயன்படுத்துவது எண்ணிக்கை பெரும்பான்மைவாதம்; அப்பட்டமான ஆதிக்கவாதம்; இனத்தூய்மைவாதம்; எல்லாமும் சேர்ந்து உதவப்போவதும் உருவாக்கப்போவதும் பாசிசவாதம். “வந்தேறி” என்கிற வாதத்தை தமிழ்நாட்டின் மத/மொழி சிறுபான்மையினரே பேசுவதும் பரப்புவதும் எரியும் கொள்ளிக்கட்டையை எடுத்து தங்கள் தலையில் தீவைத்துக்கொள்ளும் செயல். இயக்குநர் அமீரும் அவரைப்போன்றவர்களும் இனியேனும் திருந்தினால் நல்லது. குறைந்தபட்ச புரிதலோ பொறுப்போ இல்லாமல் அந்த எதிர்ப்பை செய்தால் அது மத/மொழி சிறுபான்மையினர் தங்கள் தலையில் தாமே மண்ணள்ளிப்போட்டுக்கொள்ளும் செயல். அமீர், பீலிக்ஸ் ஜெரால்ட் போன்ற மத சிறுபான்மையினரும் தமிழ்நாட்டின் மொழி சிறுபான்மையினரும் இந்த “வந்தேறி” என்கிற வார்த்தையை பயன்படுத்துவது இந்திய முஸ்லீம்கள் பாகிஸ்தானுக்கும் கிறிஸ்தவர்கள் ரோமுக்கும் போகச்சொல்லும் கோஷத்தையும் தமிழ்நாட்டின் தெலுங்கர்கள் ஆந்திராவுக்கும் மலையாளிகள் கேரளத்துக்கும் கன்னடர்கள் கர்நாடகாவுக்கும் போகச்சொல்லும் கோஷத்தையும் ஆதரித்து வலுப்படுத்தும் வாதம்/செயல் என்பதை உணர்ந்தால் அவர்களுக்கும் நல்லது. அதைவிட தமிழ்நாட்டுக்கும் அதன் பன்முகத்தன்மைக்கும் கூடுதலாக நல்லது.Tuesday, November 19, 2024
Subscribe to:
Post Comments (Atom)
"திரிஷா விவகாரம்" | நயினாருக்கு முன்பே தெரியுமா? KSR interview நேர்காணல் Part 1 | Trisha | Vijay Sangeetha issue | Vijay
"திரிஷா விவகாரம்" | நயினாருக்கு முன்பே தெரியுமா? KSR interview நேர்காணல் Part 1 | Trisha | Vijay Sangeetha issue | Vijay Vijay...
-
#ஆந்திர துணைமுதல்வர் பவன்கல்யாண் அவர்களை சந்திப்பு #Meeting with AP DyCM Shri Pawan Kalyan Garu —————————————————————- நேற்று பிற்பகலில்...
-
My colum on Katchatheevu published today’s (7-6-2025)Pioneer - New Delhi edtion #Katchatheevu - K.S. Radhakrishnan Prime Minister Modi an...
-
அடல்பிகாரி வாஜ்பாய் அவர்களுக்கு, பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது. தாமதமாகவே இந்த விருது அவருக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த...

No comments:
Post a Comment