Wednesday, November 20, 2024

#தமிழகவெற்றிக்கழகம்

 #தமிழகவெற்றிக்கழகம்

————————————- இன்றைய தமிழக சட்ட அமைச்சராக இருக்கும் ரகுபதி 1991 இல் ஜெயலலிதா அமைச்சரவையில் சேர்ந்தார். புதுக்கோட்டை மாவடத்தில் தனக்கு எதிர் வினை ஆற்றும் திருநாவுக்கரசு, ஆர் எம் வீரப்பன் தனது நகரத்தார் சமூகத்தைச் சேர்ந்த புதுக்கோட்டை ரகுபதியை தனக்குச் சாதகமாக இருப்பார் என்று நினைத்து அன்றைய சட்டமன்றத்தில் அவரை இணைத்து அமைச்சர் ஆக்கினார். இவர் அன்று வழக்கறிஞராக புதுக்கோட்டையில் இருந்தார்ர அதன்பின்பு சாத்தூர் கே கே எஸ் ஆர் ராமச்சந்திரன் 2000கட்டத்தில்ல் திமுக விற்கு நெருக்கமாக இருந்த நிலையில் இந்த ரகுபதியை அழைத்து திமுகவில் இணைத்து விட்டார்! அதற்குப் பிறகு ரகுபதிக்கு பெரிய முன்னேற்றம் !மத்திய அமைச்சர்! மாநில அமைச்சர்! போன்ற பதவிகள் எல்லாம் கிடைத்தது! இருக்கட்டும்!? இப்போது அவர் விஜயின் தமிழக வெற்றிக்கழகத்தை பிஜேபியின் சி டீம் என்று வர்ணித்துள்ளார். அவருக்கு என்ன தெரியும் எப்படி சி டீம் என்று சொல்லுகிறார். அவரிடம் ஆதாரம் இருக்கிறதா ஆதாரம் இருந்தால் காட்ட காட்ட வேண்டியது தானே! இன்று தான் இருக்கும் கட்சிக்காக ஒருவர் அதற்கு ஆதரவாகப் பேச வேண்டும் என்பதற்காக வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்றெல்லாம் பேசக்கூடாது! அப்படி என்றால் நான் சொல்கிறேன்! அண்ணா திமுகவிலிருந்து வந்து இப்பொழுது திமுகவில் இருக்கும் இவர் மறைமுகமாக இன்று வரை அண்ணா திமுகவின் பி டீமாக திமுகவிற்குள் இருந்து கொண்டே செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் என்று! ஒத்துக் கொள்வாரா? தெளிவாக விஜய் சொன்னதற்குப் பிறகும் தமிழக வெற்றி கழகத்தை பாஜகவின் சி டீம் என்று சொல்வது விஜயின் அரசியல் பிரவேசம் பற்றியது அல்ல என்று நான் நினைக்கிறேன்! வதந்தியைப் பரப்புகிறார். வாயில் வந்ததை எல்லாம் வெளிப்படுத்தக் கூடாதுநேர்மையாக அரசியலை எதிர்கொள்ள வேண்டும்! அரசியல் வாய்ப்பு பொதுவானது.! அது தனிப்பட்டவர்களின் சொத்தல்ல! இன்றைக்கு அரசுப் பொது மருத்துவமனைகளையும் சென்னையில் உள்ள ஒன்பது பொது விளையாட்டுத்திடல்களையும் தனியார் மயமாக்க நகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறார்கள். விளையாட்டு வீரர்கள் சம்மேளனமும் மார்க்சிஸ்ட் கட்சிகளும் இப்படி தனியார் துறைக்கு அனைத்தையும் தாரை வார்ப்பதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள். முதலில் அதற்கு விளக்கம் கொடுங்கள்! #TVKVijay #தமிழகவெற்றிக்கழகம் #கேஎஸ்ஆர்போஸ்ட் #ksrpost 29-10-2024,

No comments:

Post a Comment

2023-2024