Wednesday, November 20, 2024

நேற்று விக்கிரவாண்டியில் விஜய் நடத்திய தமிழக வெற்றிக் கழக மாநாடு பற்றி இன்று என்னிடம் சில பத்திரிகையாளர்களும் நண்பர்களும் பேசினார்கள்.

 நேற்று விக்கிரவாண்டியில் விஜய் நடத்திய தமிழக வெற்றிக் கழக மாநாடு பற்றி இன்று என்னிடம் சில பத்திரிகையாளர்களும் நண்பர்களும் பேசினார்கள்.


அந்த மாநாட்டில் வைத்திருந்த காமராஜர் பெரியார் அம்பேத்கர் அஞ்சலை அம்மாள் கட்டவுட்டுகள் யாவும் சரிதான்! அதேபோல் திருவள்ளுவர்,பாரதியார், வ உ சி, சிங்கரவேலர்,தமிழ்நாட்டின் முதல் அமைச்சராக நேர்மையின் சிகரமாக இருந்த ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் மற்றும் வாழ்நாள் முழுக்க விவசாயிகளுக்குப் போராடிய நாராயணசாமி நாயுடு போன்றவர்களின் கட்டவுட்களை வைத்து இருந்தால் அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கிய ஒரு பரந்துபட்ட ஜனநாயகத் தன்மையை அது காட்டி இருக்கும் என்றும் அவற்றின் அடிப்படையில் விஜயின் அரசியல் நிலைப்பாட்டை சீர்தூக்கிப் பார்க்க ஏதுவாக இருந்திருக்கும் என்றும் தங்களது கருத்துகளைச் சொன்னார்கள்! அதற்கு நான் சொன்னேன் இது ஒரு துவக்க புள்ளி. இதிலிருந்து தான் எல்லாவற்றையும் இணைக்கக் கூடிய அடுத்தடுத்த கட்டப் பார்வைகள் வரும். வைக்கும் யோசனைகள் முழுக்க நல்லது தான்! ஆனால் எடுத்து எடுப்பிலேயே இவ்வளவையும் கொண்டு செலுத்தக்கூடிய விஷயம் எப்படி ஒரு புதிய கட்சிக்கு வரும்? அப்புறம் இங்கு கடந்த கால வரலாற்றில் புதிதாக ஆரம்பித்த பல்வேறு கட்சிகளும் கூடப் பிற்காலத்தில் மக்கள் மத்தியில் நிலைபெற்ற போது தான் அனைத்து சிந்தனைகளையும் தங்களுடைய கொள்கைகளுக்குள் கொண்டு வர முடிந்ததை எண்ணிப் பார்க்க வேண்டும்! மகாத்மா காந்தி அவர்களது கட்டவுட்டு போன்றவர்களின் கட்டவுட்டையும் வைத்திருக்க வேண்டும் என்றும் கூட பேச்சுவாக்கில் முன்வைத்தார்கள். இப்படிப் பலவறாகப் பேசிக் கொண்டிருக்கும்போது . “குழந்தை இப்போது தான் பிறந்திருக்கிறது அது தவழ வேண்டும். பிறகு எழுந்து நின்று நடக்கும் போதுதான் தன் வளர்ச்சிப் போக்கில் மக்கள் ஆதரவுடன் இவற்றையெல்லாம் தானே கணக்கில் எடுத்துக் கொள்ளும் !” என்று நான் கூறினேன். தொடர்ந்து சொல்லும்போது பிற கட்சிகளும் முழுமையாக எதையும் இங்கு செய்து தீர்த்துவிடவில்லையே! என்ற என் அபிப்பிராயத்தையும் சொன்னேன்! பதிலாக அவர்களும் இதை ஒன்றும் குறையாகச் சொல்லவில்லை. மனதில் பட்டதை சொன்னோம் என்றார்கள். அந்த வகையில் விஜயின் இந்த மாநாடு ஒரு திருப்புமுனையாக பேசப்படுகிறது. என்பது என்னவோ உண்மை! சில விடயங்களில் , இயலாதவர்களின் கடைசி ஆயுதம் விமர்சனம்
#TVKVijay #tvkmaanadu #தமிழகவெற்றிக்கழகம் #விஜய் #கேஎஸ்ஆர்போஸ்ட் #ksrpost 28-10-2024.

No comments:

Post a Comment

#அன்றைய மெட்ராஸ்ராஜதானி,

  #அன்றைய மெட்ராஸ்ராஜதானி, #சென்னை ராஜதானி, #பின்சென்னை மாகாணம் # தமிழ்நாடு 68* #நவம்பர்1 தமிழ்நாடு நாள் (பெற்ற -பிறந்த நாள்)உதயமான ந...