Wednesday, November 20, 2024

குடும்பத்தில் ஓய்வின்றி உழைக்கும்

 குடும்பத்தில் ஓய்வின்றி உழைக்கும் எந்த ஒரு தகப்பனையும் அவனது மகன் ஏன் வெறுக்கிறான். அதேநேரம் அதே தகப்பனை அவன் பெண் பிள்ளை ஆதர்ஷமாய் கொண்டாடுகிறதே அது எப்படி.

ஆனால் அதே குடும்பத்தில் ஆண்பிள்ளை தன் தாயை கொண்டாடுவதும்.. அந்த தாயும் தன் பெண் பிள்ளையை தேவைக்கும் அதிகமாக கடிந்து கொள்வதும் ஏன்….. ஒரு தகப்பன் தனக்கு பிறகு இந்த குடும்பத்திற்காக இன்னொரு பிடிமானத்தை உருவாக்க விரும்புகிறான். அதற்காக தன் மகனை நல்ல விதமாக உருவாக்கும் முயற்சியே அவனிடம் அவர் நடந்து கொள்ளும் கடுமை. அதே நேரம் என்றாவது தன்னை விட்டு பிரிவது நிச்சயம் என்பதால் அந்த பெண்பிள்ளை மீது அளவிற்கும் அதிகமாக பரிவுடன் நடந்து கொள்வது. இந்த காரணங்களால் தான் தன் தந்தையிடம் மகன் விலகி நிற்கிறான். பெண் பிள்ளை தன் தந்தையை கொண்டாடுகிறது. அதேநேரம்.. அதே பெண் பிள்ளையின் பிரிவு தாயின் பார்வையில் அவள் இன்னொரு வீட்டிற்கு செல்பவள் அவளை நல்லவிதமாக வளர்க்க வேண்டும் என்ற கண்டிப்பால் மகளிடம் இருந்து விலகி நிற்கிறாள். நாளை இந்த குடும்பத்தை ஆதரிக்க இருப்பவன் என்ற உறுதியில் அவனை போசிக்கிறாள்.

No comments:

Post a Comment

2023-2024