Wednesday, November 20, 2024

#விஜய்_குறித்துபேரவைத்தலைவர்அப்பாவுஅவர்களின்_தப்புத்தாளங்கள்!

 #விஜய்_குறித்துபேரவைத்தலைவர்அப்பாவுஅவர்களின்_தப்புத்தாளங்கள்!


———————————— ஒருகாலத்தில் எங்கள் ஊர் கோவில்பட்டியை அடுத்துள்ள குருவி குளத்தில் அரசு ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் படித்த ஆசிரியர் பணி செய்த அப்பாவு அவர்கள்இப்போது தமிழ்நாட்டு சட்டசபையில் சபாநாயகராக இருக்கிறார். இருக்கட்டும் நல்லது தான்! ஆனால் ஒரு பேரவைத் தலைவர் எல்லா கட்சிக்கும் பொதுவாக இருக்கக்கூடியவர் அவையிலும் சரி வெளியிலும் சரி, தனது சார்பான அரசியல் கருத்துக்களைச் சொல்லக்கூடாது! குறிப்பாகச் சொன்னால் கட்சி அரசியல் பேசக்கூடாது! அதுமட்டுமல்லாமல் உறுதி செய்யப்படாத தகவல்களை அளிப்பதும் தவறுதான். விஜய் எப்போது பாஜகவை சந்தித்தார்? அவர் எப்போது பா ஜ க வுடன் தொடர்பில் உள்ளார்? அவர் மீது அவதூறு பரப்பும் வகையில் பத்திரிகையாளர்களிடம் பொய்யான தகவல்களைச்சொல்லி இருக்கக்கூடாது.அப்படித்தான் சொல்வேன் என்றால் அவர் சபாநாயகர் பதவிக்கு தகுதி இல்லாதவர்! அரசியல் பேசும் பேரவைத் தலைவர்களை நீதிமன்றம் மூலமாக Quo warranto writ இன் படி பதவி நீக்கம் செய்யலாம். அவருக்கு அரசியலே கூடாது என்பது வாதம் அல்ல! ஆனால் கட்சி அரசியலைப் பேசுவதன் மூலம் அவர் பேரவை தலைவர் என்ற தகுதியை இழக்கிறார் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். கவனக்குறைவாக இல்லாமல் முதலமைச்சரும் அவரிடம் இதை எடுத்துச் சொல்ல வேண்டும். எனது நண்பர் பி எச் பாண்டியன் வானாளாவ அதிகாரம் படைத்தவர் பேரவை தலைவர் என்று கூட சொல்லியிருக்கிறார். பதவியில் இருக்கும் வரை சார்பு அரசியலோ கட்சி அரசியலோ பேச மாட்டார்.! பதவியை விட்டு வந்த பிறகு அவர் பேசியிருக்கலாம் !அது வேறு! அப்பாவு அவர்கள் இப்படித் தப்பு தாளங்கள் போடுவது முறை அல்ல! எது வேண்டுமானாலும் பேசலாம் யார் என்ன கேட்கப் போகிறார்கள் என்கிற போக்கு ஒரு பேரவைத் தலைவருக்கு பொருந்தாது. இது குறித்து உச்ச நீதிமன்ற உயர் நீதிமன்ற தீர்ப்புகளும் உள்ளன.
#தமிழகவெற்றிக்கழகம் #TVKVijay #TVK_maanadu #ksrpost #ksrpost 29-10-2024.

No comments:

Post a Comment

Yes… brutal killings

  Yes… brutal killings Quote Rishi Bagree @rishibagree · Aug 20 ”India lost 15000 citizens in Sri Lanka because of Rajiv Gandhi.” Reveals h...