Tuesday, November 19, 2024

அவர்களை வென்றாக வேண்டும்,,,,! எப்படியாகினும்*,,,,

 அவர்களை வென்றாக வேண்டும்,,,,!

எப்படியாகினும்*,,,,

ஆம் ! எந்தை அரசாளும் புவிதனில்,,,, புல்லோர்கள்,,, பல்லோர்கள் பவனி வரப் போகுதல் நலமோ ? அதுகண்டு யான்,,,, விழி மூடி சுகித்திருத்தலும், சுகமோ ? எவர் புவியில்,,,? எவர் ஆளுவது ? கேட்பாரின்றி இருந்த கூட்டம் ! கேட்பார் பேச்சினைக்கேட்டு நலிந்த கூட்டம் ! எமை எதிர்ப்பதுவோ ? விழியற்றவன் பிள்ளை,, வழியற்று திரிகின்றான் பாரென்று,,, அன்று அவள் மட்டும் சொன்னதை,,,, இனி ! இன்று,,,,, இந்தப் பார் சொல்லுவதோ ? உரைப்பார் உரைத்தால்,,,, கேட்பார்களெனப் பார்த்தால்,,,,? கரைப்பார் கரைத்த காயமாய்த் திரிகிறார்கள் ? கரையேறி விடுவாரோ ? ககனம் புகழாட்சி பெறுவாரோ ? சூதாட வைத்தோம்,,,! சூதாடித் தோற்றான் ! வாதாடிப் பார்த்தான் ! வளர் மாமன் என் சகுனியிடம் தோற்றார் ! அப்புறமுமென்ன ? வனவாசம் தான் ! அதுவொரு சுகவாசமென நம்பத்தான் வைத்தோம்,,,! அது கடந்து வந்தவரை,,, அஞ்ஞாத வாசமோராண்டு என்றோம்,,, அப்போதும் கடந்தார்கள் ! இப்போதும் வந்து நிற்கின்றார்கள் ! ஐந்து நாடு என்கின்றார்கள் ? ஐந்து வேலி நிலமென்கின்றார்கள் ? ஐந்து வீடுகளாவது என்று நிற்பவர்களுக்கு,,,, ஐம்புலனடக்கிக் கொடுத்து விடலாம் தான்,,,,, ஆனால்,,, ஐந்தறிவு உள்ளவர்கள் அல்ல அவர்கள்,, ஆறாம் அறிவுடனே ஏழாம் அறிவுடையோன் அவன் ! பக்கலில் இருக்கின்றான் ! ஆதலினால் தான்,,, அவர்களுக்கு ஏதுமில்லை என்கின்றேன்,,,,, துரியா ! நில் என்ற கர்ணனைத் தடுத்து விட்டுத்தான் தோகைப் பீலி சூடியவனைக் காண வந்திருக்கின்றேன் ! இவன் மட்டும்,, என் பக்கலில் நின்றிருந்தால்,,,,? இந்த அவனி என் பேச்சுக்கு கைத்தாளம் போடுமே ? அவனைத்தான் காண வந்திருக்கிறேன் ! அவன் அறிதுயில் கொண்டிருக்கின்றான் ! அவனப்படித்தான் ! என் செய்ய,,, கால் பிடித்து நிற்பதெல்லாம்,,, எனக்காகாது,,,, கைபற்றி நிற்பதற்கே பலர் அஞ்சும் வன்மையுடையோன் எவர் கால் பற்றி இருப்பது,,,? இது சரியோ ? இது பிழை பிள்ளாய்,,,, முதுமகன் விதுரன் சொல்லி இருக்கின்றார் ! பிதாமகன் பீஷ்மன் நவின்றே இருக்கின்றார் ! இருந்துமென்ன ? இது இப்படித்தான் ! கெளவரர் என்றால்,,,,இப்படித்தான் ! இனி இப்படித்தான்,,, ! கெளவரம் என்றால்,,,இப்படித்தான்,,,! பொருது பார்த்து விடுவோம்,,,! வா ! பொருதி பார்த்து விடுவோம்,,,! என்றே தான் போர்க்களம் காணத் துடித்திருக்கிறேன்,,,, பகைக்களம் கடினம் தான் ! பார்த்தனின் பக்கத்தில்,,,இவனிருந்தால்,,,? பகைக்களம் கொஞ்சம் கடினம் தான் ! அறிவேன் தான் ! இவன்,, ! நான் வரும் போது,,, அறிதுயில் கொண்டிருப்பான் ! என்பதனையும்,,, நான் அறிவேன் தான் ! ஆனால்,,,,, அவனும் அதிபதி,, நானும் அதிபதி,,, ! அவன் நாடு அவனுக்கென்றால்,,, என் நாடு எனக்கென்ற திமிர் எனக்குள்ளும்,,,, இனி பொறுப்பதில்லை தம்பீ,, எரிதழல் கொண்டு வா ! என்றவனே,,, எரிதழல் எடுத்து வந்து பொசுக்கி இருக்கலாமே ? ஹாஹாஹா,,, நான் வந்திருக்கிறேன் ! நானே தான் வந்திருக்கிறேன்... ! அவன் ! என் பக்கலில் சேர்வானா ? -மாட்டான்,,, - இயலாதெனக் காரணம் சொல்வான் ? அதுவும் அழகாய்ச் சொல்வான் ! அறிந்தே தான் வந்திருக்கிறேன்,,,,, பின் எதற்கு அடி பணிய வேண்டும்,,,? ஆதலினால்,,, அவன்,,,தலை மாட்டில் காத்திருக்கிறேன்,,,! அது மட்டும் தான் ? காரணமா ? துரியா,,,,, ஹாஹாஹா,,,, யாரது,,,? என்னைக் கேள்வி கேட்பது,,,,, ? நான்,,,,! நான் தான் பிள்ளை,,,,, ஹாஹாஹாஅ,, தெரியுமடா,,வித்தாரக் கள்ளா,,, அவன் ! பகைப்புலத்தான் தான் என்றாலும்,,, அவன் அழகனடா ! கோபியர் கூட்டத்தில் மட்டுமல்ல,,, கோதையர் கூட்டத்திலும்,,,அவன் அழகானவனடா ! கோதையர் கூட்டத்தில் மட்டுமா ? என்று கேட்டு விடாதே ? பிள்ளாய்,,, கோக்களின் கூட்டத்திலும்,,,, அவன் கீதம் சுகமானதடா,,, ! கோக்களின் கூட்டத்தில் மட்டுமல்ல,,,, கோவிந்தன் கோவெனும் அரசர்களின் கூட்டத்திலும்,,, கோமகனாய் நமையாள ! அரசாளுவான் அவ்வழகன் ! ஆதலினால்,,, ஆதலினால் தான்,,, அவன் அழகினை ,,,ரசிக்க,,,, இங்கிருக்கிறேன்,,, பார்,,! பார்,,,,! அந்த பரந்தாமன்,,, புன்னகைப்பதனைப் பார் ! அந்த குமிண் சிரிப்பினைப் பார் ! அந்த பவளச் செவ்வாயினைப் பார் ! ஐந்து தலை நாகங்கள் படமெடுத்தாடும் போது கூட,,, சலனமின்றிக் கிடக்கிற அவனழகைப் பார் ! ஆதலினால் ,,, நானும்,,,, கொஞ்சம்,,,நின்று பார்க்கட்டுமா ? பைந்நாகம் குடை பிடிக்கும் அழகை,, நானும் தான் பார்க்கட்டுமா ? வேண்டாமென்றால்,,,? விடவா ? போகிறாய்,,,, பிள்ளாய்,,,,, ஙே,,,ஙே,,,ஙே,,,,,,,,,,, சூதாடபொற்புடை புனிதன் கோயில் புறத்தினில் அனிகம் நிற்ப சற்ப வெம் பதாகை வேந்தன் தடை அற தனி சென்று எய்தி உற்பல வண்ணன் பள்ளி உணர்தருகாறும் இட்ட சிற்ப வண் தவிசின் ஏறி - வில்லி பாரதம் -

No comments:

Post a Comment

Reached me today…