#ஹாக்கிப்பட்டி ——————————— ஹாக்கி விளையாட்டுப் போட்டி என்றாலே கோவில்பட்டி என்று தான் சொல்வார்கள். அந்த வகையில் அதற்கு ஹாக்கிப்பட்டி என்ற பெயரும் உண்டு. அந்த காலத்தில் அங்கு இருக்கக்கூடிய லட்சுமி மில்ஸ் மைதானத்தில் தொடக்க கால முதல் ஹாக்கி விளையாட்டுப் போட்டிகள் 45 ஆண்டுகள் வரை அகில இந்திய ஹாக்கி அணிகள் கலந்து கொண்ட போட்டிகள் நடந்தன. அந்த விளையாட்டுப் போட்டிக்கான தடகளம் தேசிய அளவில் அங்கு வந்து விளையாடுபவர்களுக்கெனப் பராமரிக்கப்பட்டு செம்மையாக ஒரு சர்வதேச மைதானம் போல அங்கு ஏற்பாடு செய்யப்பட்டது. லட்சுமி மில்ஸ் அதிபர்கள் அதற்கு உதவியாக இருந்து அகில இந்திய குப்புசாமி நாயுடு ஹாக்கி விளையாட்டு போட்டி என்கிற பெயரில் அந்த விளையாட்டுப் போட்டியை நடத்தி அதற்கான கேடயங்கள் பணப் பரிசில்களைக் கூட வழங்கினார்கள். பிறகு கடந்த 2018 இல் அதிமுக ஆட்சியில் அரசு மைதானம் அமைத்துள்ளது எடப்பாடி பழநிசாமி அதிமுக ஆட்சியில் கடம்பூர் ராஜு அமைச்சராக இருந்தபோது அவரது முயற்சியில் அதேபோல் ஒரு ஹாக்கி மைதானம் அங்கே உருவானது. மகிழ்ச்சியானதும் வரவேற்கத்தக்கதும் ஆகும்! அதை யாரும் மறுக்க முடியாது! ஆனால் இந்த விஷயம் எ வ வேலுவிற்கு உறுத்தி இருக்கிறது போலும்! அது என்ன கோவில் பட்டியில் ஹாக்கி மைதானம்! அதை ஏன் நாம் திருவண்ணாமலையில் அமைக்க கூடாது இன்று எண்ணி இருப்பார் போலும்! அவர் எப்போதும் ஏட்டிக்கு போட்டியான வேலைகளைச் செய்பவர் தான்! அப்படியாக அவர் துணை முதல்வராகவும் விளையாட்டு மந்திரியாகவும் இருக்கக்கூடிய முதல்வர் ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலினிடம்சொல்லித் தூண்டிவிட அவர் திருவண்ணாமலை யில் ஹாக்கி விளையாட்டு மைதானம் அமைப்போம் என்று சொல்லி இருக்கிறார்.! நல்லது தான் நடக்கட்டும்! ஆனால் கோவில்பட்டியில் இந்திய அளவிலான தேசிய ஹாக்கி போட்டிகள் எப்போதும் மிகச் சிறப்பாக நடக்கும். அது பற்றி வானொலிகளில் எல்லாம் அடிக்கடி அப்போது செய்திகள் வரும்! உலக தரத்தில் அந்த விளையாட்டுப் போட்டியை நடத்தினார்கள்! அப்படி என்ன கோவில்பட்டியில் நடத்தினார்கள்! என்று ஏட்டிக்கு போட்டியாக சிந்திக்கும் எ வ வேலு நாங்கள் அதை திருவண்ணாமலை நடத்துவோம் என்று குயுக்தியாக நினைத்திருக்கிறார்! திருவண்ணாமலையில் ஹாக்கி ஸ்டேடியம்… இப்படி மற்றவர்கள் சிறப்பாக செய்த ஒன்றை பார்த்து அதற்குப் போட்டி போடும் எ வ வேலு போன்றவர்கள் இந்தியாவின் தலைசிறந்த விளையாட்டு ஆன ஹாக்கிப்போட்டியை கேலிக்கூத்தாக்காமல் இருந்தால் சரி! இதில் எல்லாப் புகழும் எங்களுக்கே! என்கிற போக்குதான் வக்கிரமானது. என்னத்தைச் சொல்ல? kovilpattihockeyground.blogspot.com newindianexpress.com/sport/2011/Jul #கோவில்பட்டிஹாக்கி #ஹாக்கிப்பட்டி #hockey #kovilpatti #கேஎஸ்ஆர்போஸ்ட் #ksrpost 21-10-2024.
Tuesday, November 19, 2024
#கோவில்பட்டிஹாக்கி

Subscribe to:
Post Comments (Atom)
8 september
உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்
-
#ஆந்திர துணைமுதல்வர் பவன்கல்யாண் அவர்களை சந்திப்பு #Meeting with AP DyCM Shri Pawan Kalyan Garu —————————————————————- நேற்று பிற்பகலில்...
-
#கச்சத்தீவுகுறித்தசிலஅறியாதவிஷயங்கள்! ———————————————————- கச்சத்தீவு பற்றிச் சில செய்திகளைச் சொல்ல வேண்டியது அவசியம்! டச்சுக்காரர்களும் ஆங...
-
#ஈவேகிசம்பத் அண்ணன் நினைவு நாள் இன்று பிப்ரவரி 23, 1977- ஆரம்ப காலக் காங்கிரஸில் காமராஜருடன் நான் இருந்தபோது சம்பத் அவர்களுடன் பயணித்த காலங...

No comments:
Post a Comment