Tuesday, November 19, 2024

செய்யும் செயலை முழு மனதோடு செய்யுங்கள். வெற்றி கிடைக்கவில்லை என்றாலும் நிச்சயம் நிம்மதி கிடைக்கும்.

ஈகோ - இந்த தலைச்சுமைதான் பலரின் மனச்சுமைக்கு காரணம், குடும்பத்திலேயும், நெருங்கிய நட்புகளிடமும் ஈகோவுக்கு வேலையே இருக்கக் கூடாது. நான் ஏன் பேசனும்?  அவர்கள் பேச மாட்டாா்களா?  போன்ற கௌரவ சிந்தனைகளை, தலையில் தட்டி அடக்கி விட்டு, நினைத்தால், நினைத்தவுடன் நேசிக்கும் மனிதர்களிடம் பேசி விடுங்கள். சரியான பேச்சு, மனிதர்கள் எங்கெங்கு இருந்தாலும் மனதை உற்சாகமாக்கும்..

இருப்பினும்,சூடு, சொரணை, திமிர்,  கோபம் அத்தனையும் வேண்டும் அளவான விகிதத்தில்...!

நமக்கான தேடல் குறையும் போது
வாழ்க்கையில்
சுவாரஸ்யம் குறையும்.! 

அவன்களுக்கு அழத்தெரியாது

உறவுகளுக்காய் மாடாய் உழைக்கும் 
அவமானங்கள் சகிக்கும் 
தோல்விகள் பழகும் 
விருப்பு வெறுப்புகளைப் புறந்தள்ளும்
துன்பங்களை துச்சமென எண்ணி நகரும்
ஏமாற்றங்களை அமைதியாய்க் கடக்கும்
அநீதிக்காய் ஆத்திரம் கொள்ளும் 
தவறுகளுக்குப் பொறுப்பேற்கும் 
நம்பிக்கைகளை உடையாமல் காக்கும்
தம் சார்ந்தோரை அரணெனக் காத்து நிற்கும் 
பிற மாந்தரை மதித்து நடக்கும்
எப்பொழுதிலும் கண்ணியம் தவறாதிருக்கும் 
கோபங்களை கத்தித்தீர்த்து சாந்தமாகும்
தினம் தினம் வாழ்வோடு போரிடத் துணியும்

அவன்களுக்கு
அழத்தெரியாது 

ஆண்பிள்ளை அழக்கூடாதென்று 
யார் சொல்லி வளர்த்தார்களோ
பாவம் 
அவன்களுக்கு அழத்தெரியாது 

எத்துயர் வரினும் 
எதை இழந்து போயினும் 
எவர் இடை நடுவே கைவிடினும் 
கல்லாய் இறுகிப்போவதைத்தவிர
அவன்கள்
ஒரு துளி கண்ணீர் சிந்தி 
நான் கண்டதில்லை
 
ஆம் 
அவன்களுக்காய் 
ஒருநாளும் அவன்களுக்கு 
அழத்தெரியாது 

பின்னும்
ஒரு சிறிய அன்பை 
சிதறாமல் காக்க
எவர் முன்போ
கர்வமிழந்து
உடைந்தழும் ஒருவனை
இனி 
தேவதை என்று பெயரிட்டு 
அழை


சிறிய அணைப்பு பெரிய கண்ணீரை உலர்த்தும்.  
சிறிய மெழுகுவர்த்திகள் இருளை ஒளிரச் செய்யும்.  சில சிறிய நினைவுகள் பல ஆண்டுகளாக நீடிக்கும்.  வாழ்க்கையில் சிறிய,சிறிய  விஷயங்கள் தான் பெரிய மகிழ்ச்சியை தருகிறது !!!

பேசுங்கள்,  எழுதும் முன் யோசித்து எழுதுங்கள் உங்கள் பதில் சரியாக இருக்கும்.

செலவழிக்கும் முன் அது நீங்கள் சம்பாதித்த பணமா என்று பார்த்து செலவழியுங்கள் பணத்தின் அருமை தெரியும்.

பணத்தையும் பாசத்தையும் கொடுங்கள் ஆனால் திரும்ப கிடைக்கும் என்று எதிர் பார்க்காதீர்கள்.

யார் உங்களை அவமதித்துப் பேசினாலும் நீங்கள் ஆவேசமடைந்து, அவர்களிடம் மறுத்துப்பேசி உங்களை நிரூபிக்க நினைக்காதீர்கள்.

செய்யும் செயலை முழு மனதோடு செய்யுங்கள். வெற்றி கிடைக்கவில்லை என்றாலும் நிச்சயம் நிம்மதி கிடைக்கும்.

நீங்கள் செல்லும் வழி சரியென்றால், உங்கள் எண்ணம் போலவே வாழ்க்கை நிச்சயம் அமையும் கவலையை விடுங்கள்.

ஐந்து  வினாடி புன்னகை ஒரு புகைப்படத்தை அழகாக்குகிறது என்றால். எப்போதும் அந்த புன்னகை முகத்தில் இருந்தால் வாழ்க்கை எவ்வளவு அழகாய் இருக்கும்.

தீப்பெட்டியின் கடைசி தீக்குச்சியை பற்ற வைப்பதில் உள்ள கவனம், முதல் குச்சியிலேயே வந்துவிட்டால் வாழ்க்கையை எளிதில் ஜெயித்துவிடலாம்.

சிந்திக்க  எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளுங்கள். ஆனால், செயல்படும் நேரம் வரும் போது உங்கள் சிந்தனையை நிறுத்தி விடுங்கள்.

நமக்கு கிடைக்கும் மகிழ்ச்சி
இடத்தை பொருத்து வருவதில்லை..
நம்முடன் பயணிக்கும்
மனிதர்களை வைத்தே வருகிறது

#வாழ்த்துகள்.

#வாழ்க வளத்துடன்.

#சர்வதேச ஆண்கள் திட வாழ்த்துக்கள்




No comments:

Post a Comment

Reached me today…