Tuesday, November 19, 2024

#வாழ்வியல் கற்ற பாடங்கள்!

 #வாழ்வியல் கற்ற பாடங்கள்!

—————————————

என்னை பற்றி விமர்சனம் செய்வதற்க்கு முன்,பாடுகள், நான் பயனித்த பாதையில் , ஒரு தடவையாவது உங்களால் பயனிக்க முடியுமா என்று மட்டும் பாருங்கள். . .  இது எளிதல்ல…..

கடந்த 53 ஆண்டுகளில் எந்த அங்கீகாரம் வழங்க மறுத்த நன்றி கெட்ட மனிதர்கள் மத்தியில்  ரணத்தோடு நான் ஆற்றிய பணிகளை அறிந்து பேசவும்.


#தகுதியேதடை


யாரைப் பற்றியும் யாருக்கும் தெரியாமல், புரிதல் அற்ற போகிற போக்கில் எதிர்கருத்து என்ற பெயரில் வன்மத்தைக் கக்கி விட்டுப் போக வேண்டியது. ச்சை. 

என்ன மனிதர்கள் இவர்கள்?


என்னை வாசிக்க வந்தவர்களின் பலர்

என் மௌனத்தை

மொழி பெயர்க்கத் தெரியாமல்தான்


என்னை மேலோட்டமாக புரட்டிவிட்டு

அறிதல்யற்றை வேறொரு எதிர் வினைகளை எடுத்துசெல்கிறார்கள்.

என் பிழை அல்ல…..

என் மொழி தெரியாதவர்கள் தேடிய இடத்தில் என் ழுழு வாழ்க்கையையும் இருக்கவைத்த இந்தக் காலத்தின்  மனிதர்கள் குற்றம்…


இது காலம் செய்த பிழைகள்…..

காட்சி பிழைகள்…..

மனிதர்களின்

பொறாமை,

வஞ்சகம்,

சூழ்ச்சி,

சூது

இவற்றையெல்லாம் தாண்டி கடந்து வருவது பெரிய விடயமாகும் இப்போதெல்லாம்...

இதெல்லாம் ஒண்ணுமேயில்ல,

இதையெல்லாம் கண்டுக்காம கடந்து வரணும்…



No comments:

Post a Comment

@KSRadhakrish · Oct 20