இன்று வந்த 20-10-2024 தேதியிட்ட
ஜூனியர் விகடன் கிசு கிசு பகுதியில் முன்னாள அமைச்சர் மனோ தங்கராஜ் குறித்த செய்தி என நினைக்கிறேன்.
யார் இந்த மனோ தங்கராஜ்? கடந்த காலங்களில் நான் அவரைப் பார்க்கும் போது ஜனதா கட்சித் தலைவர் முகமது இஸ்மாயில் அவர்களின் பின்னால் நின்று இருப்பார்! . நாங்களெல்லாம் “என்ன முகமது இஸ்மாயில் எப்படி இருக்கிறீர்கள்?” என்று கேட்கும் போதெல்லாம் அவர் பணிவுடன் பின்னால் வந்து கொண்டிருப்பார். அப்போது அவர் ஜனதா கட்சியில் தான் இருந்தார்!நண்பர் சுப . உதயகுமரன் அணியில் கூடங்குளம் அணுமின் நிலையம் எதிர்ப்பு இயக்கத்தில் இருந்தார்
பிறகு,கனிமொழி மூலமாக திமுகவிற்குள்
வந்தார்! உடனே திமுகவில் மாவட்ட செயலாளர்.அவருக்கு என்ன தெரியும்?
அவருக்கு பின்னால் பத்திரிகையாளர்கள் இருந்து எழுதிக் கொடுத்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படியான மனோ தங்கராஜ் போன்றவர்கள் இன்றைக்குப் பேசுவதெல்லாம் ஒரு செய்தியாகி விடுகிறது! அவருக்கு முன்னால் இருந்த பல திறமையானவர்கள் தகுதியானவர்கள் எல்லாம் திமுகவில் ஓரங்கட்டப்பட்ட நிலையில் மனோ தங்கராஜ் போன்றவர்கள் தான் செய்திகளில் விளம்பரத்திற்காக மன்றாடுவார்கள்!என்ன செய்வது?
நடக்கும் எதார்த்தத்தைச் சொல்லுகிறேன் அவ்வளவுதான்!
No comments:
Post a Comment