அண்ணாவின்திராவிடம் என சொல்லாதீர்
இதுதான்முகஸ்டாலின்மாடால் என அழையுங்கள்!
மக்களிடம் ஓட்டுக்களை விலைக்கு எளிதாக வாங்கி விடலாம் என திமிர் தைரியம்.
———————————————————
பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட நிதி சார் கோரிக்கைகளை நிறைவேற்ற வாய்ப்பில்லை என்று தெரிவித்துள்ளதன் மூலம் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்குத் தமிழக அரசு துரோகம் இழைத்துள்ளது. இதை கண்டித்து 2025 பிப்ரவரி 20ஆம் தேதி ஒரு நாள் ஒட்டுமொத்த தற்செயல் விடுப்பு போராட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளதாக தமிழக அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கம் அறிவித்துள்ளது!
லோக்சபா தேர்தலில் அரசு ஊழியர்களின் ஓட்டுகளை வாங்கி வெற்றி பெற்ற நிலையில் இனி இருக்கும் ஒன்னரை ஆண்டுகளுக்கு அவர்களின் தயவு தேவையில்லை என்பதால் இப்போது துணிச்சலாக பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வாய்ப்பு இல்லை என்று முதல்வர் கூறி இருக்கிறார்.
பாருங்கள் வரும் 2026 சட்டசபை தேர்தலின் போது நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துவோம் என மீண்டும் முதல்வர் வாக்குறுதி அளிப்பார்!
திமுக அரசிடம் தொடர்ந்து ஏமாறுவதற்கு ஆசிரியர்களும் அரசு ஊழியர்களும் ஏமாளிகள் அல்ல !திமுக அரசின் தொழிலாளர் விரோத போக்குகளுக்கு பழி தீர்க்கும் வகையில் வரும் சட்டசபை தேர்தலில் அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் சரியான பாடம் புகட்டுவார்கள் எனத் தெரிகிறது.!
எதிர்க்கட்சியாக இருந்த போது எங்களுக்காக வாதாடிய முதல்வர் இன்றுஆளுங்கட்சியாக இருக்கும் போது அலட்சியப்படுத்துகிறார்.
அவரை மீண்டும் எதிர்க்கட்சி பதிவியில் அமர வைத்தால் தான் எங்கள் பேச்சுக்கு மரியாதை கிடைக்கும் என்று எண்ணுகிறோம் என்று அரசு ஊழியர்கள் கோபப்படுகிறார்கள். ஏகப்பட்ட பணியிடங்கள் இன்னும் நிரப்பப்படாமல் இருக்கின்றன. போக குறைந்த சம்பளத்தில் ஒப்பந்தத் தொழிலாளர்களை இட்டு நிரப்புவது. மதுக்கடைகளை மட்டும் நம்பிக் கிடப்பது போன்றவை அரசின் கையாலாகாத தனத்தைத் தான் காட்டுகின்றன என்று அவர்கள் சொல்கிறார்கள்! நீதி சட்டத்துறைகளில் கூட நீதிபதிகள் நியமனம் இல்லாமல் அதிகம் காலியாக தான் இருக்கிறது.
ஆனால் திமுக இதுபோன்ற சவால்களுக்கெல்லாம் அஞ்சி நடுங்கி விடாது! ஓட்டு பதிவு நாள் அன்று ஆயிரம் இரண்டாயிரம் ரூபாய் கொடுத்தால் ஓடி வந்து மக்கள் ஓட்டு போடுவார்கள் என்று மனோ தைரியம் அதற்கு அதிகம் உண்டு.இது ஒருபுறம் இருக்கக் காசு கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் சரக்கும் பிரியாணியும் போட்டாலும் போடாவிட்டாலும் தலைமுறை தலைமுறையாக திமுகவிற்கு மட்டுமே ஓட்டு அளிக்கும் ஒரு கூட்டம் இங்கு உண்டு.
அதையெல்லாம் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் திமுக நாட்டின் அரசு ஊழியர்கள் என்னதான் போராட்டம் செய்தாலும் ஒரு நாள் தற்செயல் விடுப்பு எடுத்தாலும் கூட தன் நிலையில் இருந்து ஒரு மில்லி மீட்டர் கூட அவர்களுக்காக மனம் இரங்காது என்பது அரசு ஊழியர்களின் தொடர்ந்த வேதனையாக இருக்கிறது! 2026 தேர்தல் அதிக முக்கியத்துவம் பெற்று வருவதைத் தான் இவைகள் எல்லாம் காட்டுகின்றன!
மக்களிடம் ஓட்டுக்களை விலைக்கு எளிதாக வாங்கி விடலாம் என திமிர் தைரியம்.
அண்ணாவின்திராவிடம் என சொல்லாதீர்
இதுதான்முகஸ்டாலின்மாடால் என அழையுங்கள்!


No comments:
Post a Comment