இந்த அற்புதமான கவிஞனை எப்படி நேசிக்காமல் இருக்க முடியும். தமிழனாகப் பிறக்க வேண்டும் என்ற அவன் விருப்பம் வாசித்தபோது மனதில் மழைப்பெய்தது.
//நவம்பர் 16 ஆம் தேதி நியூ ஜெர்சியில் கவிதை வாசித்தபோது என் குரல் நன்றாகத்தான் இருந்தது. ஆனால் நான் 26 ஆம் தேதி சியாட்டிலுக்கு வருவதற்குள், குளிரடித்து என் குரல் முற்றிலும் உடைந்துவிட்டது. அந்த உடைந்த குரலில் 'சக சயனம்', 'எங்கே ஜான் ', 'பாதை ' என மூன்று கவிதைகளை வாசித்தேன் . உடைந்த மனிதர்கள், உடைந்த வாழ்க்கை. உடைந்த கவிதை. உடைந்த குரல். ஆனால் பார்வையாளர்கள் அமைதியாக அதைக் கேட்டனர் அந்தப் பெருந்தன்மைக்கு நன்றி.
1978ல் கலாகௌமுதியில் வெளியான எனது கவிதை ஒன்றில் பிழை இருந்தது. அதைச் சுட்டிக்காட்டி ஒரு மாணவர் எனக்கு ஒரு கடிதம் அனுப்பியிருந்தார். அதற்கு நன்றி என்று பதிலையும் அனுப்பினேன். நியூ ஜெர்சியில் ஒருவர் என்னை அணுகினார். என் பதில் கடிதத்தையும் உறையையும் காட்டினார் . அந்தக் கடிதம் கிட்டத்தட்ட சிதையும் நிலையில் இருந்தது
நாற்பத்தாறு வருடங்களுக்கு முன் நான் எழுதிய கடிதத்தை பூமியின் மறுபக்கத்தில் எனக்கு காட்டி என்னை ஆச்சரியப்படுத்திய அன்னியனான நண்பனே எனக்கும் உனக்கும் இடையில் என்ன இருக்கிறது!!!
சொல்லிக்கொள்ளும் அளவுக்கு எனக்கு கல்வி இல்லை. இருப்பினும், புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களின் அறிவியல் வாழ்க்கை என்னை எப்போதும் வியப்பில் ஆழ்த்துமொன்று . எனக்கு இன்னொரு பிறவி இருந்தால், அறிவியல் கல்வி கற்கத் தேவையான புத்தி வேண்டுமென்றும் பெரிய பல்கலைக் கழகம் ஒன்றில் சயன்ஸ் படிக்க வேண்டும் என்றும் விரும்புகிறேன்.
எனவே இந்தப் பயணத்தின் போது நியூயார்க்கில் உள்ள பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம் மற்றும் சான் பிரான்சிஸ்கோவில் உள்ள பெர்க்லி பல்கலைக்கழகம் ஆகியவற்றைப் பார்வையிட்டது மறக்க முடியாத அனுபவமாக இருந்தது. இனி இப்படி ஒரு கவிஞனாக இருக்கக்கூடாது கேரள பொது மக்கள் மத்தியில் எந்த வகையிலும் அறியப்படக்கூடாது அறிவாளியாக தமிழகத்தில் பிறக்க வேண்டும். பெர்க்லி அல்லது பிரின்ஸ்டனுக்கு வந்து அறிவியல் படிக்க வேண்டும் இப்படி ஆசைப்படுவதற்கு யாருடைய அனுமதியும் தேவையில்லையே.
இந்தப் பயணத்தில் நியூயார்க் மற்றும் சான் பிரான்சிஸ்கோவில் உள்ள அருங்காட்சியகங்கள் சிறந்த அனுபவங்களாக இருந்தன. ரோடினின் அற்புதமான சிற்பங்கள், பிக்காசோ, சால்வடார் டாலி, ப்ராக், மோனெட், பொல்லாக் ஆகியோரின் வரலாற்று சிறப்புமிக்க ஓவியங்கள்.. வாழ்க்கையில் ஒரு முறையாவது பார்ப்பேன் என்று எதிர்பார்க்காத இந்த மகத்துவங்களின் முன் நின்றபோது வாழ்க்கையில் நானனுபவித்த புறக்கணிப்புகள், அவமானங்கள் இழிவுகள் என அனைத்தும் ஒரு கணம் மறந்துவிட்டன.
வாழ்க்கையைப் பற்றிய கடுமையான புகார்கள் மறந்துவிட்டன. சுனில் இளையிடத்தின் அறிவுபூர்வமான சொற்பொழிவுகளைக் கேட்க முடிந்தது, வைக்கம் முஹம்மது பஷீரின் “மதிலுகள்” பிரமோத் பையன்னூரின் சிறப்பான நடிப்பினூடெ பார்த்தது மறக்க முடியாத மற்றொரு அனுபவமாக மாறியது. பஷீரிடம் ஒரு வார்த்தை... பூமியின் மறுபக்கம்கூட உன் நாராயணியின் புலம்பல் என் கண்ணீரை உடைத்தது. கடைசிக்காலத்தில் நீங்கள் எனக்களித்த மகிழ்ச்சிக்கு அனைவருக்கும் நன்றி. வீட்டுக்குத் திரும்பப் போகிறேன். ஒரு கிழிந்த வாழ்க்கை எனக்கு அங்கே காத்திருக்கிறது.//
No comments:
Post a Comment