Saturday, May 3, 2025

திருநெல்வேலி மாவட்டத்தில் தோழர் கே செல்லையாவைத் தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன். 18.04.1925 ல் சிவகிரியில் பிறந்த இவரது அரசியல் வாழ்க்கை 1942 ல் தொடங்கியது.


 திருநெல்வேலி மாவட்டத்தில் தோழர் கே செல்லையாவைத் தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன். 18.04.1925 ல் சிவகிரியில் பிறந்த இவரது அரசியல் வாழ்க்கை 1942 ல் தொடங்கியது.

முதுபெரும் தோழர்களான சேதுப்பிள்ளை என்ற சுப்பிரமணியம் துரைசாமி கே தட்சிணாமூர்த்தி கே சி ராமகிருஷ்ணன் ஆகியோரைக் கொண்ட கம்யூனிஸ்ட் கட்சி கிளை 1942 டிசம்பர் 19 ஆம் நாள் சிவகிரியில் துவக்கப்பட்டது.மாவட்ட கட்சி அமைப்பாளர் ஐ வி ராமகிருஷ்ணன் என்ற தோழர் கிளையை அமைத்தார்.
அப்போதிலிருந்து தன்னை கட்சியில் இணைத்துக் கொண்ட கே. செல்லையா தனது இறுதி மூச்சு வரை கட்சிப் பணிகளைச் செய்தார். என் மீது அன்பு கொண்டவர்.
1945 இல் கம்யூனிஸ்டுகளால் நடத்தப்பட்ட உணவு தானிய கடத்தல் பதுக்கல் எதிர்ப்பு போராட்டத்தில் தோழர் கலந்து கொண்டார். தோழர் செல்லையா மற்றும் 18 தோழர்கள் மீது கொள்ளையடிப்பு குற்றம் சாட்டப்பட்டு ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. 1952 ல் விடுதலை செய்யப்பட்டார்கள்.இந்த வழக்கில்கட்சி சார்பாக என்.டி.வானமா மாலை, பாளை என்.சண்முகம் வாதாடினார்கள்.
சிறையில் இருந்த தோழர்கள் மீது சிறை வார்டன்களைத் தாக்கியதாக ஒரு வழக்கும் இருந்தது.
1946 ஆம் ஆண்டு ஜவஹர்லால் நேரு காஷ்மீரில் கைது செய்யப்பட்டதை க் கண்டித்து கட்சி சார்பில் ஓர் ஆர்ப்பாட்டம் இவர் தலைமையில் நடந்தது.
1952 ஆம் ஆண்டு கட்சியின் முழு நேர ஊழியர் ஆனார். சிவகிரி கிளைச் செயலாளராக இருந்து சங்கரன்கோவில் தாலுகா செயலாளராக உயர்ந்தார் தனது கட்சிப் பணிகளால். தோழர் வி எஸ் காந்தி மாவட்டச் செயலாளராக இருந்த காலத்தில் மாவட்டக் குழு உறுப்பினராக இருந்தார். மாவட்டத் துணைச் செயலாளராகவும் இருந்தார். தோழர் வி எஸ் காந்தியின் மறைவிற்குப் பிறகு மாவட்டச் செயலாளராக 13 ஆண்டுகள் இருந்தார்.
1968 ஆம் ஆண்டில் மருத்துவ சிகிச்சைக்காக சோவியத் யூனியன் சென்று திரும்பினார்.
இன்று (28.01.2003 - 28.01.2025) அவரது நினைவு தினம்.

No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்