Saturday, May 3, 2025

 'அஃதாற்றாது எழுவார்' மட்டும் கொண்டாடும் நிலை ஆகிவிட்டது...

உழவாரை எல்லாம் மறந்து...
உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் வீணில் உண்டுகளித்திருப்போரை கிந்தனை செய்வோம் விழலுக்கு நீர்பாய்ச்சி மாயமாட்டோம்-வெறும் வீணருக் குழைத்துடலம் ஒயமாட்டோம
பாரதியின் கூற்றுப்படி உழவர்கள் உழைத்து மாய்ந்தது போதும் . இனி விவரம் கொண்டு வேலை செய்து, உன் உயர்வை காண வழியை பாரு. இனி வலி தாங்கும் சுமை தாங்கியாய் நில்லாமல், இனி உன் உரிமை காண, இந்த பொங்கலை கொண்டாடி மகிழ்ந்திடு.
அனைவர்க்கும் மாட்டு பொங்கல் நல்வாழ்த்துக்கள்...
இன்று உழவுக்குத் துணை செய்த மாடுகளுக்கு நன்றி தெரிவிக்கும் விழா. பல இடங்களில் ஏறு தழுவுதல் நிகழ்ச்சி நடக்கும் காலம். சங்க காலத்திலிருந்து கொண்டாடப்படும் இந்த விழாவை, நம்முடைய இதிகாச புராணங்களின் நிகழ்வுகளோடு ஒப்பிட்டுப் பல சங்கப் பாடல்கள் உண்டு. ஓர் உதாரணம்
ஏறு தழுவுதல் நடந்து கொண்டிருக்கிறது. பால் போன்ற வெள்ளை நிறமுடைய காளையை ஒருவன் அடக்க முயல்கிறான். அவனை ஒரு கருமை நிறக் காளை குத்துகிறது. இது எப்படி இருக்கிறது என்றால் நிலவை ராகு எனும் அரவு விழுங்க முயலும் போது நீல நிறத்துத் திருமால் அதை விடுவிக்க முயல்வதுபோல இருக்கிறதாம். பாடல்
பால்நிற வெள்ளை எருத்தத்துப் பாய்ந்தானை
நோனாது குத்தும் இளங் காரித் தோற்றம் காண்
பால் மதி சேர்ந்த அரவினைக் கோள் விடுக்கும்
நீல் நிற வண்ணனும் போன்ம்”
பல வீரர்கள் காளைகளை அடக்கப் போராடிய அந்தக் களம் எப்படி இருந்தது ?
கோடு இடை நுழைபவர், கோள் சாற்றுபவரொடு
புரிபு மேல் சென்ற நூற்றுவர் மடங்க,
வரி புனை வல்வில் ஐவர் அட்ட
பொரு களம் போலும்
அதாவது நூறு பேர் கொண்ட கௌரவர்களோடு ஐவரான பாண்டவர் போராடிய குருக்ஷேத்திரப் போர்க்களம் போல ஜல்லிக்கட்டுக் களம் இருந்ததாம்
கலித்தொகை சொல்லும் இந்தக் காட்சி தமிழகத்தில் சனாதனம் பன்னெடுங்காலமாக மக்கள் வாழ்வில் ஒன்றிவிட்ட நிலையை எடுத்துக்காட்டுகிறது. சனாதனத் திருவிழாவான ஏறு தழுவுதலைக் கொண்டாடுவோம்.

No comments:

Post a Comment

சுதந்திர போராட்ட வீரர்

  #வறுமையி்ல்வாழ்ந்தமுன்னாள்அமைச்சர் #இராமையா —————————————————————————- சுதந்திர போராட்ட வீரர் முன்னாள் இந்திய அரசியல் நிர்ணய சபை உறுப்ப...