நேற்று, 10-7-2025 தென்காசி மாவட்ட தென்மலையில் நடந்த நதிநீர்த் திட்டங்களின் சீராய்வு குறித்த கலந்துரையாடலில் செண்பகவல்லி அணையின் மறு சீரமைப்பு பற்றி விலாவாரியாக எடுத்துரைத்தேன். இச்சந்திப்பில் சுற்றி உள்ள கிராமங்களில் இருந்து வந்திருந்த விவசாய மக்களிடம் நீர் பிடிப்புக் காலங்களில் செண்பக வல்லிஅணையின் கொள்ளளவும் கோடையில் நமது நீர் ஆதாரத்திற்கு அணை எவ்வளவு முக்கியமாக இருக்கிறது என்பதைப் பற்றியும் அதன் சீரமைப்பு ஏன் இன்றைக்கு அவசியமானதாக இருக்கிறது என்பதோடு செண்பகவல்லி அணையின் வரலாறு குறித்தெல்லாம் விளக்கினேன்.
இது விடயத்தில் அரசு மெத்தனம் காட்டாமல் அதைச் சீர் செய்ய வேண்டும் என்பதாகப் பேசி முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட்டன.
தென் தமிழகம் வளம் பெற,
இந்த நீர் வள திட்டங்கள் என்ற எனது பிரசுர நூல் வெளியிடப்பட்டது. #விருதுநகர், #தென்காசி, #தூத்துக்குடி, #திருநெல்வேலிமாவட்டங்களில்
இதனால் வளம் பெறும்.





No comments:
Post a Comment