கல்கி கிருஷ்ணமூர்த்தி: இலக்கியப்பேரோசை.
~~
என் நண்பரும் பேராசிரியர் பெருமா
னுமான அன்பர் சொன்னார்:தமிழ்
செல்வன்" ஆகச் சிறந்த புதினம்.ஆகச்
சிறந்தது என்பதன் பொருள் குறித்து
ஐயமுண்டு.அவர் ஒரு பேராசிரியர்
என்பதால் கல்கி குறித்தான அவரது
மதிப்பீடு அசுவாரசியமானதாகத்
தான் இருக்கும். எனவே ஒரு தலையாட்
டலோடு நிறுத்திக் கொண்டாகிவிட்
டது.உண்மையில் புதின வரலாற்றில் பொன்னியின் செல்வனையும்
கல்கியையும் தவிர்த்து விடமுடியாது
என்று மனம் ஒப்பாமல் -ஏற்கத்தான்
வேண்டியிருக்கிறது.அந்த நேரத்தில்
இருந்த இலக்கியத் தொய்வை நுட்ப
மாகக் கவனித்து அவதாரமெடுத்த
கெட்டிக்காரத்தனமும் முக்கியமானது.
சாணக்கிய நீதியின்படி ஒன்றுமே
இல்லாத இடத்தில் ஏதோ ஒன்று
என்றபடியும் 'கல்கி'யின் பிரவேசமும்
கொண்டாட்டமும் இருந்தன. இது ஒரு
விசனம்தான்.என் செய்ய? சோதனை!
வண்டிவண்டியாக லாரி லாரியாக
எழுதிக் குவித்தது சாதனைதான்.
எழுத்து 'யாவாரம்'என்ற சொல்லாட்சி
கல்கியின் உள் நுழைவுக்குப் பிறகே
முழுப் பொருள் கொண்டது.தன் சக
தர்மிணி கல்யாணியின் பெயர் தன்
பெயரின் முதலெழுத்து என ஒக்கப்
பண்ணி கல்கி என்ற பெயரை வைத்
துக் கொண்டார். இல்லை விஷ்ணு
வின் எதிர்கால அவதாரமான கல்கி
யின் பெயரைச் சூட்டிக் கொண்டார்
என்பாரும் உளர்.நவசக்தியில் உதவி
ஆசிரியராக இருந்தபோது திரு.வி.க
அபிமானத்தால் கல்யாணசுந்தரம்
என்பதிலும் தன்மனைவி கல்யாணி
பெயரிலும் 'கல்கி'யானார் என்றும்
வாதிடுவர்.அதிஷ்டம்தான் கிருஷ்ண
மூர்த்திக்கு கல்கி என்ற புனைப்பெய
ரைத் தந்தது என்பது என் அபிப்ராயம்.
வாசன் மூலமாக ஆனந்தவிகடனுக்கு
வந்து ஸ்திரப்பட்டபின் வெளியேறி
கல்கிக்குள் பிரவேசம்.சரிந்து கொண்
டிருந்த இதழ்விற்பனையை72 ஆயிரம்
பிரதிகளுக்குமேல் உயர்த்தியது கல்கி
யின் எழுத்துதான்.வாசிப்புப் பழக்க
த்தை அபாரமானவகையில் வளர்ந்
ததே கல்கியின் எழுத்தினால்தான்.
இதனால் மணிக்கொடி யின் காத்தி
ரமான எழுத்து வித்தகர்கள் பொறா
மைப்பட்டனர் என்ற அபத்தக் கிசு
கிசுப்பும் இருந்தது நகைச்சுவை.
பொன்னியின் செல்வன் கூட்ஸ் வண்
டித்தொடர் மாதிரி.டக டக வென இழுத்
துக் கொண்டேபோகும்.அடுத்தவாரம்
என்ன என்ன... என்ன..என்ன என
வாசகனை பெருத்த எதிர்பார்ப்போடு
நெஞ்சுபடபடக்க-ஏகப்பட்ட திகிலோடு
காத்திருக்கவைத்தது சாமர்த்தியம்.
சிவகாமியின் சபதம், பார்த்திபன்
கனவு ,அலைஓசை,தியாக பூமி எனப்
பெரிய பெரிய தலையணை 'சைசு'க்கு
புதினங்கள்.ஒரே மூச்சில் படித்துவிட
வும் செய்தனர்.'தூரஸ்த்ரீகளுக்கு'
கல்கியின் எழுத்து வாசிப்பு ஒரு
வரம். ஆசாரப் பேணல்.
ராஜகோபாலாச்சாரியார் சகவாசத்
தால் சுதந்திரப் போராட்ட ஈடுபாடு-
நான்கு மாத ஜெயில் எல்லாம் முக்கிய
பதிவுகள்.மீ.ப.சோமு, ரசிகமணி,
கல்கி-மூவர்கோஷ்டியே இலக்கியச்
சட்டாம்பிள்ளைகள்.கர்நாடகம் என்ற
பெயரில் இசை விமர்சனக் கட்டுரை
கள் விளாசினார்.இதன்மூலம் தனக்
கும் இசைஞானத்திற்கும் ஸ்நானப்
ப்ராப்த்தி உண்டென்று நிரூபணம்
செய்து புன்முறுவல் செய்தார்.
பல்லவர்கள், சோழர்கள், கொஞ்சம்
பாண்டியர்கள் சில சிற்றரசர்கள் எனப்
பாத்திரத் தேர்வு படுநேர்த்தியானது.
கவசங்கள், கத்திகள், பெரிய வாள்கள்
தூக்கிக் கொண்டு அலைந்தார்கள்.
ஒற்றர்கள், அந்தப்புரம், சிவிகைகள்,
மந்திராலோசனைகள் கச்சையணி
ந்த தேவியர், சூழ்ச்சிகள் என்பவையே
இவரது கதைகளின் சாரம்.வரலாறு
என்ற வஸ்துவைக் இஷ்டத்திற்கு
அடித்து வளைத்து நசுக்கி நாகாசு
பண்ணி எல்லாத்தரப்பையும் வாசிக்க
வைத்துவிட்ட கெட்டிக்காரத்தனம்
லேசுப்பட்டதல்ல.வடுவூர் துரைசாமி
ஐயங்கார், வை.மு. கோதைநாயகிய
ம்மாள்,கே.ஆர்.ரங்கராஜூ வகையறா
க்களின் வாசக மந்தைகளை தன்
வசம் தள்ளிக் கொண்டுவந்தார்.
அவரது பழுவேட்டரையரும் ஆதித்த
கரிகலனும் மதுராந்தகனும் இன்ப
வல்லி போன்ற ராஜகுல மங்கையர்
களும் வாசகர்களை அலைக்கழித்த
னர்.தியாகபூமி கள்வனின் காதலி
சினிமாவாகப் பிரபலம் பெற்றன.
உபயம் டைரக்டர் கே.சுப்ரமணியம்.
வந்தியத்தேவனின் குதிரைக்குளம்
பொலி இன்றும் கேட்கிறது என்று
அரற்றும் சிநேகித சிகாமணிகளும்
எனக்குண்டு.பொன்னியின் செல்வன்
பல ரவுண்டுகள் மறுபிரசுரமாகிக்
கொண்டிருப்பது குறித்தும் பேசுவார்.
இன்னும்கூட வரும் என்பார் பூரிப்பாய்.
என் செய்ய விதியின் வலி பெரிதுதான்.
"யோவ் கல்கி சமாச்சாரமெல்லாம்
அலெக்சாண்டர் டூமாஸ், ன் தமிழ்
வடிவம்" என்று க.நா.சு சிரிப்பார்.
வில்லியம்தான் பழுவேட்டரையர்
ரிச்சர்டுதான் அநபாயச் சோழன்.
மேரி ஜாய்ஸ் தான் இன்ப வல்லி
எனச் சிரிப்பாய் நிறையச் சொல்வார்.
நம்ம பாரதி மஹாகவி அல்ல என
கச்சைகட்டிக் கொண்டு ஆடியது
கல்கி.பின் ஏனோ பாரதிமேல் இரக்கம்
மிகக்கொண்டு பின்னால் எட்டயபுர
த்தில் மணிமண்டபம் கட்டி பாரதி
விழா எடுத்து கழுவாய் தேடிக் கொண்
டார் எனச் சொல்லிக் கேட்டிருக்கிறது.
கல்கியின் வாரிசாக விக்ரமன், கௌதம நீலாம்பரன், கோவி-
மணிசேகரன் என்று ஒரு கோஷ்டி
எழுதியது.கடைசியாக கல்கியின்
வாரிசாக யாருமில்லாதது தமிழு
லகத்தின் பேரதிஷ்டம்தான்.
கல்கியின் வாரிசு கல்கியே.
இன்றும் கல்கிக்கு நல்ல சந்தையுண்டு.யுகம்தாண்டியும்
வாராந்தரிகளில் வந்து கொண்டே
டே..டே...டே........இருக்கும்.
No comments:
Post a Comment