___________________________________________________________
ஒப்பாரும் மிக்காரும் இல்லாத தலைவர் கலைஞர் அவர்கள் நாளை
தன்னுடைய 92ம் அகவையில் அடியெடுத்துவைக்கின்றார்.
தமிழக அரசியல் கடந்த அரை நூற்றாண்டுகாலம் அவரைச் சுற்றியே சுழன்று வருகின்றது. தமிழகத்தின் முதல்வர், கழகத்தின் தலைவர், அகில இந்திய அரசியலில் பல சமயம் பிரதமர், குடியரசுத் தலைவர்களை உருவாக்கியவர். மாநில சுயாட்சிக்கு இந்திய துணைக்கண்டத்தில் காரண காரியத்தோடு குரல்கொடுத்த தலைவர்.
சமூக நீதிக்காக, தமிழர்களின் உரிமைக்காக போராடிய தலைவர். இந்தியாவிலேயே இன்றைக்கும், இந்தவயதிலும் இடைவிடாது இயங்குகின்ற ஒரே அரசியல் தலைவர். ஏன் உலகிலேயே இந்தவயதில் எந்தத் தலைவரும் இத்தனை ஆண்டுகாலம் அரசியல் களத்தில் இயங்கியதில்லை.
ஆபிரஹாம் லிங்கன், வின்ஸ்டன்ட் சர்ச்சில், நாசர், சுகர்னோ, டிட்டோ போன்ற உலகத்தலைவர்கள் கூட குறிப்பிட்ட கால அளவில் தான் பொதுவாழ்வு என்ற தளத்தில் இருந்தனர்.
எப்போதும் பிரச்சனைகளின் வளையங்களுக்குள்ளே சந்தித்து அவற்றை எல்லாம் எதிர்கொள்கின்ற தலைவராக, அரசியல் போர்க்களத்தில் இருக்கும் சக்திமிக்க ஆளுமைதான் தலைவர் கலைஞர்.
அவர் வழியைப் பின்பற்றுவதே அவர் பிறந்தநாளுக்கு நாம் செய்கின்ற கடமையும், பொறுப்பும் ஆகும். வாழ்க தலைவர் கலைஞர் அவர்கள்.
- கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
02-06-2015.
No comments:
Post a Comment