ரோந்து படைவீரர்களுடன் டோர்னியர் விமானம் வங்கக் கடலில் காணாமல் போய்விட்டதாக சமீபத்தில் செய்தி வந்தன. காரைக்கால், சீர்காழி அருகே வங்கக் கடலில் மூழ்கியதாகச் சொல்கிறார்கள். மத்திய மாநில அரசுகள் இதுவரைக்கும் என்ன கிழித்தார்கள் என்று தெரியவில்லை. இந்த மெத்தனப்போக்கு தமிழ்நாட்டில் எல்லா பிரச்சனைகளில்ளும் தொடர்வது வாடிக்கையாகிவிட்டது.
ரோந்து விமானம் காணாமல் போய் இன்றோடு ஒன்பதாவது நாள் ஆகின்றது. விமானம் காணாமல் போனதாகக் கூறப்படும் பகுதியில் எண்ணெய்ப் படலம் மிதப்பதாகவும், சமிக்ஞைகள் கிடைத்திருப்பதாகவும் சொல்கிறார்கள். ஆனால் இதுவரை எந்த தெளிவான பதிலும் இல்லை.
கச்சத்தீவு, காவிரிப்பிரச்சனை, முல்லைப்பெரியார், தேனி நியூட்ரினோ, தஞ்சை மீத்தேன், மீனவர் பிரச்சனை, விவசாயிகள் நில ஆர்ஜிதம், கூடங்குளம் போன்ற தமிழக பிரச்சனைகளில் மத்திய மாநில அரசுகள் பாராமுகத்துடன் சோம்பல்தனமாக நடந்துகொள்வது போல இந்தபிரச்சனையையும் கண்டுகொள்ளாமல் இருக்கின்றன.
-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
16-06-2015.
No comments:
Post a Comment