Wednesday, June 10, 2015

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் - University of Cambridge.







கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் மையப் பகுதிகளில் இவ்வாறு நீண்ட நீர்நிலைகள் உள்ளன. அதில் படகுப் போக்குவரத்தும் நடைபெறுகின்றது. இந்த காட்சிகளைப் பார்த்ததும் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகம் சென்றபோது படகில் பயணித்த அனுபவம் நினைவுக்கு வந்தது.

அச்சமயத்தில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர்.கிருஷ்ணசாமியும் உடன் வந்திருந்தார். இப்படியான ரம்மியமான சூழ்நிலைகள் பல்கலைக் கழகங்களில் அமையவேண்டும்.

இந்தியாவில், டெல்லி ஜவகர்லால்நேரு பல்கலைக்கழகம், ஜாமியா மில்லியா, வாரணாசியில் பனாரஸ் இந்து பல்கலைக்கழகம், அலிகார் பல்கலைக்கழகம், பிலானியில் பிட்ஸ் , ஐதராபாத்தில் உஸ்மானியா, அண்ணாமலைப் பல்கலைக்கழகம் போன்ற கல்விகலாசாலைகள் ஒரே இடத்தில் தங்கி கற்கக் கூடிய நிலையில் இம்மாதிரி சூழ்நிலைகள் அமையவேண்டும்.

-கே.எஸ்.இராதாகிருஷ்ண்ன்.
10-06-2015

No comments:

Post a Comment

Life is like a party, many people will come, some leave early, some stay all night, some laugh with you, some laugh at you and some show up late.

  Life is like a party, many people will come, some leave early, some stay all night, some laugh with you, some laugh at you and some show u...