குஜராத்தில் நடக்கும் உள்ளாட்சித் தேர்தலில் கட்டாயம் அனைவரும் வாக்களிக்கவேண்டும் என்று மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
அப்படி வாக்களிக்காதவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது பற்றியும் விவாதம் நடத்தப்பட்டு வருகின்றது.
உலக அளவில், ஆஸ்திரேலியா, அர்ஜெண்டைனா , பிரேசில், காங்கோ, பெல்ஜியம், எகிப்து, கீரீஸ், லெக்சம்பெர்க், சைப்ரஸ், ஈக்வாடார், கோஸ்டோரிகா, மெக்ஸிகோ, பனாமா, பெரு, உருகுவே, பராகுவே, நவ்ரு, மலேஷியா, சிங்கப்பூர், தாய்லாந்து, வடகொரியா நாடுகளில் வாக்களிப்பது என்பது கடமை மட்டுமல்லாமல் கட்டாயம் என்றும் அந்தந்த நாடுகள் சட்டங்களாக்கிவிட்டன.
அந்நாடுகளில் அவ்வாறு வாக்களிக்காவிட்டால், ரேசன் கார்டுகள், ஓட்டுநர் உரிமம், அரசுமானியங்கள் போன்றவை ரத்து செய்யப்படும். பாஸ்போர்ட்டுகள் இவர்களுக்கு வழங்கப்படுவதில்லை. ஒருவிதத்தில் வாக்களிப்பது கட்டாயம் என்று மொழிவது நல்லதுதான். அது ஜனநாயகக் கடமை. ஆனால் நம் நாட்டிலோ வாக்குகள் விலைக்குப் போகின்றன.
முதலில் நியாயமான வாக்குப் பதிவை உறுதி செய்வதோடு, வாக்களைப்பதைக் கட்டாயமாக்கவேண்டும்.
-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
No comments:
Post a Comment