Saturday, June 27, 2015

கடம்பூர் போளி.

நண்பர் நாறும்பூ நாதன் தெற்குச் சீமையில் கடம்பூரில் கிடைக்கும் போளியைப் பற்றி எழுதிய பதிவு கவனத்தை ஈர்த்தது.

*****
கடம்பூர் போளி
------------------------
ஒரு தின்பண்டம் ரயில்வே நிலையத்தால் மட்டுமே புகழ் பெற்று விளங்கியது என்று சொன்னால் நம்ப சற்றே சிரமமாக இருக்கும்.

ஆம்.அது கடம்பூர் போளி. திருநெல்வேலிக்கும் கோவில்பட்டிக்கும் நடுவே உள்ள இந்த சிற்றூர் வெறும் 5000 மனிதர்களுக்கும் குறைவானவர்கள் வசிக்கும் ஊர்.

சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு வசித்த ஒரு ஐயர் குடும்பம் இந்த இனிப்பு உணவை தயாரித்து ஊருக்குப் பெயர் சம்பாதித்துக் கொடுத்து விட்டு வெளியேறி விட்டது.
 (ராமசுப்பு ஐயர் ,கிருஷ்ணா ஐயர் என்ற இரு சகோதரர்கள் )

இவர்கள் தாம் இந்த சிற்றுண்டியை வீட்டில் வைத்து தயாரித்து இரண்டு ரயில்கள் மட்டுமே நிற்கும் இந்த கடம்பூர் ரயில்வே நிலையத்தில் விற்பனை செய்து பிரபலப்படுத்தினார்கள்.

இந்தக் குடும்பத்திடம் தொழில் படித்த சிலர் இப்போது போளி வியாபாரம் செய்து வருகிறார்கள். இப்போது ரயில்வே நிலையத்தையும் தாண்டி, பல ஊர்களில் இருந்தும் ஆர்டர் கிடைத்து விற்பனை அதிகரித்துள்ளது.
கடம்பூர் போளி என்ற பெயர் பிரபலம் அடைய ரயில்வே துறைக்கு கணிசமான பங்கு உள்ளது.

எனது நண்பன் எழுத்தாளர் உதயசங்கர் அங்கே ரயில்வே ஸ்டேசன் மாஸ்டர் ஆகப் பணி புரிந்தான். எனக்கு கடம்பூர் என்றால் முதலில் உதயசங்கரும், பின்னர் போளியும் தான் நினைவுக்கு வரும்.


No comments:

Post a Comment

july 1

  Good and deep meaningful aspects…  @narendramodi @nsitharaman @PawanKalyan @EPSTamilNadu @NainarBJP @annamalai_k @BJP4TamilNad...