Sunday, June 28, 2015

கட்டபொம்மன் நினைவிடம்





இன்று (28-06-2015)  நாடாளுமன்ற உறுப்பினர் தங்கவேலு அவர்களுடன் கோவில்பட்டியிலிருந்து திருநெல்வேலிக்குப் பயணிக்கும் போது கயத்தாறு சாலையில் உள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவிடம் பார்க்க முடிந்தது.

கட்டபொம்மன் தூக்கிலிட்ட மாமரம் இருந்த இடத்தில்  இடத்தில் ஆளும்  ஜெயலலிதா அரசு நினைவு மண்டபம் அமைத்துள்ளது. அது கட்டபொம்மனின் பராக்கிரமத்திற்கும் கம்பீரத்திற்கும் பொருத்தமாகத் தெரியவில்லை.
கரிசல் மண்ணில் அளவைக்குப் பயன்படுத்தும் ஆழாக்குப் படிகளை ஒன்றன் பக்கத்தில் ஒம்று வைத்ததுபோலக் காட்சி அளிக்கின்றது.

1799 செப்டம்பர் 4ம் நாள்  பாஞ்சாலங்குறிச்சி  கோட்டை வெள்ளையர்களால் முற்றுகையிடப்பட கட்டபொம்மன் தன்னுடைய படைவீரர்களோடு கோலார்பட்டி வந்து பின், புதுக்கோட்டைக்குச் சென்று காடுகளில் மறைந்திருந்தார்.

அங்கு தொண்டைமான் உதவியால் கைதுசெய்யப்பட்டு 1799ம் ஆண்டு அக்டோபர் 16ம் நாள் கயத்தாறு சாலையிலிருந்த புளியமரத்தில்  தூக்கிலிடப்பட்டார். தமிழக வரலாற்றில் முக்கிய நிகழ்வாக வீரபாண்டியக் கட்டபொம்மனின் வரலாறு அமைந்தது. அவ்வாறு தூக்கிலிடப்பட்டதாக கருதப்பட்ட இடத்தில் கட்டபொம்மனுக்குச் சிலையும், தற்போது  இந்த நினைவு மண்டபமும் எழுப்பப்பட்டுள்ளது.

புதுக்கோட்டையிலிருந்து கைதுசெய்யப்பட்டு விசாரணைக்காக கயத்தாற்றில் கட்டபொம்மன்  தங்க வைக்கப்பட்ட கட்டிடம் கயத்தாறு மெயின் ரோட்டில் அமைந்துள்ளது. அது எந்தவிதமான பராமரிப்பும் இல்லாமல் சிதிலமடைந்து கிடக்கிறது. எத்தனையோ முறை கோரிக்கைகள் வைத்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை ஏனோ?

-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
28-06-2015.

No comments:

Post a Comment

july 1

  Good and deep meaningful aspects…  @narendramodi @nsitharaman @PawanKalyan @EPSTamilNadu @NainarBJP @annamalai_k @BJP4TamilNad...