Monday, June 15, 2015

இந்திராகாந்தி ஆட்சியில் அவசரநிலை 1975. - Emergency 1975. (Article - 1)





சரியாக நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால் 25-06-1975 அன்று அன்றைய பிரதமர் இந்திராகாந்தி அவர்கள் நாட்டில் அவசர நிலையை பிரகடனம் செய்தார்.  குடியரசுத் தலைவர் பக்ருதீன் அலி அகமதுக்குத் தன் பரிந்துரையை அனுப்பிவைத்தார்.

குடியரசுத் தலைவர் பக்ருதீன் அலி அகமது அதனை ஏற்றுக்கொண்டு, " In exercise of the powers conferred by Clause 1 of Article 352 of the Constitution, I, Fakhruddin Ali Ahmed, President of India, by this Proclamation declare that a grave emergency exists whereby the security of India is threatened by internal disturbance. " -New Delhi 25th June 1975. -PRESIDENT.  இவ்வாறு அவசரநிலையினைப் பிரகடனம் செய்தார். முறையாக அமைச்சரவைக் கூடாமல் எழுதி அனுப்பப்பட்ட பரிந்துரை அது. அதன்பிறகே முறைப்படி தட்டச்சு செய்து அனுப்பப்பட்டதாக தகவல்..








ஜனநாயகத்தை மீறி இந்திராகாந்தி சர்வாதிகாரத்தனமாக நடந்துகொண்டதை, ஜெயப்பிரகாஷ் நாராயண் தலைமையில் அனைவரும் எதிர்த்தனர். ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். பத்திரிகை சுதந்திரம் போன்ற ஜனநாயக உரிமைகள் கூட பறிக்கப்பட்டன.

1971ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் ரேபரேலி நாடாளுமன்ற தொகுதியில் இந்திராகாந்தி போட்டியிட்டபோது, அவரை எதிர்த்து ராஜநாராயண் போட்டியிட்டார். அப்போது இந்திராகாந்தி அவர்கள் தேர்தலில் அரசு இயந்திரத்தைப் பயன்படுத்திவிட்டார் என்று தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பு இந்திராகாந்திக்கு பாதகமாக அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் முடிந்தது.

கயைமைத் தனமாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக நான்காவது இடத்தில் இருந்த ஏ.என் ரேயை பரிசீலனையே இல்லாமல்  பதவிமூப்பிலிருந்த நான்கு உச்சநீதிமன்ற நீதிபதிகளைப் புறக்கணித்துவிட்டு நியமனம் செய்தார். இதையெல்லாம் எதிர்த்து பீஹாரில் ஜெயப்பிரகாஷ் நாராயண் முழுப்புரட்சி என்ற போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தார்.

இப்படியான சூழலில் இந்திராகாந்தியின் இளைய புதல்வர் சஞ்சய் காந்தி, சித்தார்த சங்கர் ரே, பி.சி.சுக்லா, திரேந்திர பிரம்மச்சாரி ஆகியோர் அவசரநிலையை அறிவிக்க காரணமானவர்களாக இருந்தார்கள்.

ஜெயப்பிரகாஷ் நாராயண், மொரார்ஜி தேசாய், வாஜ்பாய், ஜார்ஜ் பெர்னாண்டஸ், எல்.கே.அத்வானி, நானாஜி தேஷ்முக், தலைவர் கலைஞர், சாந்தி பூஷன், ராஜநாராயணன், நீதிபதி ஜக்மோகன்லால் சின்ஹா, பத்திரிகையாளர்கள் கொயாங்கோ, குல்தீப் நய்யார், நிகில் சக்ரவர்த்தி போன்றோர் துவக்கத்திலிருந்தே அவசரநிலையினை எதிர்த்தனர்.

அரசியல்கட்சிகளான, ஸ்தாபன காங்கிரஸ், சுதந்திரா கட்சி,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, சோஷியலிஸ்ட் கட்சிகள், தி.மு.க, ஜனசங்கம், பார்வேர்ட் ப்ளாக், தேசிய மாநாடு கட்சி, அகாலி தளம் போன்றவை மட்டுமில்லாமல் , ஆனந்த மார்க், மாவோ மற்றும் நக்சலைட் இயக்கங்களும் எதிர்த்தன.

புவேஸ் குப்தா தலைமையேற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முழுமையாக அவசரநிலையை ஆதரித்தது. பின் அதை தவறு என தங்கள் நிலைப்பாட்டை தெரிவித்தது.


அவசரநிலை அறிவித்தவுடன் இந்திராகாந்தி அவர்கள் அகில இந்திய வானொலியில் பேசிய பேச்சு ...
S S Ray to Indira Gandhi six months before Emergency: Crack down, get law ready
“The plan to be put into operation” was drafted in the note — dated January 8, 1975

1975 emergency, india emergency, 1975 india emergency, s s ray, Siddhartha Shankar Ray, indira gandhi, congress, coomi kapoor, coomi kapoor book, coomi kapoor book review, emergency, india emergency period, indira gandhi, sanjay gandhi, congress, indira gandhi emergency, india news, book review, The Emergency: A Personal History, indian express books, indian express

Mrs Gandhi declares Emergency from AIR studios on June 26, 1975. (Source: Express Archives)

President Fakhruddin Ali Ahmad signed the ordinance on the night of June 25. According to Kapoor, the list of prominent politicians who were taken into custody subsequently was “personally vetted by Gandhi, who removed and added names till the last date”.

Published by Penguin Books India and set to hit the stands soon to mark the 40th anniversary of the imposition of Emergency, the book also includes revealing anecdotes about the Opposition’s response, featuring personalities as diverse as Subramanian Swamy, George Fernandes and even Prime Minister Narendra Modi, then a “humble pracharak” of the RSS.

The chapter “Swamy on the Run” recounts details of the then Jana Sangh MP’s surprise appearance in Rajya Sabha on August 10, 1976 and his trips to Gujarat in disguise. Kapoor writes that Swamy, her brother-in-law, used at stay at the residence of Makarand Desai, a minister, when he visited the state.

Kapoor writes: “The RSS often sent a young pracharak to pick him up… and take him to Desai’s house. This humble pracharak was Narendra Modi, who would become leader of the BJP and prime minister of India four decades later.”
Apart from detailing the excesses committed during the Emergency, including the muzzling of media and the activities of Indira’s son Sanjay Gandhi and her coterie, Kapoor recalls her personal connection too.

On November 1, 1975, her husband Virendra Kapoor, also a journalist, was arrested under the Defense of India Rules and had to spent nine months in Tihar and Bareilly jails.
As Finance Minister Arun Jaitley states his foreword, Kapoor’s book “brings to life the events and the atmosphere of those dark nineteen months in telling and compelling detail”. 

According to Jaitley, “The book is an invaluable record of one of the darkest periods in the history of independent India.” (Courtesy : The Indian Express )

-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
15-06-2015.

Emergency Article 2   - Click Here 

Emergency Article 3   - Click Here 

Emergency Article 4   - Click Here 

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...