விவசாயிகள் தற்கொலை 26 % கூடுதலாகியிருப்பதாக, மத்திய வேளாண் துறை இணை அமைச்சர் மோகன்பாய் குந்தாரியா ஒப்புக்கொண்டுள்ளார். இதை மக்களவையில் எழுப்பப்பட்டக் கேள்விக்கு அதிகாரப்பூர்வமாக பதில் அளித்துள்ளார்.
நாடு முழுவதும் கடந்த 2014ம் ஆண்டு மட்டும் 1,109 விவசாயிகள், விவசாயம் பொய்த்துப் போய் கடன் தொல்லையால் செய்து கொண்டுள்ளனர். விவசாயிகள் தற்கொலை எண்ணிக்கை, 2013ம் ஆண்டில் 879ஆகவும், 2012ஆம் ஆண்டில் 1,046ஆகவும் இருந்தது.
கடந்த ஆண்டு மட்டும் மகாராஷ்டிரத்தில் அதிகபட்சமாக 986 விவசாயிகளும், தெலங்கானாவில் 84 பேரும், ஜார்கண்டில் 29 பேரும் தற்கொலை செய்து கொண்டனர். தமிழகத்தில் மட்டும் விவசாயிகளின் தற்கொலை எண்ணிக்கை 13பேரைத் தாண்டியுள்ளது. 2012ம் ஆண்டுமுதல் தமிழகத்தில் விவசாயிகள் தற்கொலை என்ற துக்கநிகழ்வு நடைபெறத் துவங்கியது.
இப்படியான இந்தத் துக்கம் மிகுந்த தொடர்கதைக்கு முடிவு எப்போது வருமோ?
-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
07-06-2015.
No comments:
Post a Comment