--------------------------------------
இன்று ஜிஆர்டின் பிறந்த நாள்.
சிறந்த கல்வியாளர், துணைவேந்தர், சிறந்த நிர்வாகி, நாடாளுமன்ற உறுப்பினர், மேலவை உறுப்பினர் பன்முகத்தன்மை கொண்டவர். கோவை பி.எஸ்.ஜி கல்வி நிறுவனத்தை தொடங்கியவர். சென்னை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும் பொறுப்பு வகித்தவர். நாடாளுமன்ற உறுப்பினராக பொள்ளாச்சி தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர். தமிழக சட்ட மேலவை உறுப்பினராக பல ஆண்டுகள் பொறுப்பு வகித்தவர்.
தமிழில் முதன்முதலாக அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துக்கான மாத இதழை ‘*கலைக்கதிர்*’ எனும் பெயரில் தொடங்கியவர்.
சென்னை பல்கலைக்கழக துணைவேந்தராக இருந்தபோதும், சென்னை மேலவை உறுப்பினராக இருந்தபோதும் எனக்கு பழக்கம். அவருடன் அண்ணா சதுக்கத்திலிருந்து காமராஜர் சாலையில் கலங்கரை விளக்கம் வரை நடைபயிற்சி மேற்கொள்ளும் போது பல்வேறு விஷயங்களை விவதிப்பார்.
KSRadhakrishnan
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
20-02-2021
No comments:
Post a Comment