————————————————————
சீனாவின் ஆதிக்கம் நாளுக்கு நாள் இலங்கையிலும் இந்தியாவின் தீபகற்ப கடற்பரப்பிலும் மறைமுகமாக அதிகரித்து வருவது நல்லதல்ல. கொழும்பு துறைமுகம் கிழக்கு முனையம் ஹம்பந்தொட்டா துறைமுகம் 99 ஆண்டுகள் குத்தகையில் இந்தியப் பெருங்கடலில் சீனாவினுடைய போர் கப்பல்கள், வியாபாரக் கப்பல்கள், பட்டு வழி சாலை, ராமேஸ்வரத்திலிருந்து 50 கிமீ தொலைவில் சீனாவுக்கு காற்றாலை அமைக்க உரிமங்கள், இலங்கை வடக்கு கிழக்கு மாகாணங்களில் சீன நிறுவனங்களுக்கு நிலங்கள், நேற்றைக்கு வந்த செய்தி கிளிநொச்சி மாவட்டம் பாளையத்தில் பல ஏக்கர் நிலங்களை சீன நிறுவனத்துக்கு சிங்கள அரசு வழங்கியுள்ளது. யாழ்பாணம் கரைநகர் பகுதியில் பல ஏக்கர்கள் நிலங்களில் கடற்படை தளம் அமைக்கவும், அதுபோல நீலாங்காட்டுப் பகுதியிலும் தமிழர்களுடைய நிலங்கள் அபகரிக்கப்படுகின்றன. இது எங்கே போய் முடியுமோ…?
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தை நிறுவ, இந்தியா-இலங்கை-ஜப்பான் ஆகிய மூன்று நாடுகளும் இணைந்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. ஆனால், திடீரென அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக ராஜபக்சே சகோதரர்கள் தலைமையிலான அரசு தெரிவித்தது. இந்தியாவும் ஜப்பானும் கடும் அதிருப்தியை வெளியிட்டும், தனது முடிவை மாற்றிக்கொள்ள இலங்கை தயாரில்லை.
இந்நிலையிலேயே, இந்தியா வசம் இருக்கும் திரிகோணமலை எரிபொருள் எண்ணெய் சேமிப்பு கிடங்குகளையும் திரும்பப் பெறுவதென இலங்கை அரசு புதிய முடிவு எடுத்துள்ளது.
திரிகோணமலை யார் வசம் இருக்கிறதோ அவர்களே தெற்காசியாவை கட்டுக்குள் வைத்திருக்க முடியும் என்கிற அளவுக்கு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடம் திரிகோணமலை. இந்த திரிகோணமலையில் 2-ஆம் உலகப் போரின் போது பயன்படுத்தப்பட்ட எரிபொருள் எண்ணெய் சேமிப்பு கிடங்குகள் ஏராளம் உள்ளன. இதில் ஒரு பகுதியை இவ்வளவு காலமும், இந்தியாதான் பயன்படுத்தி வந்தது. ஆனால், இனிமேல் அவற்றை தாங்களே வைத்துக் கொள்வோம் என்று இலங்கை கூறியிருக்கிறது.
No comments:
Post a Comment