#தமிழக_அகழாராய்ச்சி_குறித்து_வெள்ளை_அறிக்கை_வேண்டும்_என்று_வழக்கு_தாக்கல்_செய்யும்_பணிகள்_நடக்கின்றன
———————————————————
தற்போது தமிழக தொல்லியல் துறை சார்பில், தமிழகத்தில் அகழாய்வு பணிகளை மேற்கொள்ள, மத்திய தொல்லியல் ஆலோசனை வாரியக்குழு அனுமதி அளித்துள்ளது. இதனால் சிவகங்கை மாவட்டம் கீழடி, தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை, ஈரோடு மாவட்டம் கொடுமணல், கிருஷ்ணகிரி மாவட்டம் மயிலாடும்பாறை. அரியலூர் மாவட்டம் கங்கைகொண்டசோழபுரம் மற்றும் மாளீகைமேடு ஆகிய இடங்களில், இந்தாண்டு அகழாய்வு பணிகள் நடக்க இருக்கின்றன.
சமீபத்தில் உத்திரமேரூர் சாலவாக்கம் அருகே இடமச்சி கிராமம் சின்னமலையில் 300 ஆண்டுகளுக்கு முற்பட்ட பெரும் கற்காலத்தை சேர்ந்த கல்வட்டங்கள், ஈமகிரியை அடையாளங்கள் கிடைத்துள்ளன. இறந்தவர்கள் நினைவு சின்னத்திற்காக இதை அடையாளப்படுத்தியிருக்கலாம் என்கிறது ஆய்வு. வேட்டையாடும் போது ஒரு சிலர் இறந்துவிட்டால் அங்கேயே உடலை புதைக்கப்பட்டிருக்கலாம் என்றும் தெரிகிறது. காட்டு விலங்குகள் அதை தோண்டி சிதைத்துவிடக்கூடாது என்று பெரிய கற்களை வைப்பார்கள் அதை கல்திட்டை என்று அழைப்பதுண்டு. இடமச்சி கிராமத்தில் 3000 ஆண்டுகளுக்கு முன்னால் மனிதர்களின் வாழ்க்கை முறையை சொல்லக்கூடிய அளவில் சில தரவுகள் கிடைத்துள்ளன.
தமிழக அகழாராய்ச்சி குறித்து வெள்ளை அறிக்கை வேண்டும் என்று வழக்கு தாக்கல் செய்யும் பணிகள் நடக்கின்றன
No comments:
Post a Comment