Thursday, February 18, 2021

#உலகின்_முதல்_புதினம் #செர்வாண்டிஸின்_டான்_குவிக்ஸாட்

 #உலகின்_முதல்_புதினம்

——————————————————-
உலகில் முதன்முதலாக இலக்கியத்தில் புதினமாக வந்தது எழுதிய ஸ்பானிய மொழியில் வந்த செர்வாண்டிஸின் டான் குவிக்ஸாட்டை படைப்பாகும். இது உலகின் முதல் நாவல். மிக அருமையான படைப்பான டான் குவிக்ஸாட். டான் குவிக்ஸாட் பின்தான் ஷேக்ஸ்பியர் காலம். இந்த டான் குய்க்ஸோட்டை யாரும் இங்கு அதிகமாக கொண்டாடுவதோ, வாசிப்பதோ, அதை குறித்து விவாதமோ அதிகமாக நடப்பது இல்லை. இங்கு ஷேக்ஸ்பியர் பேசப்பட்ட அளவுக்கோ டால்ஸ்டாய், தஸ்தாயெவ்ஸ்கி போன்றவற்றை பேசப்பட்ட அளவுக்கோ செர்வாண்டிஸ் பேசப்படவில்லை. இது அற்புதமான முன்னோடியான படைப்பாகும். வேடிக்கை, கேளிக்கை, கருத்துகளைப் புரியவைக்கும் எளிய நடை கொண்டது. உலகத்தில் பல்வேறு மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டது. இங்கு சந்தியா பதிப்பகமும் வேறு ஏதோ பதிப்பகமும் தமிழில் வெளியிட்டது.

கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
16.02.2021

No comments:

Post a Comment

"OPERATION RUDRAM".

  "OPERATION RUDRAM".