Friday, February 26, 2021

#விசாரணை_கைதியின்_சிறை_நாட்களை_திரும்பி_பெற_முடியாது #மும்பை_உயர்_நீதிமன்றம்


———————————————————-
விசாரணை கைதிகளை கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டு குற்றம் நிரூபிக்கப்படாமல் விடுதலையாகும் போது சிறையில் செலவழித்த நாட்களை திரும்ப பெற இயலாது என்று மும்பை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
மஹாராஷ்டிரா மாநிலத்தின் தானே மாவட்டம் கல்யானைச் சேர்ந்த அரேப் மஜீத் என்பவர் புனித பயணம் என்று சொல்லிக்கொண்டு சிரியா சென்று பயங்கரவாதிகள் என்ற நிலையில் 2014-ல் கைது செய்யப்பட்டார். மஜீத் மீதான வழக்கு 6 ஆண்டுகளாக தொடர்கிறது. இதுவரை 50 சாட்சிகளிடம் விசாரணை நடத்தியும் அவர் மீதான குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்படவில்லை. இது குறித்து மும்பை என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையின் போது நீதிபதிகள் எஸ்.எஸ்.ஷிண்டே மற்றும் மனிஷ் பிடேல் விசாரித்து மஜித் மீது உள்ள குற்றச்சாட்டுகள் உண்மையில்லை என அவரை விடுவித்தனர். குற்றவாளி அல்ல என, முடிவுக்கு வரும் நிலையில் அவர் சிறையில் செலவழித்த நாட்களைத் திருப்பி தர இயலாது. ஒருவர் மீது, சந்தேகத்தை மட்டுமே அடிப்படையாக வைத்து நீண்ட காலம் சிறை காவலில் வைத்திருப்பது அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிரானது ஆகும். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னால் உச்சநீதிமன்றத்திலும் இதே மாதிரியான வழக்கு வந்தாக நினைவு.

கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
25.02.2021.

No comments:

Post a Comment

"OPERATION RUDRAM".

  "OPERATION RUDRAM".