Friday, February 12, 2021

#பழைய_நினைவுகள்......


———————————————————-
அரசியலில் நுழைந்த காலம் காமராஜர், நாகர்கோவில் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் டாக்டர் மத்தியாஸை எதிர்த்து போட்டியிட்ட தேர்தலில் இருந்து திரும்பிப் பார்க்கிறேன்.

பழைய ஆவணங்களை பார்த்தப்போது திருநெல்வேலி பாளையங்கோடை புனித சேவியர் கல்லூரி St. Xaiver’s ரசாயன பேராசிரியர் ஏ.சீனிவாசன் 19.11.1972 காவல்துறையால் தாக்கப்பாட்டார். இதை கண்டித்து தாக்கிய காவலர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாணவர் போராட்டங்கள் நடத்திய பழைய நினைவுகளும், அந்த போராட்டத்தில் 21.11.1972 அன்று திருநெல்வேலி மாவட்ட ஆட்சி தலைவர் ஆர்.சண்முக சிகாமணி ஐஏஎஸ் அலுவலகத்திற்கு மாணவ பேரணியாக சென்றபோது காவல்துறை எங்கள் மீது கடுமையாக தாக்கியது எல்லாம் இன்றும் நினைவில் உள்ளன. திருநெல்வேலி ஆட்சித்தலைவர் அலுவலகம் உள்ள வண்ணாரப்பேட்டை சுலோச்சனா முதலியார் பாலத்தில் ஒதுங்கியிருந்த சேலத்தை சேர்ந்த பி.காம் படித்த மாணவர் லூர்த நாதன் காவல்துறை நடத்திய தடியடியில் பாலத்திலிருந்து கீழே தாமிரபரணி நதியில் விழுந்து பலியானார். அன்றைக்கு பிரச்சினைகள் கடுமையாக இருந்தன. நெல்லை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாள
ராக குருவய்யா இருந்தார்.
(பின் விரிவான பதிவு....)

கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
10.02.2021

No comments:

Post a Comment

july 1

  Good and deep meaningful aspects…  @narendramodi @nsitharaman @PawanKalyan @EPSTamilNadu @NainarBJP @annamalai_k @BJP4TamilNad...