Wednesday, February 10, 2021

#என்_கோபாலசாமி_அய்யங்கார்

——————————————————-
தமிழகத்தைச் சேர்ந்த என்.கோபாலசாமி அய்யங்கார். அரசியல் அமைப்பு சட்டம் உருவாக்கத்திலும், காஷ்மீருக்கு சட்டப்பிரிவு 370 கீழ் சிறப்பு அந்தஸ்து பெற்று கொடுத்ததில் முக்கியப் பணியாற்றிவர்.
இன்று அவருடைய நினைவு நாள். என்.கோபாலசாமி அய்யங்கார் சென்னையில் சட்டம் பயின்றார். சென்னை மாகாண துணை ஆட்சியராக 1905 முதல் 1919 வரை பணிபுரிந்தார். இதையடுத்து கலெக்டர், உள்ளாட்சி அமைப்புகளின் தலைமைப் பதிவாளர், சென்னை மாகாண பொதுப் பணித்துறை மற்றும் வருவாய் குழு உறுப்பினராக பணியாற்றினார். சுதந்திரத்திற்கு பின் ரயில்வே, போக்குவரத்துத் துறை, பாதுகாப்புத்துறை அமைச்சராகவும் பணியாற்றினார். கடந்த, 1937 முதல் 1943 வரை ஜம்மு – காஷ்மீர் ராஜ்யத்தின் பிரதமராக பொறுப்பு வகித்தார்.

இவருடைய புதல்வர் ஜி.பார்த்தசாரதி அமெரிக்காவில் இந்தியாவின் தூதராக இருந்தார். டில்லியில் ஜே.என்.யு பல்கலைக்கழகம் உருவாக்கத்திலும் அதன் முதல் துணைவேந்தராகவும் இருந்தவர். இலங்கை தமிழர் பிரச்சினையில் ஜி.பார்த்தசாரதி இந்திரா காந்திக்கு ஆலோசகராக இலங்கைக்கு சென்றது உண்டு, வேலுப்பிள்ளை பிரபாகரனோடும் நெடுமாறனோடும் 1983 மற்றும் 1984 கால கட்டங்களில் சில சமயங்களில் அவரை சந்தித்து இலங்கைப் பிரச்சினை குறித்து விரிவாக பேசியது உண்டு. ஜி.பார்த்தசாரதியுடன் எனக்கு நல்ல அறிமுகம் இருந்தது.
1953 பிப்ரவரி 10-ம் தேதி தன் 70-வது வயதில் இயற்கை எய்தினார். திவான் பகதூர் என்.கோபாலசாமி அய்யங்கார் நினைவு தினம் இன்று.
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
10.02.2021

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...