Friday, February 19, 2021

#தமிழறிஞர்_எஸ்_வையாபுரிப்பிள்ளை


———————————————————-
நெல்லை ம.தி.தா. இந்துக் கல்லூரியிலும் பிறகு சென்னை கிறிஸ்துவக் கல்லூரியிலும் படித்துப் பட்டம் பெற்றவர்.
சென்னை மாகாணத்திலேயே தமிழில் மிக அதிக மதிப்பெண்கள் பெற்று "சேதுபதி தங்க மெடல் " பெற்ற பெருமைக்குரியவர்.
வழக்குரைஞராகப் பணியாற்றி வந்த காலத்தில், இவர் எழுதி, வெளிவந்த பல கட்டுரைகளும் இலக்கிய ஆய்வுகளும் அவரை தமிழ் அறிஞர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் முன்னிலையில் பேசப்பட வைத்தன.
பழந்தமிழ் இலக்கியங்களைத் தேடித் தேடிச் சென்று அதை தொகுத்து, ஆய்வு செய்து வெளியிட்ட பெருமையுடையவர்.

ஓலைச் சுவடிகளைப் பதிப்பித்ததுடன் நிற்காமல் அந்த இலக்கியங்களுக்குக் கால நிர்ணயம் செய்ததிலும் வையாபுரிப் பிள்ளைக்குப் பெரும் பங்கு உண்டு.
வையாபுரிப்பிள்ளை 1926 ஆம் ஆண்டு சென்னைப் பல்கலைக்கழகம் உருவாக்கி வந்த தமிழ் அகராதியின் பதிப்பாசிரியர் பொறுப்பேற்றவர்.
சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் ஆராய்ச்சித்துறைத் தலைவராக இருந்தவர். பல ஆராய்ச்சியாளர்களை உருவாக்கியவர்.
இவரின் நிறைவேறாத ஆசை ஒன்று இருக்குமானால் அது கம்பராமாயணத்துக்கு உரை எழுதிப் பதிப்பிக்க வேண்டும் என்பதே.
வையாபுரியார் சுமார் மூவாயிரம் அரிய நூல்களை தமது உடமையாக கொண்டிருந்தார். இந்த அரிய நூல்கள் அனைத்தையும் தன்னுடைய இறுதிக் காலத்தில் கல்கத்தாவில் இருந்த தேசிய நூலகத்துக்கு நன்கொடையாக அளித்துவிட்டார்.
சிறந்த ஆராய்ச்சியாளரும், பதிப்பாளரும், சிந்தனையாளருமான ச. வையாபுரிப்பிள்ளை அவர்களின் நினைவு தினம் இன்று (எஸ். வையாபுரிப்பிள்ளை, அக்டோபர் 12, 1891 - பிப்ரவரி 17, 1956)

No comments:

Post a Comment

"OPERATION RUDRAM".

  "OPERATION RUDRAM".