Friday, November 11, 2022

*இராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று 31 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறையில் இருந்த ஆறு பேரையும் விடுதலை செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு இருக்கிறது. மகிழ்ச்சி*.

*இராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று 31 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறையில் இருந்த ஆறு பேரையும் விடுதலை செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு இருக்கிறது. மகிழ்ச்சி*.
 
*இராஜீவ் காந்தி படுகொலை நிகழ்ந்த பிறகு 1991இல்வேலூர் சிறையில் குற்றவாளிகள் அடைக்கப்பட்டனர். பழ.நெடுமாறன், வழக்கறிஞர் எஸ்.துரைசாமி, புதுக்கோட்டை பாவாணன்,கொளத்தூர் மணி, நான் உட்பட என சிலர் அப்போது வாரம் ஒருமுறை அவர்களைப் பார்க்க வேலூர் சிறைக்குச் சென்றதுண்டு*. 

*இது தொடர்பாக பேசவே பலர் அப்போது பயந்த காலம் அது*.
 *இராஜீவ் கொலைக்கான மையப் புள்ளியாக விடுதலைப்புலிகளை கருத்தில் கொண்டு அப்போது விசாரணை நடத்தப்பட்டது என்பதும், முறையான, சரியான விசாரணை நடத்தப்படவி்ல்லை* *என்பதும் எனது கருத்தாக இருந்தது. அதைப் பற்றி ‘இராஜீவ் கொலை வழக்கில் விடை தெரியாத வினாக்கள்? ’ என்ற தலைப்பில் நான் ஒரு கட்டுரையை எழுதினேன். அன்றைய காலத்தில் எனது கட்டுரைகளை பிரசுரம் செய்யும் வெளியிட மறுத்து விட்டது. அது  19991இறுதியில் சாணக்கியன் என்ற இதழில் பிரசுரமானது. அதில் ராஜீவ் படுகொலை விசாரணை தொடர்பான முப்பதுக்கும் மேற்பட்ட வினாக்களை நான் எழுப்பியிருந்தேன்*. *அந்த கட்டுரையில் பதில் தெரியா பல விடயங்களை குறிப்பிட்டிருந்தேன்*. *அந்த படுகொலை தொடர்பான  புலன்விசாரணை சரியாக,நியாயமானதாக நடத்தப்பட்டு இருக்க வேண்டும் என்பதும் எனது கருத்தாக இருந்தது*.
  
*இராஜீவ் கொடுங்கொலையை யாரும் நியாயப்படுத்த முடியாது. எந்த கொலைக் குற்றம் செய்த கொடியவரும் தண்டிக்கப்பட்டே தீர வேண்டும் என்று அந்த கட்டுரையில் குறிப்பிட்டிருந்தேன்*. *அதேசமயம் அந்த படுகொலை தொடர்பான விசாரணை நியாயமானதாக நடத்தப்பட்டு இருக்க வேண்டும் என்பதும் எனது கருத்தாக இருந்தது*.

*இந்த வழக்கில் 26 தமிழர்கள் கொலை குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார்கள்*. அவர்கள் மீதான வழக்கு தடாச் சட்டத்தின் கீழ் தொடுக்கப்பட்டது. சென்னை பூந்தமல்லியிலிருந்த தடா சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு கிட்டத்தட்ட நான்கு ஆண்டுக்காலம் நடைபெற்று, 1998ஆம் ஆண்டு ஜனவரி 28ஆம் தேதி 26 தமிழர்களுக்கு ஒட்டுமொத்தமாகத் தூக்குத் தண்டனை விதிக்கும் தீர்ப்பைத் தடா நீதிமன்றம் வழங்கியது. இதற்கு எதிராக இந்தியாவிலும் உலக நாடுகளிலும் உள்ள மனித உரிமை அமைப்புகள் நீதித்துறையின் படுகொலை என இதைக் கண்டித்தன.

26பேர்களில் 13 பேர் ஈழத் தமிழர்கள். 13பேர் நம்முடைய தமிழ்நாட்டுத் தமிழர்கள். இந்த வழக்கை உச்சநீதிமன்றத்திற்குத்தான் மேல்முறையீடு செய்ய முடியும் என்பது தடாச் சட்டம் சொன்னது. இந்த வழக்கை நடத்த முன்வந்து, உச்சநீதிமன்றத்தில் மூன்று நீதிபதிகளைக் கொண்ட அமர்வில் நடந்தது.

தடாச் சட்டத்தின் கீழ் இந்த வழக்குத் தொடுக்கப்பட்டதே செல்லாது என உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. இது ஒரு முக்கியமான திருப்பமாகும். சாதாரண குற்றவியல் சட்டத்தின்கீழ் தொடுக்கப்படவேண்டிய வழக்கே தவிர, கொடிய சட்டத்தின்கீழ் தொடுக்கவேண்டிய வழக்கு அல்ல என்ற அந்த தீர்ப்புதான் இன்று 6பேரின் விடுதலை வரைக்கும் அடிப்படையில் உதவியிருக்கிறது.

1999ஆம் ஆண்டு மே-11ஆம் தேதி அன்று உச்சநீதிமன்றம் அளித்தத் தீர்ப்பில் நால்வருக்குத் தூக்குத் தண்டனையும், மூவருக்கு ஆயுள் தண்டனையும் விதித்தது. 19 பேரைக் குற்றமற்றவர்கள் என விடுதலை செய்தது.

மரண தண்டனை விதிக்கப்பட்ட நால்வரின் சார்பில் அப்போதைய ஆளுநர் பாத்திமா பீவி அவர்களிடம் கருணை மனு அளிக்கப்பட்டது. ஆனால் அதை ஏற்க மறுத்து ஆளுநர் தள்ளுபடி செய்துவிட்டார். அப்போது ஆளுநரின் ஆணையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில் ஆளுநரின் கருணை மனு ஏற்க மறுத்த ஆணை செல்லாது என்ற தீர்ப்பினை வழங்கியது.

தொடர்ந்து குடியரசுத் தலைவருக்குக் கருணை மனு என நடவடிக்கைகள்…… இந்தியா முழுதும் மரண தண்டனை ஒழிப்பு இயக்கத்தை விரிவாக்கினோம். உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி வி.ஆர். கிருஷ்ணய்யர் உட்படப் பல அறிஞர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் ஆகியோர் இந்த இயக்கத்தின் மாநாடுகள், கருத்தரங்குகள் ஆகியவற்றில் பங்கேற்றார்கள். இடைவிடாத மக்கள் இயக்கத்தின் விளைவாக அன்றைய அதிமுக அமைச்சரவையிலும், இன்றைய திமுக அமைச்சரவையிலும் 7பேரின் விடுதலைக்கான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஆனால், ஆளுநர்கள் இந்த தீர்மானங்களைச் கிடப்பில் போட்டனர்.

பலரும் தொடர்ந்து வற்புறுத்தியதின் விளைவாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்குத் தொடுத்தது. அதன் விளைவாக உச்சநீதிமன்றம் முதலில் ஒருவரையும்; இப்போது, இன்று 6பேரையும் விடுதலை செய்துள்ளது.
https://sivasinnapodi.wordpress.com/2013/12/10/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF/

#KSRPost
11-11-2022.

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...