உலக அளவில் நச்சுக் கக்கும் கரியமில வாயு வெளிவந்து கொண்டு இருக்கிறது என்பது பாதுகாப்பற்ற விஷயம்.
ஐ.நா.வின் 27 ஆவது பருவநிலை மாநாடு எகிப்தில் நடைபெற்று வருகிறது. கடந்த 2019 -இல் உலக அளவில் 4900 டன் கரியமில வாயு வெளி வந்துள்ளது என்ற ஆபத்தான நிலை. இவ்வாறு தொடர்ந்து வெளிவந்தால் பூமியின் வெப்பநிலை அதிகமாகிவிடும். சீனாவில் 31 சதவீதம், அமெரிக்காவில் 14 சதவீதம், ஐரோப்பாவில் 8 சதவீதம், இந்தியா 7 சதவீதம் என்ற அளவில் இந்த வாயு வெளியேறியுள்ளது. நிலக்கரி, கச்சா எண்ணெய் ஆகியவற்றைப் பயன்படுத்தும்போது இந்த ஆபத்தான எரிவாயு அதிகமாக வெளியேறுகின்றது. இத்தோடு மீத்தேன் வெளியேற்றத்தைப் பற்றியும் மாநாட்டில் விவாதிக்கப்பட்டது. குறிப்பாக அமெரிக்கா, ஜெர்மனி, இத்தாலி, ரஷ்யா போன்ற நாடுகளின் விண்வெளி சோதனையால் மீத்தேன் வாயு வெளியாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
No comments:
Post a Comment