Sunday, November 27, 2022

பட்டிகாடா பட்டணமா

#*பட்டிகாடா பட்டணமா* 

 அடி என்னடி ராக்கமமா......... கலகலப்பான கிட் பாடல்
—————————————

கல்லூரியில் படித்த காலம். காமராஜர் தலைமையில் (ஸ்தாபன) மாணவர் காங்கிரஸில் நிர்வாகியாக இருந்த நாட்கள்.

மதுரை மேல கோபுர வாசல் தெருவில்,சென்ட்ரலில்  தியேட்டரில் (இது திருவாடுதுறை ஆதினத்தின் சொந்த இடம்) 6-5-1972 இல் சித்திரை திருவிழாவின் போது நடிகர் திலகம் சிவாஜியின் பட்டிகாடா பட்டணமா வெளியிடப்பட்டது. படம் தமிழகமெங்கும் மாபெரும் வெற்றி அதிலும் மதுரையில் பெரிய வெற்றி. முதல் முப்பது நாட்கள் தியேட்டருக்கு அருகிலேயே செல்ல முடியவில்லை. தொடரந்து அரங்கு நிறைந்த காட்சிகள். முதல் ஷோவில் டிக்கெட் கிடைக்காதாவர்கள் அடுத்த ஷோக்கு அப்படியே காத்திருந்து வரிசையில் நின்று டிக்கெட் எடுத்து படம் பார்த்தார்கள். 




கதைக்களம் மதுரை வட்டாரம், எழுதியவர் மதுரையை சேர்ந்த கதை வசனகர்த்தா பாலமுருகன்.அதுவும் சோழவந்தான் பக்கம் இருப்பது போல் கதை நகரும்.சோழவந்தான் to வாடிப்பட்டி பாதையிலும், தென்கரை ஆற்று பக்கம்,திருவேடகம், மற்றும் சோழவந்தான் தோப்பு, வயல்கள், கோயில் வீதி என படத்துக்கு லொகேஷன். இயக்குனர் மாதவன், நடிகர் திலகம் உட்பட யூனிட்டில் உள்ள முக்கிய ஆட்கள் சோழவந்தானில் டி ஆர் மகாலிங்கம் அவர்கள் வீட்டிலேயே தங்கி படப்பிடிப்பில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. படம் சிம்பிள் பட்ஜெட். கருப்பு வெள்ளைதான் கலர் படம் அல்ல.



வி கே ராமசாமி, சுகுமாரி நாயகனுக்கு மாமனார், மாமியார். ஜெ செம அமர்களமான ஜோடி. கதையே அவரை மையப்படுத்திதான் செல்லும்.
 
எம்ஆர் ஆர்.வாசு (ராதாரவி அண்ணன்-காங்கிரஸ் கட்சி பேச்சாளர்), பக்கோடா காதர் துணையோடு மைனராக வந்து மனோரமாவை கலாய்க்கும் லூட்டி படத்தோடு கலந்த நகைச்சுவை. நாயகனின் அக்கா மக சுபாவும் படத்தின் முக்கிய ரோலில் வந்த படத்துக்கு சிறப்பு சேர்த்தார்கள்.

படத்தின் பாடல்கள் அனைத்துமே அனைத்து வித ரசனையிலும் இருந்தது. அடி என்னடி ராக்கமமா......... கலகலப்பான கிட் பாடல், அதுவே பின் படத்தில் சோகமாகவும் வரும். படத்தின் வெற்றி விழா பெருந்தலைவர் காமராஜர் முன்னிலையில் நடந்தது.அவருக்கு நடிகர் திலகம்  சிவாஜி அவர்கள் படத்தின் முக்கிய அம்சமாக இருந்த ஏர்கலப்பையை நினைவூட்டுவது போன்று வெள்ளி ஏர்கலப்பையை பெருந்தலைவருக்கு நினைவு பரிசாக வழங்கினார். பட்டிகாடா பட்டணமா படம் வந்து ஐம்பது வருடங்கள் ஆகிவிட்டது.

#KSR_Post
27-11-2022.

No comments:

Post a Comment

#மீனாட்சிபுரம்மதமாற்றம் 1981 #Meenakshipurammassconversion

*Meenakshipuram mass conversion had a ripple effect* Around 150 Adi Dravidar families embraced Islam at Meenakshipuram in Tirunelveli in 198...