Sunday, November 6, 2022

*சிலர் புல்லரிப்பதும்; சிலரின் இன்றைய தன்நல தமிழ்ப்பணி பற்றி புளகாங்கிதப்படுவதும் புரியவில்லையே*….!

*சிலர் புல்லரிப்பதும்; சிலரின் இன்றைய தன்நல தமிழ்ப்பணி பற்றி புளகாங்கிதப்படுவதும் புரியவில்லையே*….! தமழ் வளர்த்த சில ஆளுமைகள்.
————————————
வள்ளுவர்,சமயக்குரவர்கள் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தியார், மாணிக்கவாசகர் ஆகியோர் ஆவர். இவர்கள் சைவ சமயத்தின் தேவாரம் மற்றும் திருவாசகத்தினை எழுதிய நால்வர், ஆழ்வார்கள், சங்க புலவர்கள், கம்பர், சேக்கிழார்,வள்ளலார்,ஆறுமுகநாவலர், தாமோதரம்பிள்ளை, சதாசிவம்பிள்ளை, உ.வே.சா., ஆப்ரகாம் பண்டிதர், சுவாமி விபுலானந்தர், பாரதியார், வீரமாமுனிவர், டேனியல் பவர், லீவை போல்டிங், மைரன் உவின்சிலோ, எச்.ஆர் ஹொய்சிங்டன், ரேனியஸ், சாமுவேல் பிஸ்க் கிறீன், எல்லீஸ், துரு பாதிரியார், கால்டுவெல், சார்லஸ் கிரால், சாமுவேல் பிள்ளை, சைமன் காசிச் செட்டி, ஜான் முர்டாக், ஹெச் பவார், பர்னல், ஜி.யூ.போப், பாண்டித்துரை தேவர், உமறுப்புலவர,திரு.வி.க., வையாபுரிப்பிள்ளை, தெ.பொ.மீ., ரா.ராகவையங்கார், மு.ராகவையங்கார், டிகேசி,ரா. பி. சேதுப்பிள்ளை, ஜெகவீரபாண்டியனார், பெ. தூரன், நாமக்கல் கவிஞர், ந.மு.வேங்கடசாமி நாட்டார், அவ்வை துரைசாமி பிள்ளை, தண்டபாணி தேசிகர், பொ.வே.சோமசுந்தரனார், மு.அருணாசலம், தி.வே.கோபாலய்யர், பாரதிதாசன், கண்ணதாசன், இப்படி உள்நாட்டினருமான வெளிநாட்டினரும் என பலர்   அடங்கிய நீண்ட பட்டியல் உண்டு.தங்களுடைய வாழ்நாள் முழுமையும் பாடுபட்டு தமிழ்மொழியை வளர்த்தார்கள். இத்தகையவர்களின் கடுமையான உழைப்பை ‘அரசியல்வாதிகளில்’பலர் பிற்காலங்களில் அதிகாரகமாகவும் செல்வமாகவும் தங்களின் நலத்துக்கு அறுவடை செய்து விட்டனர். 
#KSRPost
6-11-2022.

No comments:

Post a Comment

july 1

  Good and deep meaningful aspects…  @narendramodi @nsitharaman @PawanKalyan @EPSTamilNadu @NainarBJP @annamalai_k @BJP4TamilNad...