வாரணாசியில் மகாகவி பாரதியார் வாழ்ந்த வீடான ‘சிவமடத்தில்’ பல்வேறு மேம்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது என்று வாரணாசி மாவட்ட ஆட்சியா் எஸ். ராஜலிங்கம் தெரிவித்துள்ளார்.
வாரணாசியில் உள்ள அனுமன் காட் எனும் பகுதியில் 1898- ஆம் ஆண்டு முதல் 1902 வரை பாரதியார் தனது அத்தை வீட்டில் வசித்தார். அந்த வீடு சிவமடம் என்று அழைக்கப்படுகிறது. அப்போது அவருக்கு வயது பதினாறு.
அவா் காசியில் வாழ்ந்த அந்தக் காலத்தில் பண்டித மதன் மோகன் மாளவியா, அன்னிபெசன்ட், பால கங்காதர திலகா் முதலிய அரசியல் பிரமுகர்களைச் சந்தித்தார். அவர்களுடன் பேசி, விவாதித்து, பல்வேறு விஷயங்களில் தெளிவு பெற்றார்.
தமிழ்நாட்டுக்குத் திரும்பிய பிறகும் காசியில் நடக்கும் நிகழ்வுகளை செய்தித்தாள்களின் வழியாக அவா் தொடா்ந்து அறிந்து கொண்டார்.
அந்த வீட்டில் தற்போது தற்போது அந்த வீட்டில் பாரதியின் அத்தையின் பேரனும் தங்கை மகனுமான கே.வி.கிருஷ்ணன் வாழ்ந்து வருகிறார். பாரதியைப் பற்றிய அறிமுக நூலை ஹிந்தி, ஆங்கிலம், தமிழ் ஆகிய மொழிகளில் கே.வி. கிருஷ்ணன் எழுதியுள்ளார்.
பாரதியார் அந்த வீட்டில் வாழ்ந்த நினைவைப் போற்றும் வகையில் அந்த வீட்டின் ஓா் அறையில் பாரதியின் மார்பளவு வெண்கலச் சிலை வைக்கப்படும். அது மட்டுமல்ல, பாரதியாரின் படைப்புகள் அடங்கிய நூலகத்தை அமைக்கும் பணிகளும் விரைவாக நடைபெறுகின்றன.
பாரதியாரின் இலக்கியப் படைப்புகள் டிஜிட்டல் முறையில் நவீனமாக்கப்பட்டு காட்சிக்கு வைக்கப்படும். சுதந்திரப் போராட்டத்தில் அவருடைய பங்கேற்பு, சமூக அவலங்களையும், அந்தக் காலகட்டத்தில் இருந்த சமுதாயப் பிரச்னைகளையும் அவா் எவ்விதம் தனது கவிதைகள் மூலம் அணுகினார் போன்ற முக்கியத் தகவல்கள் அனைத்தும் டிஜிட்டல் முறையில் நவீனமாக்கப்படும். அவை இளம்தலைமுறையினருக்குச் சென்றடையும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்படும் என்று தெரிய வருகிறது.
No comments:
Post a Comment