Tuesday, June 11, 2024

சென்னை பெசன்ட்நகர் பீச்

#சென்னைபெசன்ட்நகர்
பீச் ரோட்டில்
மாலையில்,1975 -76 காலங்களில்  இருந்து நான் வாக்கிங் போய்க் கொண்டிருந்தவன். ராம் விலாஸ் பஸ்வான், வி. ‘தம்பி’ பிரபா என பலரை அழைத்து கொண்டு சென்றதுண்டு.

அப்போதெல்லாம் அதிகம் கூட்டம் இருக்காது பீச்ரோடு மிகச் சுத்தமாகப் பராமரிக்கப்பட்டு நடைபாதைகள் பளிச்சென்று இருக்கும். ஒரு 20பேர் அன்று நடந்தால் அதிகம்.

2000 வரை இந்நிலை தொடர்ந்து இருந்து வந்துள்ளதைப் பார்த்துள்ளேன். இன்று அதே பெசன்ட் நகர் பீச் ரோட்டில் நடக்கவே முடியாத அளவிற்கு எங்கு பார்த்தாலும் தலைகள். நகர இயலாத அளவுக்கு மக்கள் வெள்ளம். பராமரிப்பு இல்லாத நிலை. ஆங்காங்கே குப்பைக் கூளங்கள். சுற்றுச்சூழல் மாசு, கடைகள என மிகப் பரிதாபமாக இருக்கிறது!

இப்படியே போனால் சென்னை  என்னவாகும் என்று தெரியவில்லை! எங்கே போகிறது சென்னை!!

#பெசன்ட்நகர்பீச்
#besantnagarbeach

#ksrpost
#கேஎஸ்ஆர்போஸ்ட்
11-6-2024.

No comments:

Post a Comment

"OPERATION RUDRAM".

  "OPERATION RUDRAM".