#அரசியல் என்பது ஆட்சி,அதிகாரம், தன் குடும்பம் வளம் செய்து கொள்வது என்றாகி சுய நலன்கள்…..
அரசியல் வியாபாரம் வாரிசுகளின் தொடர்ச்சி , பழம் தின்று கொட்டை போட்டவர்கள் ஆடுகளம் என்றாகி விட்டது.
கொள்கைக்காக அரசியலுக்கு வந்தவனுக்கும் பிழைப்புக்காக அரசியலுக்கு வந்தவனுக்கும் என்ன வித்தியாசம்...?
பொது வாழ்வில் கொள்கைக்கு வந்தவன் தன் வீட்டை தூங்க வைத்து ஊரை வாழ வைப்பான்...!
அரசியல் சந்தை வியாபாரத்துக்கு வந்தவன் ஊரை அழித்து வீட்டை சுகபோகமாக பல தலைமுறைக்கு வாழ வைப்பான்...!
கோட்பாடு ரீதியான உள்ளார்ந்த அம்சங்களை புரிந்து கொள்ளாமல் எந்த அரசியல் தெளிவையும் சமுதாயத்திற்கு வழங்க முடியாது.
இங்கே பல்வேறு குழப்பங்களை விளைவித்து இருக்கிறார்கள்.
இந்த களத்தில் உழைத்தும் எங்கு நாம் தவிர்க்கப் படுகிறோமோ
அங்கு நாம் சில நேரங்கள்
காப்பாற்றப் படுகிறோம்..
இயற்கையின் படைப்பில்..!!!
ஒழுக்கம் இல்லாத ஒரு ஒழுக்கத்தால் நமது மனம் சித்திரவதை செய்யப்பட்டு பெரிதும் நிபந்தனைக்குட்பட்டுள்ளது.
சமூகத்தின் ஒழுக்கம் என்பது ஒழுக்கக்கேடாகும்.
ஏனென்றால் சமூகம் வன்முறை, பேராசை, போட்டி, லட்சியம் மற்றும் பலவற்றை ஏற்றுக்கொண்டு ஊக்குவிக்கிறது,
எல்லாம் முடிந்துவிட்டதாக
எல்லாம் கடந்துவிட்டதாக
எல்லாம் தொலைந்துவிட்டதாக ரணத்தில் வெறுமனே இருத்தலில்
எதையெதையோக் கலைத்துப்போட்டு
அடுக்க நிர்பந்திக்கும் பணி தளங்கள்
இந்த வாழ்வுக்குத்தான் எத்தனை அக்கறை நம்மீது. பிடிமானம் வருகிறது நம் நோக்கி…..
#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
11-6-2024.
No comments:
Post a Comment