#*மனதில் பதிந்த கடந்த இரண்டு நாட்கள்*.
————————————
நேற்று முன்நாள் நள்ளிரவு 1981 மே 31 இல் 12 மணிக்கு மேல் இதே நேரத்தின் போது தான் சிங்களக் காடையர்கள் இலங்கை யாழ்ப்பாணத்தின் உலகளாவிய ஆவணங்களைக் கொண்ட தமிழரின் நூலகத்தை தீ வைத்துக் கொளுத்தினார்கள்.
அதேபோல் நேற்று இதே நாள். 1973 இல் டெல்லிக்குப் பயணம் செய்த விமானத்தில் கம்யூனிஸ்ட் தலைவர்,55 வயதில் பாலதண்டாயுதமும்(இவர் கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதியிலிருந்து இந்திய நாடாளுமன்ற 5வது மக்களவைக்கு உறுப்பினராகத்தேர்ந்தெடுக்கப்பட்டார்) மோகன் குமாரமங்கலமும் (புதுச்சேரி மக்களவை உறுப்பினராக 1971-1972 ஆண்டுகளில் தேர்ந்தெடுக்கப்பட்டார். பொதுவுடமை கட்சியிலிருந்து விலகிக்கொண்டார். 1967 ல் தமிழகத்தில் திமுக வெற்றி பெற்றதை அடுத்து இவர் காங்கிரசு கட்சியில் இணைந்தார். 1971 லிருந்து 1973 வரை மத்திய அரசில் இரும்பு மற்றும் சுரங்கத்துறை அமைச்சராக பதவி வகித்தார்.) விமான விபத்தில் மோசமான முறையில் இறந்தார்கள். நடிகை ராணி சந்திரா கூட அவ்விமான விபத்தில் தான் இறந்து போனார். ராஜ்யசபா (காங்கிரஸ்) உறுப்பினர் தேவகி கோபிதாஸ் மற்றும் இந்தியர் தொழிலதிபர் ரகுநாத ரெட்டி கக்கானி இந்த விபத்தில் இறந்தனர்.1973 மே 31 அன்று இந்தியன் ஏர்லைன்சு விமானம் 440 விமான விபத்தில் அந்த விபத்தில் உயிரிழக்காமல் தப்பி எஞ்சி வாழ்ந்தது எங்கள் சிவகாசி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் வி ஜெயலட்சுமி அவர்கள் தான். அவர் ஒரு வகையில் எனக்கு உறவினரும் கூட. செங்கமல நாச்சியார்புரத்தைச் சேர்ந்தவர். அந்த விபத்தில் விமானம் முழுவதுமாக தரையில் விழுந்து எரிந்து சேதம் அடைந்தது. மிக மோசமான இரண்டு சம்பவங்கள். இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் 440, 31 மே 1973 அன்று பாலம் விமான நிலையத்தை (இப்போது இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் ) நெருங்கும் போது விபத்துக்குள்ளானது, அதில் இருந்த 65 பயணிகள் மற்றும் பணியாளர்களில் 48 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த விமானத்திற்கு சாரங்கா என்ற போயிங் 737 ரக விமானம் 440 டில்லி பாலம் சர்வதேச விமான நிலையத்தை தூசி மற்றும் மழைப் புயலுடன் நெருங்கியபோது , NDB அணுகலின் போது விமானம் உயர் அழுத்த கம்பிகளைத் தாக்கியது . விமானம் நொறுங்கி தீப்பிடித்தது. 440 விமானத்தில் இருந்த 65 பயணிகள் மற்றும் பணியாளர்களில் 48 பேர் விபத்தில் உயிரிழந்தனர். உயிர் பிழைத்தவர்கள் விமானத்தின் முன்பக்கத்தில் இருந்ததாக மீட்பு அதிகாரிகள் தெரிவித்தனர், உயிர் பிழைத்த ஒருவர் பின்வரிசையில் அமர்ந்திருந்தனர். உயிர் பிழைத்தவர்களில் மூன்று அமெரிக்கர்களும் இரண்டு ஜப்பானியர்களும் அடங்குவர். இறந்தவர்களில் நான்கு அமெரிக்கர்கள், மூன்று பிரிட்டன்கள் மற்றும் யேமனைச் சேர்ந்த ஒரு பெண் ஆகியோர் அடங்குவர். குறிப்பிடத்தக்க உயிர் பிழைத்தவர்களில் பான் சிங் பௌரா நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் பிரபல பத்திரிகையாளரும் எழுத்தாளருமான வி.கே. மாதவன் குட்டி ஆகியோர் அடங்குவர்
இப்படியாக இந்த இரண்டு நாளும் அதாவது நேற்று இன்றும் இவ்விரு சம்பவங்களும் மனதில் மறு ஞாபகமாக வந்து என்னைத் துயரில் வாட்டியது.
#இந்தியன்ஏர்லைன்ஸ்விமானம்440 விபத்து1973
#மோகன்குமாரமங்கலம்
#பாலதண்டாயுதம்
#cpi
#யாழ்நூலகம்எரிப்பு
#ksrpost
#கேஎஸ்ஆர்போஸ்ட்
2-6-2024.
No comments:
Post a Comment