———————————
நாட்டு விடுதலைக்காவும்.தமிழுக்காகவும்
பாடுகள் பட்ட ஆங்கிலேயரை எதிர்த்ததால் தனது வீடு சொத்து யாவையும் இழந்தவர்.
காரைக்குடியில் கம்பன் கழகம் தொடங்கியவர்,
காரைக்குடியில் தமிழ்த்தாயின் திருக்கோயில் அமைய செய்தவர்.
இந்திய தேசிய காங்கிரசில் இருந்து கருத்துவேறுபாட்டின் காரணமாக வெளியேறிய இராஜாஜி தன்னைப் பின்பற்றுவோரின் துணையுடன் சுதந்திராக் கட்சி என்னும் அரசியல் கட்சியைத் தொடங்கினார். சா. கணேசன் அக்கட்சியைத் தொடங்கியவர்களில் ஒருவர் ஆவார். இக்கட்சியின் சார்பில் 1962 ஆம் ஆண்டு தேர்தலில் காரைக்குடி சட்டமன்றத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு 1967 வரை தமிழகச் சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றினார். 1968 முதல் 1974 வரை தமிழகச் சட்ட மேலவை உறுப்பினராகப் பணியாற்றினார்.
தியாகி கம்பனடிப்பொடி சா கணேசன் அவர்களின் 116வது பிறந்தநாள் இன்று.
#karaikudiசா_கணேசன்
#ksrpost
#கேஎஸ்ஆர்போஸட்
6-6-2024.
No comments:
Post a Comment