Saturday, June 15, 2024

#*தமிழகத்தில் எட்டு இடங்களில் அகழாய்வு*

#*தமிழகத்தில் எட்டு இடங்களில் அகழாய்வு* 
————————————
தமிழகத்தில் எட்டு இடங்களில் அகழாய்வு செய்ய தமிழக தொல்லியல்த் துறை கடந்த காலங்களில் மத்திய அரசிடம் அனுமதி கேட்டிருந்தது!! அச்சமயத்தில் மத்திய தொல்லியல்த் துறை இயக்குனரின் இட மாற்றத்தால் தொல்லியல்த் துறையின் ஆலோசனை வாரியம் ஆன காபாவின் கூட்டம் நடப்பதில் தாமதம் ஏற்பட்டது. அதனால் கடந்த ஜனவரியில் கிடைக்க வேண்டிய அனுமதி இந்த வாரம் தான் கிடைத்துள்ளது. 

இதை அடுத்து ஐந்து கோடிருபாய் செலவில்  தமிழகத்தின் பல இடங்களில் அடுத்தடுத்த வாரங்களில் அகழாய்வைத் துவக்க தமிழகத் தொல்லியல் துறை திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே அகழாய்வு செய்த இடங்களான சிவகங்கை மாவட்டம் மதுரை கீழடி விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக்கோட்டை திருவண்ணாமலை மாவட்டம் கீழ்மண்டி ஆகிய இடங்களில் இந்தாண்டும்  அகழாய்வுப் பணி துவங்க இருக்கிறது.

மேலும் புதிதாக தென்காசி மாவட்டம் திருமலாபுரம், திருப்பூர் மாவட்டம் கொங்கல் நகரம், கடலூர் மாவட்டம் மருங்கூர், கிருஷ்ணகிரி மாவட்டம் சென்னனூர், ஆகிய இடங்களிலும் அகழாய்வு செய்யப்பட உள்ளது அதற்கான முதல் கட்ட வேலைகளில் அந்தந்தப் பகுதி அகழாய்வு இயக்குனர்கள் ஈடுபட்டுள்ளார்கள் என்கிற ஒரு மகிழ்ச்சியான செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். 

 தமிழ் நாட்டின் சிறப்பையும் காலகாலமாக வாழ்ந்த மக்களுடைய வாழ்வின் தொன்மங்களையும் பண்பாடு மற்றும் உற்பத்தி உறவுகளையும்  அடையாளங்களையும் அகழாய்வு செய்வதன் மூலம் பல வகையான கடந்த கால உண்மைகள் வெளிப்படும் என்பதால் இத்தகைய ஆய்வுகளுக்கு அனுமதி வழங்கிய மத்திய தொல்லியல்த் துறை.

#தமிழகத்தில்அகழாய்வு

#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
15-6-2024.

No comments:

Post a Comment

*Life is a series of natural and spontaneous changes*.

*Life is a series of natural and spontaneous changes*. Don't resist them that only creates sorrow. Let reality be reality. Let things fl...