————————————
தெலுங்கு பேசியே நடிக்கும் மந்திரி சாத்தூர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் என்னைத் திமுகவிலிருந்து ஒழித்துக்கட்டி விட்டதாக நினைத்து எப்போதும் சந்தோஷப்பட்டு கொள்கிறார். தொடர்ந்து நாயக்கர்கள் அரசியலை ஒழித்து வரும் , தெலுங்கு பேசி நடிக்கும் கே. கே. எஸ். ஆர்.ராமச்சந்திரன்
இன்று விருதுநகரில் நாடாளுமன்ற தேர்தலில் நின்ற விஜயகாந்த் மகனை ஜெயிக்க விடாமல் இடையே புகுந்து அவர் பல கோளாறுகள் செய்ததாகச் சொல்லப்படுகிறது. இந்த தகவல் உண்மையா?
இவர் என்னவோ விருதுநகர
தொகுதிக்கே தன்னை மகாராஜா என்று நினைத்துக் கொள்கிறார் போலும். எம்ஜிஆர் ஆட்சி காலத்தில் அமைச்சராக இருந்தபோதே இவரது இலட்சணம் ஊர் அறிந்தது தான்.
கூட்டுறவு நெசவாளர் சார்ந்த பல பிரச்சினைகள் மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த போதும் ஏகப்பட்ட பிரச்சனை!
இதை கலைஞர் முதல்வராக 1989 சட்டமன்றத்தில் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் குற்றம் சாட்டி பேசியது உண்டு.
அதேபோல் 2006 இல் திமுகவில் மக்கள் நலத்துறை அமைச்சராக இருந்தபோது ஏதோ மாற்று சிறுநீரக அறுவை சிகிச்சையின் போது ஏற்பட்ட தவறுக்கு பிரபல ரெட் மார்கெட் (The Red market by Scot Carney)ஆங்கில புத்தகத்தில் இவரைக் குறிப்பிட்டு செய்தி வந்த போது மனித ஐநா மனித உரிமை கமிஷனில் இவர் மீது குற்றசாட்டை இது விடையமாக சுமத்த இருந்த போது இவருக்கு உதவி செய்திருக்கிறேன். அந்த நன்றி இவருக்கு என் மீது கிடையாது. அப்போது திமுக சார்பில் TESO மாநாடு பணிகளில் இருந்தேன்.
இந்த உண்மைகள் எல்லாம் அமைச்சர் தங்கம் தென்னரசிற்கு நன்றாகவே தெரியும். இந்த கே கே எஸ் எஸ் ஆர் . ராமசந்திரன் என்னை ஒழித்து விட்டதாக மகிழ்ச்சிவேறு அடைந்து
கொள்கிறார். நாங்களும் பருத்தி விவசாயி தான். மூட்டை மூட்டையாக பருத்தித் தாட்டுகளை லாரிகளில் ஏற்றி குடோண்களுக்கு அனுப்பியவர்கள்தான்.
1967 70 களில் ஜின்னிங் ஃபேக்டரி பார்த்தவர்கள்தான்.
யாரையும் எதையும் செய்யலாம் என்று நினைக்கும் கே கே எஸ் எஸ் ஆர் ராமசந்திரன் நீங்கள்
முடிசூடா மன்னனாக கூட இருந்து விட்டுப் போங்கள். எங்களை போன்று மற்றவர்களை சாதாரணமாக எடை போட்டு விடாமல் வாழ வேண்டும். குறிப்பாக எங்களையெல்லாம் ஈசியாக எடை போட்டு விட வேண்டாம்.
இவர் செய்வதெல்லாம் முதல்வர் மு க ஸ்டாலினுக்கு தெரிவதில்லை அல்லது யாரும் எடுத்துச் சொல்வதும் இல்லை என்பதுதான் இன்றைய நிலைமை. இவர் முதல்வரை ஏமாற்றிக் கொண்டு திரிகிறார் . யார் யாரையோ கவிழ்த்து போட்டுக் கொண்டு உண்மைகளை ஒழித்து கட்டிவிட்டு நடக்கும்
இவரது ராஜாங்கம் எத்தனை நாள் நீடிக்கிறது என்று பார்க்கத்தான் வேண்டும். இவரையும் முதல்வர் ஸ்டாலின் நம்புகிறார்.
என் கதை முடிந்து விட்டது !என்று என் காது படவே பலரும் பேசினார்கள்.!!
என் கதை முடியவும் இல்லை! அது முடியவும் முடியாது! ! உண்மையில் என் இயக்கம் எப்போதும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
இப்போது எனது அடுத்த கட்டப் பணியில் முழு மூச்சாக இறங்கிவிட்டேன். காலம் எதற்கும் பதில் சொல்லும்! அப்படியான வகையில் எனக்கு நேர்ந்தது எது எப்படியோ காலம் மட்டும் ஒருபோதும் என்னை ஏமாற்றியதும் இல்லை.! சில சிறுகதைகள் முடிந்து விடலாம்! தொடர்கதைகள் முடிவதில்லை!
#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
7-6-2024
.
No comments:
Post a Comment